January 11th, 2012
சுபத்திரன்ரை கவிதையள் உணர்வு நிறைஞ்சவை. சாதிப்போராட்ட காலத்தில சுபத்திரனது கவிதையள் பலரை எழுச்சிப்படுத்திச்சுது. ‘சங்கானைக்கு என் வணக்கம்’ எண்ட கவிதை மிகமுக்கியமானது. காசி ஆனந்தனது கவிதையள்மாதிரி இவரின்ரை. ஆனா காசியானந்தனது கவிதையள் காலத்திலை நிக்காது. அவரது பல கவிதையளை கவிதையெண்டே என்னால இப்ப எடுக்க ஏலாது. பசுபதி வித்தியாசமாய் எழுதினவர். மக்கள் கவிஞரெண்டு சொல்லக் கூடியளவுக்கு எழுதினவர். சுபத்திரன்ரையும் பசுபதியின்ரையும் கவிதையள் பாக்க ஒண்டாயிருக்கும். ஆனா கவித்துவத்தாலை அவை தனித்தனியாவேதான் நிக்கும். புலப்பெயர்வுக் கவிதையளோடை இந்த வர்க்கப் போராட்டக் கவிதைத் தன்மையளை நாங்கள் ஒப்பிட்டுப் பாக்க ஏலும்.
Posted in
எதிர்க்கதையாடல்
October 31st, 2011
உண்மையில் ஒரு படைப்பு என்பது கதையோ கவிதையோ எதுவானாலும் காலத்தின் பதிவாக இருப்பது ஒருபுறமிருக்க அவற்றின் புனைவுத் தன்மை பெறுமதி மிக்கதானதாக இருக்க வேண்டும். இங்கு அது சாத்தியப்படவில்லை. வரலாற்றின் பதிவாக இருப்பதற்கப்பால் புனைவுத்தன்மையில் தோற்றுவிடுகிறது. ஒரு வாசகனை இந்தக்கதைகள் ஒருபோதும் குழப்பவதில்லை. மறுமுனையில் தமக்காகத் தயார்படுத்தப்பட்ட தங்களுக்குரிய மொழியிலேயே கதை சொல்லப்படுவதை அவர்கள் நன்றாக விரும்புகிறார்கள். சிலாகிக்கிறார்கள்.
Posted in
எதிர்க்கதையாடல்
July 8th, 2011
எஸ்பொ அவர்களிடம் கனடாவந்திருந்தபோது இடைமறிக்கப்பட்டுக் கேட்கப்பட்ட கேள்விகள் இரண்டு. அவரிடம் பேச நிறைய இருந்தும் அண்மைக்கால முரண்பாடுகள் குறித்து முக்கியத்தவப்படுத்தலிலேயே நாம் அக்கறை கொண்டோம். எஸ்பொவின் இடைமறிப்பு போதமையாக இருந்தது எனவும் கடுமையாக இருந்தது எனவும் எஸ்பொ அவர்களின் பதில்களில் இருக்கும் தனிப்பட்ட தாக்குதல்களை வெட்டியிருக்கலாம் எனவும் நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அதற்குமப்பால் எஸ்பொ அவர்களது பதில்கள் குறித்துச் சங்கடப்படுவோர் அவர் இப்படிச் சொல்லியிருக்கமாட்டார் கற்சுறா பொய் சொல்கிறான் எனச் சொல்பவர்களும் உள்ளார்கள். அவரது உரையாடல் வீடியோ வடிவிலேயே உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அனைவரது பார்வைக்கும் முன்வைக்கிறேன். அவசர அவசரமாக வெளியிடுவதற்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நமது தொழிநுட்ப அறிவின் பற்றாக்குறைதான் காரணம். இதற்கிடையில் நண்பர் முருகபூபதியிடமிருந்து மறு- பதில் ஒன்று வந்திருக்கிறது. அதனை இங்கு பிரசுரிக்கிறோம்.
Posted in
எதிர்க்கதையாடல்
June 25th, 2011
காலம் நடாத்திய நனவிடை தோய்தல் நிகழ்வில் எஸ்.பொ. வைக் கண்டதும் கட்டாயம் சந்திக்க வேணும் போன் நம்பரைத் தா என்றார். தொடர்பை ஏற்படுத்தி 24 யூன் காலை கூட்டிவந்து இரண்டு மணிநேரம் பேசினோம். சர்வதேச எழுத்தாளர் மாநாடு, ஈழத்துக் கவிதைச் சூழல், இயல் விருது மற்றும் எஸ்.பொ நாவல்கள் குறித்துப் பேசினோம். இடையில் அவரிடம் கேட்க வேண்டியிருந்த இரண்டு கடும் கேள்விகளும் அதற்குமட்டுக்குமான பதில்களும்.
-கற்சுறா
Posted in
எதிர்க்கதையாடல்
October 9th, 2010
இலங்கை அரசு மேற்கொள்ளும் புலிகளின் அழிப்பு என்பது தமிழ் மக்கள் மீதான அழிப்பல்ல. இந்த யுத்தத்தை விரும்பித் தொடங்கியவர்கள் புலிகளே என்றும் மக்களை மாட்டுமந்தைகள் சாய்ப்பது போல் தம்முடன் சாய்த்துக் கொண்டு போகிறவர்கள் புலிகள் தான் என்றும் இந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை விட புலிகள் தான் தொடர்ந்தும் கோரமாக அழித்து வருகிறார்கள் என்றும் யுத்தம் நடந்த காலங்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். தமிழ்த் தேசியவாதிகளும் புலிகளின் உத்தியோகத்தர்களும் சொல்வது போல் தமிழ் மக்களும் புலிகளும் ஒன்றல்ல. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று மிகவும் இறுக்கமாகச் சொல்லியிருந்தோம்.
Posted in
எதிர்க்கதையாடல்
October 7th, 2010
ஈழவிடுதலைப் போரில் சாட்சியங்களற்றுப் போன தருணங்களில் கிடைத்த இரண்டு கவிதைகள். தமயந்தியும் பானுபாரதியும் எழுதிய இரண்டு கவிதைகள்.
Posted in
எதிர்க்கதையாடல்
September 6th, 2010
இறுதி யுத்தகாலங்களில் தமது கழிவிரக்கங்களை வெளிக்கொண்டுவர தமிழ்நாட்டில் தோன்றிய தேசியவெறிக்கு ஈடுகொடுக்க கடைநிலை எழுத்துக்களை பிரசுரித்தார்கள் அவர்கள். அதேபோல சினிமாக்காரர்களான பாரதிராஜா சீமான் போன்றவர்கள் தமது ஆகக்குறைந்தளவு ஈழம்பற்றிய தெளிவுகூட இல்லாது தமது அரசியற்பிரவேசங்களுக்காக ஈழவிடுதலை குறித்துப் பேசினார்கள். தமக்கான குறைந்தளவு தேவைகளுக்காகக்கூட ஈழவிடுதலைபற்றி பேசவேண்டியிருந்தது அவர்களுக்கு. மறுபக்கம் இதில் முக்கியமான விடையம் என்னவென்றால் எதையும் விமர்சனத்தூடாகப் பார்க்கும் நோக்கைக் கொண்டிருந்த பல அறிவுசீவிகளும் கைவிட்டார்கள்.
Posted in
எதிர்க்கதையாடல்
August 20th, 2010
ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.” ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” என புலிப்பால் குடித்து ஆறுவயதில் தமிழ்த் [...]
Posted in
எதிர்க்கதையாடல்