Matrathu » எதிர்க்கதையாடல்

இடைமறிப்பு – தேவகாந்தன்
தேவகாந்தனுடன் உரையாடிய இந்த இடைமறிப்பு 2006 காலப்பகுதியில் மற்றது இதழ் -2 இல் வெளிவந்தது.

உயிர்ப் பயணம், விதி, கனவுச்சிறை (ஐந்து பாகம்) நிலாச் சமுத்திரம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்ற நாவல்களையும் எழுதாத சரித்திரங்கள், திசைகள்,என்ற இரண்டு குறுநாவல் தொகுப்புக்களையும், நெருப்பு, இன்னொரு பக்கம் காலக்கனா எனும் சிறுகதைத் தொகுப்புக்களையும் மற்றும் ஒரு விடுதலைப் போராளி என்ற உரைவீச்சையும் கதாகாலம் என்ற மகாபாரதத்தின் மறுவாசிப்பையும் எழுதியுள்ள தேவகாந்தன் மற்றய ஈழத்தின் இலக்கிய எழுத்தாளர்கள் போல் பேசப்பட்டவர்  இல்லை. அதற்கு ஈழத்து இலக்கியச் சூழலுக்கு ஏதோ ஒரு விசேட காரணம் இருப்பதாகவே  எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது. சதாகாலமும் நிறைந்த வாசித்தல் எழுதுதல், நிறைந்த குடி, நிறைந்த புகைப்பிடிப்புப் பழக்கமுள்ள ஒருவர் அவர்.கடந்தகாலங்களில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தவர். தற்போது கனடாவில் வாழ்ந்துவருகிறார். தீவிர இலக்கிய ஈடுபாடுகொண்ட அவரிடம் கடந்தகால தற்கால இலக்கிய செயற்பாடுகள் குறித்தும் அதனுள் ஓடிவிளையாடும் அரசியல் பெருச்சாளி குறித்தும் கேட்டபோது தன்னுடைய அனுபவத்தினூடாக நிறையவே பேசினார்.  அந்தப் பேச்சுக்களில்  ஒவ்வொரு வரிகளிலும் இன்னும் இன்னும் கேள்விகளே தொடர்கின்றன. அந்த முரண்பாடுகளுடன் இன்னும் ஏதாவது பக்கங்களில் தேவகாந்தனுடன்   உரையாட முடியும். தேவகாந்தனுக்கும்  அதுவே விருப்பமும்.

கற்சுறா: உங்களது எழுத்தியக்கம் ஆரம்பமான காலங்கள் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

தேவகாந்தன்: சாவகச்சேரி றிபேக் கல்லூரியில் நான் அட்வான்ஸ்ட் லெவல் பாஸ் பண்ணின வருசம், அப்பதான் நான் நினைக்கிறன் பல்க லைக் கழகங்களில விகிதாசார அடிப்படையிலதான் பிரவேசிக்கேலும் எண்ட சட்டச் செயற்பாடு உறுதியாய் நடைமுறைக்கு  வாற நேர மெண்டு, அதாலை கூடுதலான தமிழ் மாணவருக்கு கூடுதலான புள்ளிகள் தேவைப்பட்டுது. அதால அந்த வருஷம் பல்கலைக்கழகத்துக்குப் போற வாய்ப்பு எனக்குக் கிடைக்கேல்லை. திரும்ப சோதினை  எடுத்து பாஸ்பண்ணி அடுத்த வருசம் போயிருக்கலாம்தான். அப்பிடித் தான் செய்யச்சொல்லி தெரிஞ்சாக்களும் சொந்தக்காறரும் சிநேகிதர்மாரும் சொல்லிச்சினம்.ஆனா அப்பிடிச் செய்யிறதுக்கான மனநிலை வரேல்லை. அது ஒரு வீழ்ச்சியாய்ப் போச்சு. மனமொடிஞ்சு போச்சு. படிக்கிற காலத்திலையும் சோதினைக்காய்ப் படிக்கிற குணம் என் னிட்டை இருக்கேல்லை. அரசாங்க வேலையைவிடவும் வேற கூடுதலான கனவுகளோட படிப்பும், அதில்லாத வாசிப்புகளோடையும்தான் நான் அப்பவும் இருந்திருக்கிறன்.  கனவு எண்டுறது எதிர்காலத்தில எப்படி இருக்கவேணும், நிறைய சங்க, நவீன தமிழிலக்கியங்களை வாசிக்கவேணும், எழுதவேணும், ஒரு விரிவுரையாளராய் பேராசிரியராய் வரவேணும் எண்டதுகளைத்தான் நான் குறிப்பிடுறன். இந்தக் கனவுகளுக்கு ஆதாரமாய்ச் சில பேராசிரியர் விரிவுரையாளரின்ரை அறிமுகமும் இருந்ததைச் சொல்லலாம். அட்வான்ஸ்ட் லெவல் படிக்கேக்குள்ளையே வாஸிற்றியிலை படிச்ச நண்பர்களோட போய்  கலாநிதி கைலாசபதியை  நான் சந்திச்சிருக்கிறன். சு.வித்தியானந்தன்ரை ‘தமிழர் சால்பு’ படிச்ச கையோடை, அவரின்ரை இராவணன் நாடகம் யாழ்ப்பாணத்தில போட்டிச்சினம். அதையும் பாக்கக் கிடைச்சுது. அதையொட்டின ஒருநாளிலை சு.வித்தியானந்தனையும் சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. எனக்கு பல்கலைக் கழகத்தில படிச்ச, படிச்சுக் கொண்டிருந்த கனபேர்  நண்பர்களாயும் இருந்தினம். இந்தக் காரணங்களால எனக்கு அந்தமாதிரிக் கனவுகளும் ஆசையும். தமிழ் மொழியிலைதான் ஓனர்ஸ் செய்ய  நான் நினைச்சிருந்தது. அதாலை சமஸ்கிருதத்தை அட்வான்ஸ்ட் லெவலில ஒரு பாடமாய் நான் படிச்சன். மொழிவாரியாய் தமிழ்ப் படிப்புக்கு சமஸ்கிருதம் கொஞ்சம் உதவியாய் இருக்குமெண்டது அப்ப என்ரை நினைப்பு.

பல்கலைக்கழகத்துக்கு எடுபடாமல் போனவுடனை, என்ரை தீவிரமான வாசிப்புப் பழக்கத்தாலை இயல்பா வந்து எழுத்துத் துறையைத்தான் என்ரை மனம் நாடிச்சிது.அப்ப நான் எழுதத் தொடங்கேல்லை எண்டாலும் நல்ல வாசகனாய் இருந்திருக்கிறன். பள்ளிக்கூடத்தில படிக்கிறபோதே படிப்புக்குச் சம்பந்தமில்லாத நிறைய நாவல்களும் சிறுகதைகளும் சிறுபத்திரிகைகளும்தானே  வாசிச்சுக் கொண்டு திரிஞ்சிருக்கிறன். அப்ப எழுத்து நாட்டமாய் இருந்ததால நான் போகவேண்டியிருந்தது பத்திரிகைத் துறையாய்த்தான் இருந்தது. அந்தநேரம் யாழ்ப்பாணம் ‘ஈழநாடு’ பத்திரிகைக்கு உதவி ஆசிரியர் எடுக்கினமெண்டு கேள்விப்பட்டு நானும் விண்ணப்பம் குடுத்தன். தெரிவும் செய்யப்பட்டன். அது ஒரு முக்கியமான திசைவழி மாற்றம் எனக்கு.

நான் ‘ஈழநாடு’ போன நேரத்தில அ.செ.முருகானந்தன், ஊர்க்குருவி எண்ட புனை பெயரில எழுதின  பாலசுப்பிரமணியன் போன்ற முதுபெரும் எழுத்தாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தினம். அங்க போன பிறகு நிறையக் கவிஞர்கள் இ.அம்பிகைபாகன் ச.அம்பிகைபாகன், மற்றது இ.நாகராஜன், ச.பஞ்சாட்சரம் போன்றவர் களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.அந்த நேரத்தில ‘ஈழ நாடு வாரமலரை பொறுப்பெடுத்திருந்தது சசிபாரதி என்ற நண்பர். நான் போன நேரம் ஈழநாடு துவங்கின 10வது ஆண்டுவிழாவைப் பெரிய அளவிலை நடத்த ஏற்பாடும் நடந்துகொண்டிருந்தது. நாவல், நாடகம், சிறுகதை, கவிதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு படைப்புகளைக் கையளிக்க, வேறை காரணங்களுக்காய் நிறைய வடமாகாணத்து எழுத்தாளரும் கவிஞரும் அலுவலகத்துக்கு வந்துகொண்டும் போய்க்கொண்டுமாயிருந்தினம். அண்மையில காலஞ்சென்ற செம்பியன்செல்வன், மற்றும் செங்கையாழியான், செ.கதிர்காமநாதன் போன்றவர்கள் அக்காலகட்டத்திலை எனக்கு அறிமுகமானவர்கள்தான். சமகால ஈழ இலக்கியத்தின்ரை அகலம் தெரிய நான் திகைச்சுப்போனன். கவனிக்கவேணும். நான் அகலமெண் டுதான் குறிப்பிட்டிருக்கிறன். ஆழமான இலக்கிய முயற்சிகள் ஓரளவுக்கே இருந்திருப்பினும், அது நூற்றுக்குத் தொண்ணூறு வீதமும் வடமாகாணத்துக்கு வெளியிலை நடந்ததாய்த்தான் நான் அப்பவே கருதியிருந்தன். இதுவொண்டும் அரசியல் சார்ந்த விசயமில்லை. வாழ்வியல் சார்ந்த விசயம்தான். இதைப்பற்றிச் சந்தர்ப்பம் வந்தால் பிறகு விரிவாய்ப் பாப்பம்.

