நூல் வெளியீடும் வரலாற்றைப் பேசுதலும்.
நூல் வெளியீடும் வரலாற்றைப் பேசுதலும்.
வெளி ரங்கராஜனாகவும் பிரபஞ்சனாகவும் அருட் தந்தை பிரிட்டோவாகவும் ராமசாமியாகவும் அ.மங்கையாகவும் லண்டனில் வசிக்கும் எனது நண்பர் பிரின்ஸ் சார்ள்ஸ் ஆகவும் பரீக்சா ஞானியாகவும் அருட்சகோதரி கிளார் ஆகவும், பேராசிரியர் ஆல்பர்ட்டாகவும் என எத்தனையோ பல சமூகப்பணி சார்ந்தவர்களாகவும் நாடகக் கலைஞர்களாகவும் பாதல் சர்க்கார் ஆளுமை உயிர் வாழ்கிறது.
மதங்களின் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் விடுதலையின் பேரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும் நீதியன் பெயரால் போதிக்கப்பட்ட ஒழுக்கங்களும்தகர்ந்து போனதைக் கண்டுகொண்டிருக்கிறோம். ஒழுக்கத்தின் பெயரால் போதிக்கப்பட்ட பாலியல் உறவும் அதன் மீதான கண்காணிப்பும் தகரும் தருணம் தான் அடுத்து நடக்கப்போவது.
இலங்கையில் சாதியமைப்புக் குறித்த பல்வேறு விதமான கருத்துக்களையும் விவாதத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறோம். கடந்த இலக்கியச் சந்திப்பு, தலித் மாநாடு மற்றும் பன்முகவெளி அரங்குகளில் இதுகுறித்து உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இலங்கையில் மறைந்து காணப்படும் சாதிப் பாகுபாடு சமூகவிலக்கு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் இயங்கு நிலைகள் குறித்து 2009இல் வெளியான சாதியின்மையா சாதிமறைப்பா என்ற நூல் குறித்த இன்னுமொரு பதிவு இது. யாழ்ப்பாணியத்தின் மேட்டுக் குடிச்சிந்தனைகள் குறித்து எழுதப்பட்டுள்ள கிருத்திகனது கட்டுரை இது. அவரது இன்னாத கூறல் எனும் தளத்திலிருந்து பெறப்பட்டு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
கற்சுறா
இலங்கையில் தோன்றிய பௌத்தம் என்பது இந்துத்துவப் பண்பாட்டு வேர்களிலிருந்து துளிர்த்ததே. இன்று கூட அதன் மரபுவழி தொடர்ச்சியாக சிங்கள மக்களின் பெயர்கள் அமைந்துள்ளதை நாம் காணலாம். ‘மித்திர ஆரியசிங்க’ எனும் பெயர் எப்படி சிங்களவர்களின் பெயராக இன்றும் நிலைத்து நிற்கிறது? மித்ர,புத்ர, இந்ர, அநுர போன்ற பெயர்கள் இருக்குவேதத்தில் வரும் பெயர்கள் ஆகும். எனவேதான் நான் கூறுகின்றேன் சிங்கள மக்களில் சாதியம் தோன்றுவதற்கும் இந்துமத பண்பாடுகளே பிரதான காரணமாக இருந்துவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் பேணிவரும் பண்பாடு காலாச்சாரங்கள் பௌத்தம் சார்ந்து நிலவுவதால் அங்கு சாதிரீயான பாகுபாடுகள் எதிர்காலங்களில் அற்றுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
http://www.thayagam.info/Editorial/Yarlpanam.pdf
முள்ளிவாய்க்காலில் தமிழர்களினது போராட்டம் பிழைத்தது என்பது யாழ்ப்பாணிகளுக்கு மட்டும் பாடமல்ல ஒடுக்கப்படுகின்ற இலங்கை சிறுபான்மை இனங்களிற்கும் சிங்கள பெரும்பான்மைக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏன் ஆசிய கண்டத்திற்கும் அதற்கும் அப்பால் உலகம் பரந்த ஒடுக்கபட்ட மக்களிற்கான ஒரு பாடம்.
மிக நீண்டகாலங்களில்லை. நாம் வாழ்ந்த தெருக்களை அடைத்து நின்ற அண்மைய காலங்கள் தான். யாரும் கற்பனை செய்யக் கஸ்டமானது என்று சொல்ல முடியாத ஒரு சாதாரணநிகழ்வாகித்தானிருந்து. இப்போது உங்கள் எல்லோருக்கும் வெட்கம் வந்திருக்க வேண்டும். நாம் வசித்த காலங்களிலும் தெருக்களிலும் எத்தனை வீடுகள் வதைமுகாமாகி இருந்தது என்று.
ஈழத்திலிருந்து வெளிவரும் புலிகளது பத்திரிகைகளாக இருந்தாலும் சரி கொழும்பிலிருந்து வரும் தமிழ்ப் பத்திரிகைகளாக இருந்தாலும் சரி புலம் பெயர்ந்த பத்திரிகைகள் என்றாலும் சரி தமிழர்களது வீரம் பற்றியும் தமிழினம் பற்றிய ஒரு மாயைத்தனமான மிகைப்படுத்திய கற்பனைக்கூடான எழுத்துமுறையை வளர்த்துக்கொண்டு வந்தது. தமிழர்கள் மீதான புனிதக் கதையாடலாக அது கொண்டிருந்தது. அது ஒவ்வொரு தமிழ் மனங்களிலும் மெல்ல மெல்ல இனவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டு வந்ததை யாரும் கணக்கிடவில்லை.
புதியபாதை அழைக்கிறது தோழா. நாம் புரட்சி வெல்ல உழைத்திடணும் தோழா. பகுத்தறிவை வளர்த்திடணும் தோழா. மூடப் பழமைகளைக் களைந்திடணும் தோழா. என்று மக்களை த் தோழமையுடன் வழிநடத்திய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தம்மிடம் நம்பிவந்த தமது இயக்கப் போராளிகளை எப்படியெல்லாம் கொலை செய்தது என்பதை வரலாறு மறந்து விடவில்லை.