விளிம்பு: விழிப்பும் விசாரணைகளும் ரொறொன்டோ கனடா மே 5-6 2012 1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள் 2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை ஆற்றுகைகள், திரைப்படங்கள் 3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை 4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள் மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின் 5. பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், [...]
சுபத்திரன்ரை கவிதையள் உணர்வு நிறைஞ்சவை. சாதிப்போராட்ட காலத்தில சுபத்திரனது கவிதையள் பலரை எழுச்சிப்படுத்திச்சுது. ‘சங்கானைக்கு என் வணக்கம்’ எண்ட கவிதை மிகமுக்கியமானது. காசி ஆனந்தனது கவிதையள்மாதிரி இவரின்ரை. ஆனா காசியானந்தனது கவிதையள் காலத்திலை நிக்காது. அவரது பல கவிதையளை கவிதையெண்டே என்னால இப்ப எடுக்க ஏலாது. பசுபதி வித்தியாசமாய் எழுதினவர். மக்கள் கவிஞரெண்டு சொல்லக் கூடியளவுக்கு எழுதினவர். சுபத்திரன்ரையும் பசுபதியின்ரையும் கவிதையள் பாக்க ஒண்டாயிருக்கும். ஆனா கவித்துவத்தாலை அவை தனித்தனியாவேதான் நிக்கும். புலப்பெயர்வுக் கவிதையளோடை இந்த வர்க்கப் போராட்டக் கவிதைத் தன்மையளை நாங்கள் ஒப்பிட்டுப் பாக்க ஏலும்.
சமூக அக்கறையாளனாக ஒரு விடுதலைப் போராளியாக தன்னுடைய இளமைக்காலத்திலிருந்து செயற்பட்டுவந்தவர் சண். காந்தீயத்தில் செயற்பட்டதும் சந்ததியார் தொடர்பும் மறுபக்கம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனான இணைந்த செயற்பாடுகளுமென தன்வாழ்நாள் பூராவும் ஏதோ ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர் அவர்.
உண்மையில் ஒரு படைப்பு என்பது கதையோ கவிதையோ எதுவானாலும் காலத்தின் பதிவாக இருப்பது ஒருபுறமிருக்க அவற்றின் புனைவுத் தன்மை பெறுமதி மிக்கதானதாக இருக்க வேண்டும். இங்கு அது சாத்தியப்படவில்லை. வரலாற்றின் பதிவாக இருப்பதற்கப்பால் புனைவுத்தன்மையில் தோற்றுவிடுகிறது. ஒரு வாசகனை இந்தக்கதைகள் ஒருபோதும் குழப்பவதில்லை. மறுமுனையில் தமக்காகத் தயார்படுத்தப்பட்ட தங்களுக்குரிய மொழியிலேயே கதை சொல்லப்படுவதை அவர்கள் நன்றாக விரும்புகிறார்கள். சிலாகிக்கிறார்கள்.