துவங்கின விசயத்துக்கு வாறன். அதுவரைக்கும் எனக்காக எனக்குள்ளை எழுதிக்கொண்டிருந்த நான் கொஞ்சம் வெளியால எழுதத் துவங்கினன். அப்ப சிறுகதைதான் எனக்கு வாய்ப்பான உருவமா வந்தது. முதல் சிறுகதையும் எழுதியாச்சு. அதுவும் நான் தினசரி ஈழநாடு அலுவலகத்துக்குப் போய் வந்து கொண்டிருக்கேக்கை நான் வழியிலை அவதானிச்ச ஒரு சம்பவத்தை மூலமாய்க் கொண்ட துதான். இப்ப எனக்குள்ளை ஒரு தயக்கம். நான் ஈழநாட்டில வேலை செய்யிறன். என்ரை சிறுகதையை ஈழநாடு பத்திரிகையிலயே கொடுத்தாப் போடுவினம். ஆனா எனக்கு அது விருப்பம் இல்லை. நான் வேலை செய்யிற பத்திரிகை எண்டதால எனது சிறுகதை தகுதி குறைவாய் இருந்தாக் கூட போடப்படக்கூடிய வாய்ப்பு வரும். அதுக்காக, வாரம் வாரம் கண்டியில இருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘செய்தி’ எண்ட பத்திரிகைக்கு அனுப்பினன். அதில வெளிவந்த என்ரை முதல் சிறுகதைதான் ‘குருடர்கள்.’

கற்சுறா:அந்தக் காலகட்டத்திலை சுமாராய் எத்தனை சிறுகதைகள் எழுதியிருப்பீர்கள்?

தேவகாந்தன்: ‘குருடர்க’ளுக்கு நல்ல பாராட்டு இருந்தது. தொடர்ந்து எழுத உற்சாகம் வந்தது. பிறகு ‘சிந்தாமணி’, ‘மல்லிகை’ மற்றும் ‘ஈழநாடு வாரமலர்;’ போன்றவற்றிலயும் எழுதினன். எண்டாலும் பெரிசாய் எழுதிக் குவிச்சிடேல்லை. சுமாராய் ஒரு இருபத்தைஞ்சு சிறுகதையள் எழுதியிருப்பன். சுமார் இருபத்தைஞ்சு வருசத்திலை சுமாராய் இருபத்தைஞ்சு சிறுகதையள் பெரிய தொகையில்லைத்தானே? எண்டா லும் அதுக்குள்ளையே சில நல்ல சிறுகதையள் இருக்கு. இப்ப அதிலை ஒண்டுகூட என்னிட்டை இல்லை. அதையெல்லாம் தேடியெடுத்துத் தொகுப்பாய்க் கொண்டுவாற ஒரு எண்ணமிருக்கு இப்ப. பாக்கலாம்.

கற்சுறா:எழுதத் துவங்கின காலத்திலையே வருசத்துக்கு ஒரு சிறுகதையெண்டது சரியான குறைவு. அதுக்கேதாவது பிரத்தியேகக் காரணம் இருக்கேலுமா?

தேவகாந்தன்: பிரத்தியேகக் காரணமில்லை, பொதுக்காரணம்தான் இருக்கு. என்ரை சூழலிலை எங்கையும், தமிழ்ப் பரப்பிலை வெகுவாயும் இருந்த இலக்கியத்தின்ரை கருத்தியல்கள்  குறிச்சு எனக் குள்ளை பிரச்சினை இருந்துகொண்டிருந்தது. என்னைச் சூழ இருந்த இலக்கியத்துக்கப்பாலை ஒரு சமுதாய மாற்றத்துக்கான இலக்கிய முயற்சி நடந்துகொண்டிருந்ததை நான் அவதானிச்சன். உதாரணமாய் டானியல், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன் போன்றவை அப்பத்தைய சமூகம் அடைஞ்சுகொண்டிருந்த வலியளை எழுதிக்கொண்டிருந்தினம். ஆழமற்றதாயிருந்தாலும் அதுகளிலை அர்த்தமிருந்தது. ஆழம் – அர்த்தம் எண்ட விசயத்தை படைப்பு மொழியிலை கலைத்துவம் – கரு அல்லது சமூக பிரக்ஞை எண்டு சொல்லலாம்; என நினைக்கிறன். இது ஒரு படைப்பாளிக்கு மிகமிகச் சிக்கலான ஒரு நிலைமை.

இப்ப பாருங்கோ, அர்த்தமில்லையெண்டு யாழ் இலக்கிய வட்டத்தோடையும் சேராமல், ஆழமில்லையெண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடையும் இணையாமலுமிருந்தால் ஒரு படைப் பாளி எந்த இடத்திலையும்தான் ஒரு அநாமதேயம். தொகுப்பாய் வராத எழுத்தாளர்கள் இலங்கை விமர்சகர்களாலை பேசப்பட்டிருக் கினம். இந்த இரண்டு பக்கத்திலை ஒரு பக்கத்தாலையெண்டாலும் பேசப்பட்டிருக்கினம். ஏனெண்டா அவை குழுநிலை சார்ந்தவை. ஆனால் தேவகாந்தன் பேசப்படேல்லை. ஏன்? அவன் இந்த இரண்டு பக்கத்திலை எந்த இடத்திலையும் இல்லை எண்டதுதான். இதாலை அவனுக்கொண்டுமில்லை. விமர்சகர்கள்தான் காலத்தின் கேள்வி களைச் சந்திக்கவேண்டி வரும். இது அவையின்ரை பிரச்சினை.

தானொரு தனிப் பக்கமாய்த் தனியொதுங்கிருக்கிறது ‘ஊரோடை ஒத்தோடு;’ எண்ட நீதிக்கு முரணாய் வரேல்லையோ எண்டா, வரேல்லைத்தான். எந்த அம்சத்திலை போகேலாமலிருந்துதோ அங்கதான் போகாமலிருந்தனே தவிர, போகக்கூடின அம்சத்திலை போய் இணைஞ்சன்தானே. இயல்பிலயே மார்க்சிய ஈடுபாடு கொண்டி ருந்த நான், சமூக அரசியல் காரணங்களுக்கான விசயங்களிலை சேர்ந்தியங்கினன்தானே. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்திலை ஆதரவாளனாய் மட்டுமில்லை, அதிலை ஒரு போராளியாயே இருந்தன். சித்தாந்தத்திலை நம்பிக்கையிருந்ததாலை, இடதுசாரி இயக்கத்திலை நம்பிக்கையிருந்தது. கொம்யூனிஸ்டுக் கட்சியிலை ஆதரவிருந்தது. நான் கட்சியிலை அங்கத்தவனாய் எப்பவும் இருக்கேல்லை. அங்கத்த வனாய் இருந்திருந்தாப் பிழையுமில்லை. அந்த நேரத்திலை பிழை யில்லை.

கற்சுறா: இப்ப பிழையா?

தேவகாந்தன்: நூற்றுக்கு நூறு வீதம். ஒருகாலத்திலை, நாங்கள் மார்க்சீ யத்தைப் படிக்க ஆரம்பிச்ச காலத்திலையெண்டு வையுங்கோவன், இலங்கை அரசியல் பிரச்சினையை ஒரு இடதுசாரி அரசாங்கத் தாலைதான் தீர்த்துவைக்க ஏலுமெண்டு நாங்கள் மனசார நம்பினம். இன ஐக்கியம், ஒரு நாடு, சோசலிச சமுதாயமெல்லாம் எங்கடை கனவுகளாயிருந்தது. மே தினத்துக்கு லொறி லொறியாய் யாழ்ப்பா ணத்திலையிருந்து கொழும்பு போய் சிங்களச் சகோதரர்களோடை ஊர்வலங்களிலை கலந்துகொண்டது அந்தக் கனவுகளிலை நம்பிக் கையை வளத்துவிட்டுது. ஆனா…இண்டைக்கு…? அந்த நம்பிக்கை யெல்லாமே தகர்ந்துபோச்சு. ஒரு இணைக்கப்பட இயலாத உடை வுக்கு சிங்கள – தமிழ் உறவு வந்திட்டுது. எல்லாத்துக்கும் தமிழின, சிங்கள பேரினவாத, இடதுசாரிக் கட்சிகளெண்ட காரணங்கள் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும், முதல் காரணமாய் நான் இடதுசாரித் துரோகத்தைத்தான் சொல்லுவன். 1983 யூலை கலவரக் காலத் திலைகூட இந்த உலகத் தொழிலாளரே, ஒன்றுபடுங்கள்! என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்த கொம்யூனிசவாதிகள் வாய் திறக் கேல்லை. அது எனக்குப் பெரிய ஆச்சரியம்.

ஒரு தமிழ் அரசியல்வாதி, சிங்கள அரசியல்வாதி, இடதுசாரி அரசியல்வாதி எண்டு மூண்டுபேரையும் எனக்கு முன்னாலை நிப்பாட்டி, இண்டைக்கு இந்த நாடு இப்பிடிச் சிதைஞ்சு, சிதறி, அல்லோலப்பட்டுக் கிடக்கிறதுக்கு மூலகாரணமாய் இருந்தவனெண்டு நான் நம்புற ஒரு வாதியை அடிக்கலாமெண்டு சொன்னால், கொஞ்சம் கூடத் தயங்காமல் இடதுசாரிக் கட்சி அரசியல்வாதியை அடிச்சே போடுவன்.

சிங்கள இனவாதிகளின்ரை தரப்படுத்தல் முறை காரணமாய்க் கல்வி பாதிக்கப்பட்ட நான், இடதுசாரிகளின்ரை போலித்த னத்தாலை அரசியல் துரோகத்துக்கும் ஆளானன் எண்டு சொல்ல வேணும். நெஞ்செல்லாம் வாழ்க்கை முழுதும் வலியே தொடர்ந்தது.

இந்த வலியை, எழுதித்தான் அடக்கினன். 2003ம் வருசம் வெளிவந்த என்ரை ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் பேசுறது இதைத்தான். நிகழ்வும் கற்பனையுமான அப் புனைவு நாவலின் பின்னணி முழுக்க ஒளிர்வது இந்தச் சமூக எதார்த்தம்தான். ஆயுதப் போராட்டத்தின்ரை மூலமே இஞ்சையிருந்து துவங்கிறதாய்த்தான் நான் காணுறன்.

கற்சுறா: இதுபோன்ற கருத்துக்களின் அடிநாதமாயே உங்கள் இடைக்காலப் படைப்புக்களும் இருந்ததாய்ச் சொல்ல முடியுமா?

தேவகாந்தன்: அப்பிடிச் சொல்லேலாது. எனக்குள்ளை அப்ப தெளிவின்மைதான் இருந்தது. இதை வெளிப்படையாய்ச் சொல்லுறதிலை எனக்கு வெக்கமில்லை. கலை கலைக்காகவே, கலை மக்களுக்காகவே எண்ட கோட்பாடுகளில எனக்குச் சார்பெடுக்கேலாமலிருந்தது நிஜம். ஒரு தளம்பல் இருந்துகொண்டேயிருந்தது. ஒருபக்கம் டானியல், நீர்வை பொன்னையன், இ.முருகையன் போன்றவை. மற்றப்பக்கம் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், நீலாவணன், மகாகவி போன்றவை. பின்னவை தரத்தாலை நிமிர்ந்து நிண்டினம். இதுக்காக இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதினதெல்லாம் தரமில்லா ததெண்டு நான் சொல்ல வரேல்லை. இதை திரு. எம்.வேதசகாயகுமார் கனடாக் ‘காலம்’சஞ்சிகையில எழுதினநேரம் அதுக்கு எதிர்வினை யாற்றினது ஈழத்துத் தமிழ்ச் சூழலிலை நான் ஒருதன்தான். அவை எழுதினதிலையும் தரம் இருந்தது. நீர்வை பொன்னையன்ரை ‘மேடும் பள்ளமும்’ சிறுகதைத் தொகுப்பிலை மிகஅற்புதமான சிறுகதைக ளெல்லாம் இருக்கு. ஆனாலும் ஒட்டுமொத்தமான எழுத்து ஒப்பீட்ட ளவிலை தரம் குறைவுதான். இப்பிடியொரு சார்பு நிலைச் சிக்கல் இருந்ததாலை, என்ரை எழுத்துக்கள் பெரும்பாலும் ஒரு மௌடீ கத்தோடேயே வெளிவந்ததாய்ச் சொல்லவேணும். பின்னாலை வந்த என்ரை படைப்புக்கள் இலக்கியத்தில தரத்தை முன்வைக்கும் எழுத்துக் களாய்த்தான் இருந்திருக்கு.

1981ம் ஆண்டு ரண்டாம் தடவையாய் ஈழநாடு எரிக்கப்படு றதுக்கு முந்தி நான் சொந்தக் காரணங்களுக்காக பத்திரிகை நிறுவனத்திலிருந்து விலகியிட்டன். விலகிப்போய் விவசாயம் செய்து கொண்டு இருந்தன். உடையார்கட்டிலை காடு வெட்டினதெல்லாம் அப்பதான். அது ஒருகாலம். தனிமனித அனுபவங்களுக்கான காலம்.

ஈழநாட்டில் இருந்த காலம் மிக முக்கியமானது. ஏனெண்டா,என்ரை படைப்புக்கள்  அச்சுருவிலயாச்சும் வந்தது இந்தக் காலத்திலதான். 1967ம் ஆண்டு ஈழநாட்டில சேர்ந்தனான். 68ம் ஆண்டு என்ரை முதல் சிறுகதை வந்தது. 1984ம் ஆண்டு தமிழ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின்னர்தான்; கூடுதலாய் எழுதவும் வாசிக் கவும் வாய்ப்புக் கிடைச்சுது. தினமணிக் கதிர், கல்கி, கணையாழி போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலும், கதைசொல்லி, கல்வெட்டுப் பேசுகிறது, சுந்தர சுகன், நிழல், சதங்கை போன்ற சிற்றிதழ்களிலும் பரவலாய் எழுதினன். அப்பிடி எழுதின சிறுகதையள் மூண்டு தொகுப் பாய் வந்திருக்கு. முதலாவது ‘நெருப்பு’, ரண்டாவது‘ இன்னொரு பக்கம்’, மூண்டாவது ‘காலக்கனா’.

கற்சுறா: மல்லிகையில் எழுதியதாகக் குறிப்பிட்டீர்கள். மல்லிகையின் ஆசிரியரான டொமினிக் ஜீவாவும்  ஒரு இடதுசாரிப் பாரம்பரியத்திற்கூடாக தனது வேலைத் திட்டத் தைப் பகிர்ந்துகொள்பவர். மல்லிகையுடனோ அல்லது டொமினிக் ஜீவாவுடனோ சேர்ந்தியங்கிய சந்தர்ப்பங்கள் ஏதாவது உண்டா?

தேவகாந்தன்: இல்லை. அதற்குரியதாய் நடைமுறை அமையேல்லை. ஆனால் ஓரளவுக்கு இடதுசாரிப் பத்திரிகை எண்ட வகையில ஒரு ஆதரவு இருந்தது. அப்பவே ரஷ்ய சார்பு, சீன சார்பு எண்ட பெரிய பிளவு இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளை வந்திட்டுது. நான் அப்ப தீவிர ஆதரவாளனாய் இருந்தது சீனசார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியோடதான். அதாலை மல்லிகை ஜீவாவோடு நெருங்கிப் பழகிற வாய்ப்பு இல்லாமல் போச்சு. அவர் ரஷ்ய சார்பு. எனக்கு டானியலோட இருந்த உறவு ஜீவாவோட இல்லை. டானியல் சீனச் சார்பு   கொம்யூனிஸ்டுகட்சி.

கற்சுறா: ட்றிபேக் கல்லூரியில் அட்வான்ஸ்ட் லெவல் படித்தும் பல்கலைக்கழகம் போக முடியாமல் போனதற்கு தரப்ப டுத்தல்தான் காரணம் என்று கூறியிருந்தீர்கள். அந்த நேரத்தில் தரப்படுத்தல் முறை அமுல்படுத்தப்பட்டபோது உங்கள் உணர்வு எப்படியிருந்தது? இப்போது அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

தேவகாந்தன்: அந்த நேரத்தில மாணவனாய் இருந்து தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட முதல் கட்டத்தில, எனக்கு ஒரு அபரிமிதமான வெறுப்பு அதன்மீது இருந்ததுதான். நான் பாதிக்கப்பட்ட காரணத் தாலையும் அது ஏற்பட்டிருக்கலாம். இதை ஊக்குவித்ததுக்கு வேறை காரணமும் இருக்கு.

தரப்படுத்தல் எண்டது அந்த நேரத்துத் தமிழ்க் கட்சிக ளாலையும் வரவேற்கப்படேல்லை. அதுக்கு எதிராய்த்தான் இருந்தினம். அதுக்காகவே நான் தரப்படுத்தலை எதிர்த்ததாய்ச் சொல்லேலாது. சுதந்திரன் வாசகனாய் இருந்த காலத்தைவிட, தேசாபிமானியின் ரையும், தொழிலாளியின்ரையும் வாசகத் தாகத்தோடைதான் நான் கனகாலம் இருந்திருக்கிறன். அதாலை என்ரை பார்வை பெரிசாய் வழி தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. தரப்படுத்தல் எண்டது சமூக அக்கறை சேர்ந்த விசயம். அது அரசியல் காரணத்தோடை வந்த தைத்தான் நான் எதிர்க்கிறன். சிங்கள பேரினவாதிகள் எப்பவுமே இப்பிடித்தான். தனிச் சிங்களச் சட்டத்துக்கும் தரப்படுத்தலுக்கும் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியேல்லை.

இந்தியாவிலை நான் இருந்த காலத்திலைதான் வி.பி.சிங் பிரதமராய் இருக்கேக்குள்ளை மண்டல் கமிசன் அறிக்கையை சட்டரீதியாய் நடைமுறைப்படுத்த நடவடிக்கையள் எடுக்கப்பட்டது. இந்தியாவே கொதிச்செழுந்திட்டுது. மண்டல் கமிசன் அறிக்கை சமூக அக்கறையின் மேலானது. சிங்கள அரசாங்கத்தின்ரை தரப்படுத் தல் இனத்துவேசம் காரணமானது. அதாலை இரண்டும் ஒப்பில்லை.

தரப்படுத்தலின்ரை நியாயம் நியாயமின்மை எண்டதை அதன் நோக்கத்தை வைச்சுத்தான் பாக்கவேணும். பின்தங்கின ஒரு பிரதேசம் அல்லது ஒரு சமூகம் அல்லது ஒரு இனம் முன்னேறுற துக்கான ஒரு வாய்ப்பாயிருக்க இந்தத் தரப்படுத்தல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அதை நியாயம் எண்டுசொல்ல எந்த இடத்திலையும் எனக்குத் தயக்கமில்லை. அந்த நேரத்திலை விபரம் அதிகம் தெரியாத வயதானபடியால் அதிகமான எதிர்ப்பு அல்லது அதிகமான வெறுப்பெண்டு இருந்திருந்தாலும், இப்ப கூட அந்தச்செயற்பாட்டில சமூக நியாயம் இருக்கிற தாய்ச் சொல்ல என்னாலை ஏலாமல்தான் இருக்கு. அந்த நேரத்திலை தமிழ் மாணவர்க ளுக்கிருந்ததைவிட, சிங்கள மக்களுக்கான பல்கலைக் கழகங்கள் அதிகமாய் இருந்தது. வித்தியோதயா, வித்தியாலங்கார போன்றவை சிங்கள மாணவர்களுக்கானவை. ஆனால் பெரதெனியா மட்டும்தான் இரண்டினங்களுக்கும் பொதுவானதாய் இருந்தது.   இப்படியிருக்க, கூடியளவு பல்கலைக்கழக இடங்கள் சிங்கள மாணவர்களுக்குப் பறிபோனது, அதாலை தரப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டதெண்டு எங்கடை இடதுசாரித் தோழர்கள் சொன்னதை நான் நம்பேல்லை.

கற்சுறா: தரப்படுத்தல் முறை தமிழ் சிங்கள மாணவர்களுக் கிடையிலான இனப்பிரிவின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதாகச் சொல்கிறீர்கள். உண்மையில் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தரப்படுத்தல் முறை பெரும்பாலான பின்தங்கிய மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு நன்மை பெறவைத்த விடயம் தானே. யாழ்ப்பாணத்தைத் தாண்டி  அநேக மாணவர்களுக்கு தரப்படுத்தல் முறை பயனளித்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? அதை எப்படி நிராகரிப்பது? யாழ் மாவட்ட மாணவர்கள் தமது கல்விக்காலம் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் படித்துவிட்டு பல்கலைக்கழக பரீட்சையைமட்டும் பின்தங்கிய பிரதேசத்தில் வந்து எழுதி அந்த ஒரு குறைந்த பட்ச உரிமையையும்தட்டிப்பறிப்பதை அறிந்திருக்கிறீர்களா?

தேவகாந்தன்: தரப்படுத்தல் முறை வந்தாப்பிறகுதான் இவைக்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைச்சதெண்டு சொல்ல முடியாது.  யாழ் பல்கலைக் கழகம் முதலிலை உருவாச்சுது. பிறகு மட்டக்களப்பு பல்கலைக் கழகம். இப்ப கடைசியாய் வவுனியாவிலை ஒண்டு. இந்தப் பல்கலைக் கழகங்கள் வந்தாப்பிறகுதான் பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் கிடைச்சதாய் நான் சொல்லுவன். இதை முதல்லேயே அரசாங்கம் செய்திருக்கலாம். தமிழ்ப் பகுதி மாணவர்களுக்கு தமிழ்ப் பகுதியிலையும், சிங்கள

மாணவர்களுக்கு சிங்களப் பகுதியிலையும் பல்கலைக் கழகங்களை உருவாக்கிற திட்டம்  அரசாங்கத்துக்கு நிச்சயமாய் இருந்தது. அதை நிறைவேற்றுறதை விட்டிட்டு ஒரு பகுதியினுடைய படிப்பு வசதியைக் குறைப்பதனூடாய்த்தான் அரசாங்கத்தாலை இதைச் செய்ய முடிஞ்சதெண்டதை என்னாலை எப்பவுமே  ஒப்புக்கொள்ள ஏலாது.

இந்த விசயம் – நீங்கள் சொன்ன வேறு பிரதேசங்களிலை வடபகுதி மாணவர்கள் வந்து பரீட்சையெழுதி அந்தப் பிரதேச மாணவரின்ரை பல்கலைக் கழகப் பிரவேசத்தைப் பாதிக்கிற விசயம் – நான் முந்தியே அறிஞ்சதுதான். யாழ்ப்பாணத்திலை சித்தியடையாமல் போற சிலபேர் இப்பிடிச் செய்திருக்கினம்தான். இப்பிடி எங்கை நடக்காது? ஒரு ஒழுங்கின்மையின்ரை அடையா ளமிது. இது எங்கையும்தான் ஏற்படலாம். பஸ் ஏறுவதற்கு நிக்கிற கியூவிலை ஒராள் வந்து இடிச்சுத் துளைச்சுக்கொண்டு நிக்கிறேல்லையே, அதுமாதிரி இது.

மற்ற விசயம், இது நடந்து இப்ப கால் நூற்றாண்டுக்கு மேலை ஆகுது. மண்டல் கமிசன் விசயமெல்லாம் சுமாராய் ஒரு பத்தாண்டுகளுக்கு முந்தினது. அதையும் இதையும் ஒப்பிடுகிற திலையும் கால வித்தியாசம் ஒரு பெரிய தாக்கமாய் வந்து நிண்டு இடைஞ்சல் செய்யும். இன்னுமொண்டு. தரப்படுத்தல், யாழ் நூலக எரிப்புக்கும் முற்பட்டது. 1983 கலவரத்துக்கும் முற்பட்டது. இண்டைய நிலைமைக்கு வேறைவேறை மிகமுக்கியமான பிரச்சினைகளெல்லாம் வந்து முன்னாலை நிண்டுகொண்டிருக்கு. யுத்தம் ஒரு மகாபிரச்சினை. இன அழிப்பின் உச்சகட்டம். தரப்ப டுத்தலெண்டது ஒருகாலத்திய இனத்துவேசத்தின் அடையாளம் அவ்வளவுதான்.

கற்சுறா: ஈழத்து இலக்கியப் பிரதிகளில் கவிதை நீண்ட வளர்ச்சிப் போக்கினை எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது? தற்போது போர்க்காலக் கவிதைகள் -புலம்பெயர்ந்து போனபின் எழுதும் இழப்பின் துயரக் கவிதைகள்- இவைதான் ஈழத்துக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா?

தேவகாந்தன்: நிச்சயமாய் அப்பிடி இல்லை. சங்கத் தொகுப்புக்குப் பின்னாலை, பாரதி சகாப்தத்துக்குப் பிறகு தமிழ்ப் பரப்பிலயே கவிதை சிறப்பாய் வளந்ததெண்டால் அது ஈழத்திலையெண்டுதான் சொல்லவேணும். நாவல் சிறுகதையெண்டு வேறை எந்த இலக்கிய வடிவத்தைவிடவும் ஈழம் கவிதையில முன்னுக்குத்தான் நிக்குது. தமிழ்நாட்டிலையும் பாரதி சாகாப்தத்திலயிருந்து வீச்சாய் வளந்தது கவிதைதான்.

பிறகு அங்கை ந. பிச்சமூர்த்தியின்ரை செல்வாக்கை அதிகம் பெற்று ஒரு திசையிலையும், ஈழத்தில பாரதியின் தொடர்ச் சியாய் வேறொரு திசையிலையும் அது வளந்ததெண்டு சொல்லலாம். பாரதியின்ரை செல்வாக்கோட ஈழத்தில கவிதை இருந்த காலத்தில் தான் எங்களுக்கு மிகப்பெருங் கவிஞர்களாக சிலர் உருவாகினம். மகாகவி, முருகையன், நீலாவாணன் எண்டு முக்கியமாய் இந்த மூண்டு பேரையும் இந்த இடத்திலை சொல்லலாம்.

இவையின்ரை கவிதைப் போக்குகளைத் தனித்தனியாய்த் தான் பாக்கவேணும். அவைக்குள்ளையும் பிரிநிலைக் கோடுகள் இருக்கு. மேலெழுந்தவாரியாய்ச் சில விஷயங்களைச் சொல்லுறன். மண்,பிரதேசம் இந்தமாதிரியானஉணர்வு மகாகவியின் கவிதைக ளிலை அதிகம். அதுபோல நீலாவாணனின் கவிதையளிலும் அது தூக்கலாயிருக்கும். அதாவது, அவரது கிழக்கு மாகாண வளம் அவரது கவிதைகளில் அதிகம் இருக்கும். இதுக்கான ஒரு முக்கிய காரணமாய் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நான் சொல்லுவன்.  இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மண்வளத்தைப் பேசுகிற  இலக்கியம் என்ற கோசத்தை முன் வைச்சுது. மண்வாசனையெண்டு பொதுவாய்ச் சொல்லிக் கொண்டினம். ஈழத்து நிலப்பரப்பைப் பேசுதல்,அதன் வளங்களைப் பேசுதல், அதன் மக்களைப் பேசுதல், அவர்களின் பேச்சுமொழியைப் பாவனை யாக்குதல் எண்டவை அதன் குணாம்சங்களாயிருந்தன. இவை யந் திரத்தனமாய்ப் பாவிக்கப்பட்டன எண்டு ஏ.ஜே.கனகரட்னா சொல்லுறதும் மெய். அதாலை போலி இலக்கியங்கள் எழுந்தனவெண்ட நிஜத்தையும் நான் இங்கே சொல்லவேணும். சமூகரீதியான எழுச்சியை அது வெளிப்படுத்தியிருந்தபோதிலையும், இலக்கியரீதியாய்ப் பெரிய சாதனைகளை நடத்தினதாய்ச் சொல்லேலாது. ஆனா ஒண்டு. தமிழ் நாட்டிலை தலித் இலக்கியப் பிரஸ்தாபம் எழுகிறதுக்கு முந்தி மக்கள் இலக்கியம் அல்லது மண்வாசன இலக்கியம் எண்ட இந்த எழுத்து ஈழத்திலை பதிவாகியிட்டுது. டானியலையெல்லாம் தமிழிலை தலித் இலக்கிய முன்னோடியெண்டு அ.மார்க்ஸ் சொல்லுவார். ‘இழிச னர் இலக்கியம்’ எண்டு பலராலையும் கேலிசெய்யப்பட அந்த இலக்கியவகையை வளத்தெடுத்தவர் அவர். இந்த மண்வாசைன வீச்சு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில இல்லாத எழுத்தாளரிட்டையும் ஏற்பட்டுது. இந்தத் தாக்கத்தில எழுதியவர்தான் மஹாகவி. இதன் மூலம் ஈழத்து இலக்கியம் முன்னேறினது எண்டுதான் நினைக்கிறன்.

இதுக்கு அடுத்த கட்டத்தில வந்தவைதான் வ.ஐ.ச.ஜெய பாலன்,சேரன், சண்முகம் சிவலிங்கம் போன்றவை. இவையின்ரை கவிதைப் போக்குகள் முந்தைய தலைமுறையினரின்ரை கவிதைப் போக்குகளை விட நவீனமாக, புதுக்கவிதையின் அம்சங்களோடை வந்துது. முந்தின தலைமுறையினரின்ரை காலம் அரசியலிலை இனப்பிரச்சினையும், சமூகத்திலை சாதிப் போராட்டமாயும் இருந்த காலம். பின்னாலை வந்தவையை சமூகப் பிரச்சினையும், யுத்தமும் எதிர்கொண்டுது. பாடு பொருள் இப்ப வேறாயிட்டுது. இவைக்கு கொஞ்சம் பிந்தி வந்ததாய்ச் சொல்லக்கூடிய அ.யேசுராசா, அஸ்வகோஷ், றஷ்மி, மு.பொன்னம்பலம், சோலைக்கிளி போன்றவை எதிர்கொண்டது இதே எதார்த்தத்தையேயெண்டாலும் தீவிரமானதாய் எதிர்கொண்டினம். இண்டைக்கு போராளிகளே படைப்பாளியளாயும் இருக்கினம். ‘போர் உலா’ போன்ற புதினம் தமிழ்நாட்டுச் சூழலிலை வரேலாது. வரவேயேலாது. அதுமாதிரித்தான் மாலதி, மைதிலி, தான்யா, அனார், சிவரமணி, செல்வி போன்றவையின்ரை கவிதையளும். இவையெல்லாம் போரின்ரை வார்ப்புக்கள். கி.பி.அரவிந்தன், சுகன், நட்சத்திரன் செவ்விந்தியன், செழியன், திருமாவளவன், பா.அகிலன் போன்றவையும் இந்தமாதிரித்தான். உலகமகா யுத்த காலங்களிலையும் அதையொட்டியும் மிகச் சிறப்பான கவிதையள் உலக இலக்கியப் பரப்பிலை பாடப்பட்டன என்பினம். மெய். முப்பதாண்டுப் போர்ச் சூழலிலை ஈழத்திலையும், ஈழத்தவராலை வெளிநாடுகளிலையிருந்தும் பாடப்பட்ட கவிதையள் பல அவைக்கு நிகரானவை இல்லாட்டி அவைக்குக் கொஞ்சம் மேலானவை யெண்டதிலை எனக்கு வேறை கருத்தில்லை.

கற்சுறா: தற்போது போர்க்காலக் கவிதைகள் – புலம்பெயர்ந்து போனபின் எழுதும் இழப்பின் துயரக் கவிதைகள் – இவைதான் ஈழத்துக் கவிதைகள் என்று அடையாளப்படுத்த முடியுமா?

தேவகாந்தன்: இக் காலகட்டத்தின் விசேஷமான அடையாளமே போர்ச் சூழல்தானே? இதைவிட்டுக் கவிதை வேறையெங்கை போகேலும்? எண்டாலும் ஒண்டை நாங்கள் மறந்திடக்கூடாது. மனித இருப்பு இன்னும் இருக்கு. மரணம்போலவே ஜனனமும் நடக்குது. கண்ணீரைப்போல காமமும் வருகுது. ஒரு உறவு போக இன்னொண்டு வருகுது. எல்லாம் இயங்கிக்கொண்டே இருக்கு. அப்ப என்ன வித்தியா சமெண்டா… நேற்று மாதிரி இண்டைய வாழ்க்கை இல்லையெண்ட துதான். போர்க்காலக் கவிதை இதையெல்லாமே பேசுதுதான்.

புலம்பெயர்ந்த இடத்திலைகூட இழப்புமட்டுமே வலியில்லை. இங்கையிருக்கிற கலாச்சாரச் சிக்கல், அடையாளச் சிக்கல் எல்லாமே பிரச்சினைதான். நிறச் சிக்கல், மொழிச் சிக்கல் இல்லையெண்டு சொல்லவேண்டாம். இல்லையெண்டமாதிரி ஒரு தோற்றம்தான் இருக்கு. இதெல்லாம்தான் கவிதைப் பொருள்.

ஈழத்துக் கவிதைகள் எல்லாம் போர்க் காலக் கவிதையள், புலம்பெயர்ந்தோர் கவிதையெண்டது வெறும் இழப்பின் துயரம் உள்ளதுதான் எண்டதெல்லாம் ஒரு மாயத் தோற்றத்தின் விளைவு. இல்லாட்டி, ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கிறதுக்கான முயற்சி. தமிழ்நாட்டிலை சில வருஷங்களுக்கு முந்தி இப்பிடியொரு முனைப்பு எழுந்ததை இப்ப என்னாலை நினைச்சுப் பாக்க முடியுது.

கற்சுறா: ஒரு சிலரைத் தவிர்த்து அநேகமானவர்களது கவிதைகளை ஒன்றாக்கி எழுதியவர்களது பெயரை நீக்கி விட்டால் எல்லாம் ஒருவரது கவிதைகள் என்று குறிப்பிடும் நிலையில்தானே  ஈழத்துக் கவிதைகளது போக்கு இருக்கின்றது?

தேவகாந்தன்: அப்பிடிச் சொல்லேலாது. இந்த யுத்த, புலம்பெயர்வுச் சூழலிலை அநேகமாக எல்லாரின்ரை உணர்வுகளும், பாதிப்புக்களும் ஒரேமாதிரி இருக்குதெண்டு சொல்லலாம். அதாலை, எடுக்கிற பொருள் ஒண்டாயிருக்கிறதுக்கு, அதாவது ஒரேமாதிரி இருக்கிறதுக்கான வாய்ப்பு அதிகம். கவிதையளும் ஒரே விஷயத்தைப் பேசுறதுபோல இருக்கும். ஆனா கவித்துவம் வேறை. அது வித்தியாசமானது. ஒவ்வொருத்தரிட்டையும் ஒவ்வொருமாதிரி அது வெளிப்படும். வெளிப்படவேணும். வெளிப்படாட்டி அது நல்ல கவிதையில்லை. எண்டாலும் சில கவிஞர்கள் வெகுவாக வேறை மாதிரிப் பேசேல்லை எண்டுதான் நினைக்கிறன். தீவிரமாய்ச் சொன்ன நேரத்திலை, கவித்துவமாயோ, வித்தியாசமாயோ அவை சொல்லேல்லை.

சுபத்திரன்ரை கவிதையள் உணர்வு நிறைஞ்சவை. சாதிப்போராட்ட காலத்தில சுபத்திரனது கவிதையள் பலரை எழுச்சிப்படுத்திச்சுது. ‘சங்கானைக்கு என் வணக்கம்’ எண்ட கவிதை மிகமுக்கியமானது. காசி ஆனந்தனது கவிதையள்மாதிரி இவரின்ரை. ஆனா காசியானந்தனது கவிதையள் காலத்திலை நிக்காது. அவரது பல கவிதையளை கவிதையெண்டே  என்னால இப்ப எடுக்க ஏலாது. பசுபதி  வித்தியாசமாய் எழுதினவர். மக்கள் கவிஞரெண்டு சொல்லக் கூடியளவுக்கு எழுதினவர். சுபத்திரன்ரையும் பசுபதியின்ரையும் கவிதையள் பாக்க ஒண்டாயிருக்கும். ஆனா கவித்துவத்தாலை அவை தனித்தனியாவேதான் நிக்கும். புலப்பெயர்வுக் கவிதையளோடை இந்த வர்க்கப் போராட்டக் கவிதைத் தன்மையளை நாங்கள் ஒப்பிட்டுப் பாக்க ஏலும்.

புதுக்கவிதை தோன்றின ஆரம்பத்தில அதுக்கெண்டு யாப்பு இல்லாமல் எதையும் சொல்லலாமெண்ட சுதந்திரப் பாங்கில மயங்கி பலபேர் எழுதிச்சினம் எண்டதை நாங்கள் இப்ப நினைச்சுப் பாக்கலாம். எப்படியும் எழுதலாமெண்டு  இருந்தபடியா எழுதிச்சினம். சிலபேர் வசனங்களையே சிதைச்சு கவிதை மாதிரித் தந்தினம். புதுக்கவிதை மிக மலினப்பட்டுப் போச்சு. அதுக்குமேலை சந்தேகமே வந்திட்டுது, காலத்திலை இது தமிழிலை நிண்டுபிடிக்கக்கூடின வடிவமாய் இருக்குமோவெண்டு.

அதைப்போல ஒரு வீச்சு  புலம்பெயர்ந்தவர்களின்ரை பக்கத்திலையும் உருவானதுதான். பலபேர் எழுதியிருக் கினம். நிறைய எழுதியிருக்கினம். அவைய ளின்ரை ஏதேனும் எழுத்து வரவேணும் எண்ட நிலையில இருந்த பத்திரிகையள் அவையின்ரை கவிதையளை வெளியிட் டுதுகள். மழைக்காலத்திலை ஈசல் மாதிரி கவிதையள் வெடிச்சுக் கிளம்பிச்சுதுகள். புதுக்கவிதை தொடங்கின காலத்தில இருந்ததுமாதிரி புலம்பெயர்ந்த கவிதைகள் எழுதத் துவங்கின பலபேருக்கு இண்டைக்கு நல்ல கவிதைகள் எழுதக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கு. நல்ல கவிதையளே எழுது கினம். இவையிலை தனித்துவமான கவிஞர் களே இருக்கினம்.  நிறைய எழுதாமல் விட்டாலும் இவையின்ரை அடையாளங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய கவிதை வரலாற்றில ஆழமாய்ப் பதிஞ்சிருக்கு.

இதே குறைபாட்டை யுத்தச் சூழலிலை வாழுற கவிஞர்கள் மேலையும் சொல்லலாம். அந்தச் சூழலிலை வெடிச்செழும் கவிதை யளுக்கும் இதேமாதிரியான விளக்கத்தைத்தான் சொல்லமுடியும்.

கற்சுறா: ஈழத்து இலக்கியச் சூழலில் தரமான இலக்கியச் சஞ்சிகையாக தனக்கான கருத்துநிலையில் நின்று கறாரான விமர்சனப் போக்கை முன்வைத்த சஞ்சிகையாக எதனை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

தேவகாந்தன்: ஈழத்தில, 60களிலயிருந்து பாக்கலாம், எப்பவுமே சிறுபத்திரிகைகள் பெரிய வீச்சைப் பெற்றதில்லை. ‘மறுமலர்ச்சி’ வெளிவந்து ஏற்படுத்தின தாக்கம்மாதிரி வேறு எதுவும் ஏற்படுத்தி னதில்லை. ‘மறுமலர்ச்சி’க் காலத்தில ‘தேனருவி’ எண்டொரு சஞ்சிகை வெளிவந்தது, ‘கலைச்செல்வி’ எண்டு இன்னொரு சஞ்சிகை வெளி வந்தது. ஆனா மறுமலர்ச்சி மாதிரி வேறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தினதில்லை. இதுகளின்ர காரணம் நிறைய இருந்தாலும் மேலோட்டமான ஒரு காரணத்தைச் சொல்ல வேணும். அதாவது ஈழத்தில சிறுபத்திரிகைக்கான ஒரு சூழலமைப்பு இருக்கேல்லை. காரணம், ஈழத்தில வெளிவந்து கொண்டிருந்த தினகரன், வீரகேசரி, ஈழநாடு, தினபதி போன்ற பத்திரிகைகள் தங்கடை வார மலர்களை இலக்கியத்தை முன்நிறுத்திக் காத்திரமாயே வெளியிட்டன. தினகரன் வந்துகொண்டிருந்த காலத்தில அதுகின்ரை வாரமஞ்சரி முக்கியமான பதிப்பு. அதுகின்ரை ஆசிரியராயிருந்து கலாநிதி கைலாசபதி ஆற்றிய பங்கு அறுபதுகளிலை மகத்தானது. இப்பிடி இலக்கியச் சஞ்சிகைகள் போல தினசரிகளின்ரை வாரமலர்கள் வந்துகொண்டிருந்தபடியால் வேறை சிறுசஞ்சிகை முயற்சிகள் எதுவும் பெரிதாய்ப் பயன் தரேல் லை. ‘அலைகள், ‘புதுசு’, ‘திசைகள்’,’நந்தலாலா’ எண்டு நிறையச் சிறுபத்திரிகைகள்;. நிச்சயமாய் எங்களுக்கெண்டு ஒரு சிறுபத்திரிகை வரலாறிருக்கு. அதோடையே அதுகள் காத்திரமானதாயில்லை எண்ட உண்மையும் இருக்கு.

‘மல்லிகை’ வந்து கொண்டிருந்தது. இப்பவும் வந்து கொண்டிருக்கு. மல்லிகை வந்து எதாவது ஒரு இலக்கியப் பாதிப்பை இதுவரை செய்ததா எண்டால் இல்லை எண்டுதான் சொல்லுவன். அது இதுவரைக்கும் செய்ததும் செய்துகொண்டிருக்கிறதும் சில படைப்பாளிகளுக்கு ஒரு களமாக இருப்பது மட்டுந்தான். தன்ரை போக்கை-நிலைப்பாட்டை அது சொல்லிக்கொண்டிருக்கு எண்டது வேறை சங்கதி. அது ஒரு சிறுபத்திரிகையின்ரை வேலையில்லை. சிறு பத்திரிகை எண்ட கருத்துருவாக்கத்தின் மீது எனக்கு வித்தி யாசமான கருத்திருக்கு. மல்லிகையைப் போலத்தான் ;ஞான’மும். ஆனால் ‘சரிநிகர்’ பத்திரிகை வந்து கொண்டிருந்த காலத்தில, 90களில, முக்கியமான ஒரு நவீன இலக்கியத் தளமாயும் இருந்த தெண்டதை மறுக்கேலாது. நவீன அரசியல், இலக்கியச் சிந்தனைக் கான பத்திரிகையாய் இருந்தது எண்டதைத் தவிர, அதுவும் ஒரு பெரிய அலையாக ஈழத்து இலக்கியப் பரப்பிலை செயற்படேல்லை. சரிநிகர் காலம் என்று வரேல்லை. மணிக்கொடி காலம், சரஸ்வதி காலம் எண்டு தமிழ்நாட்டில இருக்கிறது போல ஒரு காலத்தை ஏற்படுத்த இந்தப் பத்திரிகைகளால முடியேல்லை. பத்திரிகையள், சிறுசஞ்சிகையள் காலத்தையுருவாக்கிறதில்லை, காலமே தன்ரை தேவைக்கான உபகரணங்களை உருவாக்கிக் கொள்ளுது எண்டதே சரி. எண்டாலும்  காலத்தின்ரை போக்கை, அதுகின்ரை தேவையை அறிஞ்சு இல்லாட்டி முன்னனுமானிச்சு பத்திரிகையளும் வரவேணும்.

‘மூன்றாவது மனித’னை ஒரு காலகட்டத்தை உருவாக்கத் துவங்கின சஞ்சிகையாய் என்னாலை குறிப்பிட ஏலும். மூன்றாவது மனிதன் நவீன இலக்கியத்தின் ஒரு தீவிர தளமாக இருந்தது. இது ஒரு அலையாகச் செயற்பட்டிருக்க முடியும். ஆனா அது தொடர்ந்து வெளிவர முடியாமல் போனது வாசகர்களுக்குத் துக்கமான விசயம். ஈழத்தில வந்து கொண்டிருந்த இவ்வளவு பத்திரிகைக ளையும் மேலோட்டமாப் பாக்கேக்க தன் கருத்து நிலையில சரியாக நிண்டு வெளிவந்த பத்திரிகைகளெண்டு சரிநிகரையும், மூன்றாவது மனிதனையும்தான் குறிப்பிடலாம்.

கற்சுறா: ஈழத்து இலக்கியப்பிரதிகள் மீதான விமர்சனப் பார்வை என்பது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தரமான நிலையில் இருந்ததில்லை. தனிநபர் வழிபாடு அல்லது தனிநபர் வெறுப்பு சார்ந்தே இன்று வரை இருந்து வந்திருக்கிறது. அல்லது மௌனமாய் இருத்தலாய் இருக்கிறது. இதற்கான மூலகாரணம் எது?

தேவகாந்தன்: தமிழ்ப் பரப்பிலையே விமர்சனம் எண்டது வெறும் வரட்டுத் தனமாய்த்தான் இருந்தது. கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத் தம்பி, நா.வானமாமலை போன்றவை விமர்சனத்துறைக் குள்ளை பிரவேசிக்கிறவரைக்கும். அண்டைவரைக்கும் தமிழிலக்கியம் நவீன விமர்சனத்தை அறியாது. தமிழிலையிருந்த விமர்சன நூலெண்டு சொல்லக்கூடினதா யிருந்தது சிதம்பர ரகுநாதன்ரை ‘இலக்கியத் திறனாய்வு’ மட்டும்தான். அதுக்கு முந்தி விமர்சனமெண்டு இருந்த தெல்லாம் ரசனைமுறைத் திறனாய்வு எண்டதுதான். கம்பராமாய ணத்தை ரசிகமணி டி.கே.சி. வாசிச்ச முறையிலேயே நவீன தமிழ்ப் பிரதியையும் வாசிச்சினம். வித்தியாசமாய் தமிழிலக்கியத்தை விமர்சனமாய்ப் பாத்தது அதுவரைக்கும் புதுமைப்பித்தன்தான். சிறந்த படைப்பாளியாய் இருந்தாலும் இந்த விமர்சனப்பார்வை புதுமைப்பித் தனுக்கு கைகூடி வந்திருக்கு. ஆங்கில மொழிமூலமாய், இலக்கியம் ஊடாய் இந்த விமர்சனக் கருத்துக்களை புதுமைப்பித்தன் அடைஞ்சி ருக்கிறார். ஆங்கில இலக்கிய வகையான புதினத்தை அல்லது நவீன கவிதையை தமிழ்முறைப்படி விமர்சனம்செய்து பாத்து மகிழ்ச்சிகொண்டாடிக்கொண்டிருந்தது படிச்ச கூட்டம். இஞ்சைதான் கைலாசபதியும், சிவத்தம்பியும் வருகினம். தமிழிலக்கியத்தை மார்க்சீயத்தினூடாய் எப்பிடிப் பாக்கிறதெண்டதை தமிழுலகத்துக்கு அறிமுகமாக்கி வைச்சது இவையெண்டு சொன்னாலும் பிழையில்லை. தமிழிலக்கியம் இதுவரையில்லாத புதுப் பார்வை கொண்டு நிமிர்ந்து திரியத் துவங்கினதாய் இவையின்ரை தமிழ்த் துறைப் பிரவேசப் பலனாய் நான் பாக்கிறன்.

நாவலர் மூலமாய்த் தமிழ் வசனநடையின்ரை மாபெரும் துவக்கத்தைச் செய்ததுமாதிரி, மார்க்சீயமூடாகப் பிரதியை உணரு கிற இந்தத் திறனாய்வு முறையை கைலாசபதி சிவத்தம்பி மூலமாய் ஈழம்தான் துவங்கிவைச்சது. விமர்சனத் துறையிலை ஈழத்தின்ரை சாதனை இவ்வளவுதான். இந்தளவிலை கைலாசபதி, சிவத்தம்பி யின்ரை பங்களிப்பும் முடிஞ்சுபோச்சு. இவை சிலாகிச்சுச் சொன்ன எழுத்தாளர்களின்ரை கலாசித்தியளை வைச்சு இவையின்ரை விமர்சன முடிவுகளிலையுள்ள அபத்தங்களைச் சுலபமாய் நாங்கள் கண்டுகொள் ளலாம். மார்க்சீய விமர்சனமுறையின்ரை நேர்மையிலை சந்தேகத் தையே இவையின்ரை விமர்சனத் தெரிவுகள் உண்டாக்கியிட்டு தெண்டாலும் பிழையில்லை. நான் பெயர் குறிப்பிட விரும்பேல்லை. இந்தப் படைப்பாளிகளின்ரை படைப்புகளைப்பற்றி வாசகர்கள் தெரிஞ்சிருக்கினம். அதுபோதும்.

விமர்சனத்திலையிருக்கிற மூலாதாரமான விஷயமே ரசிக்காமல் விமர்சனம் செய்ய ஏலாதெண்டதுதான். பலர் வாசிக்கிற துகூட இல்லாமல் விமர்சனம் செய்ய வருகினம், உவை புத்தகத் தையே பாத்திருக்க மாட்டினம், ஆளைப் பாத்துத்தான் விமர்சனம் செய்யிறவையெண்டு சிலபேர் சொல்லுறவை. அதை நான் நம்பமாட் டன். அந்தப் புத்தகத்திலை நிச்சயமாய்க் கண்ணோடியிருப்பினம்தான். முதல்லையிருந்து கடைசிவரைக்கும் கண்ணோடியிருப்பினம். வடிவாய்க் குறிப்புமெடுத்திருப்பினம். குறிப்பெடுத்தாச்சா, விமர்சனம் வந்திட்டுதெண்டு அர்த்தம். இந்த ஆரம்ப நிலையை மீறி நாங்கள் வளரேல்லை.

இதுக்கனுகூலமாய் இருக்கிற விஷயம் என்னெண்டா, எங்க டை பேர்போன விமர்சகர்களெல்லாருமே எங்கடை பல்கலைக் கழகக் காறர் எண்டது. எல்லாரையும் நான் சொல்லவரேல்லை. ஆனா ஒட்டு மொத்தமான உண்மை என்னெண்டா, ஈழத்தமிழின்ரை விமர்சனத் துறையெண்டது பல்கலைக்கழகத்துக்கை அடக்கமாயிட்டுது. அடக்கமெண்டதை ரண்டு அர்த்தத்திலையும் நீங்கள் எடுக்கலாம்.

கற்சுறா: அநேக புலம்பெயர்ந்த சிறுகதைகள் கவிதைகளைப் பார்த்தீர்கள் என்றால் றெஸ்ரோறண்டில் கோப்பை கழுவுவது, கிளீனிங்செய்வது இப்போது மோட்கேஜ் கட்டுவது என்றுதானே இருந்து வருகிறது? ஈழத்தில் இருக்கிற  அநேக பிரதிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்குப் போய்வருவது குறித்துக் கவலைப்படுகிறது. இதே யாழ்ப்பாணத்தில் முறிகண் டியில் கொழும்பில் தேனீர்கடைகளிலும் தெருவோரங்களிலும் எத்தனை இளைஞர்கள் கோப்பை கழுவுறார்கள், வெங்கயாம் உரிக்கிறார்கள்? தெருக்கூட்டுகிறார்கள். ஏன் அவை எவையும் இவர்களது படைப்பில் கதையாகவோ கவிதையாகவோ வந்த தில்லை? தாங்கள் கழுவியவுடன் மாத்திரம் அழுகி றார்கள், புலம்புகிறார்கள,; கவிதை எழுதுகிறார்கள். இந்தப் படைப்பாளிகளது பிரதிகள் சொல்லும் சிந்த னைத் தளம் அங்கே எது? இங்கே எது?

தேவகாந்தன்: இந்த யாழ்ப்பாண சமூகம் என்பது ஒரு மோசமான சமூகம். ஒரு சமூகம். மோசமானது, மோசமானதில்லையெண்டதை எப்பிடி அறியேலுமெண்டா, அது  வழங்கிற பழமொழியளிலையிருந்துதான். அவை அதுகின்ரை வாழ்க்கை முறையின்ரை அடையாளம். வேற இனங்களில, சமூகங்களில இந்த மாதிரிப் பழமொழியள் இருக்குமோ எனக்குத் தெரியாது. ‘கோழி மேய்ச்சாலும் கொறணமேந்தில மேய்க்கவேணும’;, ‘கெட்டவன் கிழக்கை போ’ மாதிரிப் பழமொழியள் அந்த இனத்தையே வெளிச்சம்போட்டுக் காட்டியிடுது. கிழக்கை எண்டது அப்ப பணம் சேர்க்கக் கூடிய திசையிலயிருந்த சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளைத்தான். இந்தப் பணம் சார்ந்த கட்டுமா னங்கள் யாழ்ப்பாணச் சமூகத்திட்ட அதிகமாய் இருக்கு. நான் அந் தச் சமூகம் எண்டதில எந்த ஒரு தனிநபரையும் குற்றஞ்சாட்டல்லை. சமூகத்தைக்கூடக் குற்றம்சாட்டேல்லைத்தான். நான் வரலாற்றைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறன். வரலாறுதான் தவறாய் நடந்தி ருக்கு. தவறாய் இருந்திருக்கு. சமூக அமைப்பிலை மாற்றம், மாற்ற மின்மை, மாறுபாடு போன்றதுகளை நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேணும்.

யாழ்ப்பாணச் சமூகம் வித்தியாசமான மனநிலை கொண்டது. அந்த அமைப்பு பணம் சார்ந்தது. எல்லா அமைப்புக்கும் பணம் பிரதானம் எண்டாலும் யாழ்ப்பாணச் சமூகத்தின்ரை வாழ்வியல், போக்கு எண்டதுகள் பணமும், அந்தப் பணத்தின்ரை ஆதாரமான சமூக அமைப்பை நிலை நாட்டுறதுக்கான மனோநிலையுமாயே இருந்திருக்கு. அதில முக்கியமானது சாதிப்பிரச்சனை. ‘யார் இந்த யாழ்ப்பாணத்தான்?’ எண்டு பேராசிரியர் சிவத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். யாழ்ப்பாண மனநிலை அதிலை அழகாய் விழுந்திருக்கு.

இந்தப் பின்னணியிலையிருந்து புலம் பெயர்ந்து வந்தவைக்கு, எழுத்து முயற்சியெண்டது ஒரு கட்டறுப்பு. சுதந்திரமாய் இருக்கிற வகையிலை, அவையின்ரை அடிநிலை எண்ணங்கள் பீறிக் கொண்டு வெளிப்பட்டு வாறதைத் தவிர்கவேயேலாது. வெளியில வந்தாப்பிறகு நான் கோப்பை கழுவுறதா எண்டொரு ஆதங்கம். அவேசம். கோப்பை கழுவுறதை, கிளீனிங் செய்யிறதை ஏற்றுக் கொள்ளமுடியாத மனோநிலையில உள்ளவையிட்டை  இந்த எழுத் துதான் உருவாகும். இந்த உணர்வு ஒற்றுமை நிலைதான் படைப்புகள் ஒண்டுபோலத் தோன்றுறதுக்கும் காரணம். முந்தியே இதைப் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறன்.

அண்மைக்காலம்வரையான புலம்பெயர்ந்தோருக் குள்ளை பலபேர் தங்கடை கல்வியை இழந்தவை. அவை  தங்கடை உணர்வுகளைக் கொட்டிச்சினமேதவிர  இலக்கிய முக்கியத்துவம் கொடுத்து எழுதியதாய்ச் சொல்லேலாது.சில தீவிரவாசகர்க ளாயிருந் தவை, தீவிர வாழ்வனுபவங்களுக்காளானவை ஒரு மொழியைத் தங்கட வசமாக்கிக் கொண்டு எழுதிச்சினம். அதில நான் குறிப்பிடக் கூடிய ஒராள் ஷோபாசக்தி. 60களில எஸ்.பொ.வி;ன்ரை மொழி ஆளுமை சிறப்பாய் இருந்தது. தமிழ்நாட்டிலை லா.ச.ரா.வைச் சொல்லுறவேளை ஈழத்துக்கு எஸ்.பொவைச் சொல்ல முடியும். மொழியை அவ்வளவு தீவிரமாய்க் கையாளக்கூடிய தகைமை இப்பத்தைய ஆக்களில ஷோபாசக்திக்கு உண்டு. அவரது கருத்துக்களோடு எவ்வளவு முரண்பட்டாலும் படைப்பு மொழி எண்ட வகையில அவரது நடை எனக்குப் பிடித்தமானது. ஆனா கனபேர் வளராமலே இருக்கினம். தங்கடை எண்ணங்களை இலக்கியப் பிரக்ஞையுடன் எழுதிய ஆக்க ளெண்டும் கனபேரைச் சொல்ல ஏலாது. அவையிலையும் கனபேர் பிரான்ஸிலைதான் இருக்கினம். மிச்சப்பேர் சிறுகதை எண்டு தங்க ளுக்குத் தெரிஞ்ச மொழிகளில ஏதோ எழுதிச்சினம். பெயரை நீக் கிப்பார்த்தால் ஒண்டுபோலை அனுபவங்கள் விரிஞ்சுகொண்டே போகும். கவிதை எண்டதுக்கு அதன் இலகு வடிவத்தை – வரி அமைப்பை – பாத்தினமே தவிர அதுக்கு மேலை ஆருக்கும் தெரிஞ்சிருக்கேல்லை. அவைக்குத் தெரிஞ்சிருக்கவும் வேண்டியிருக்கேல்லை. பின்நவீனத் துவப்பாணியிலை, நவீன யதார்த்தப் போக்கிலை எழுதுகிற தமிழகப் படைப்பாளிகளிட்டைக் கூட இந்த நிலை இருக்கு. ஒரு சிறுகதை யின்ரை பேரை நீக்கிப் பாத்தால் ஆர் எழுதினதெண்டு சொல்ல முடியாமல் தான் இருக்கும். சில முக்கிய படைப்பாளிகள் எஸ். ராமகிருஸ்ணன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற ஆக்களைத் தவிர்த்துப் பாத்தால் இண்டைய இளம் படைப்பாளிகளிட்டைச் சுயஅடையாள அழிப்புத்தான் இருக்கு. அனுபவமேற ஏறத்தான் சுய அடையாளங்களோடை கூடின படைப்புக்கள் அவையிட்டையிருந்து பிறக்கும். புலம்பெயர்ந்தவையிட்டையிருந்தும் அந்தமாதிரித்தான். வடிவ மேன்மைமாதிரித்தான் கருவும் மாறும்.

தொலைக் காட்சி, சினிமா ஊடகங்களுடாய் ஈழத்துப் பேச்சுவழக்கு முறையிலை தமிழ் நாட்டுப் பேச்சு வழக்குமுறை ஒரு பாணியாயும், இயல்பாயும் கலந்து வருகுதெண்ட உண்மை எத்தி னைபேர் கவனத்திலை பட்டுதோ தெரியாது. ஆனா ஒரு கலப்பு நடந்து கொண்டிருக்கு. ஆரும் தூண்டாமலேதான். இதுபோலத்தான் தமிழ்நாட்டு இலக்கியநடைப் போக்கும் ஈழத்திலை கசிய ஆரம்பிச் சிட்டுது. உள்வாங்குதல் இல்லாமல், வெறுமனே ‘கொப்பி’பண்ணுற மாதிரியான இந்தப் போக்கு விமர்சனத்துக்காளாகாமல் தவிரவும் மாட்டுது.

கல்வி வசதி மறுக்கப்பட்டு சிறுவர்கள் வேலைக்கமர்த் தப்படும் கொடுமைகள்பற்றி ஏன் ஈழத்திலை எழுதப்படேல்லை எண்டு கேட்டியள். எழுதப்பட்டிருக்கவேணும். ஆனா எழுதப்படேல்லை. ஒன்றிரண்டு ஆக்கங்கள் வந்திருக்கிறதாய்த்தான் நினைக்கிறன். பேர் குறிப்பிட்டுச் சொல்ல உடனடியாய் வரேல்லை. அது போதாது. ஆனாலும் எந்தவொரு படைப்பாளியிட்டையும் இதைப்பற்றி ஏன் எழுதேல்லையெண்டு கேக்கப்படமுடியாத கேள்வி இது.

அங்கத்தைச் சூழ்நிலையிலை ஆரும் இப்பிடியொரு கேள் வியை அங்கை கேட்டிட மாட்டினம். ஏனெண்டா ஒரு யுத்தம் அங்கை நடந்து கொண்டிருக்கு. மனித இருப்பே கேள்விக்குள்ளாகியிருக்கிற நேரத்திலை, அதன் இருப்புக்கான இங்கிதங்களிலை கரிசனை வராது.

இது எதுகின்ரை சிந்தனைத் தளம்? வாழ்முறைதான் சிந்தனைத் தளத்தை உருவாக்குது. அப்பிடியெண்டா யுத்தத்தின்ரை சிந்தனைத் தளமெண்டு இதைச் சொல்லலாமா? அப்பிடித்தான் எனக்குச் சொல்லத் தெரியுது.

கற்சுறா: ஈழத்து எழுத்தாளர்கள் சுயமரியாதையுள்ளவர்கள் என்பதில் சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் தாங்க ளாக எதையும் உணர்ந்து எழுதுவதில்லையென்றும், அந்தநேர அலைகளுக்கான எழுத்தை மட்டும் எழுதுப வர்கள் என்றும் சொல்லலாமா? வடக்கிலிருந்து முஸ்லீம் கள் வெளியேற்றப்பட்டமை எந்த எழுத்தாளரினதும் எழுத்தாழுமையைப் பாதித்ததாக இல்லையே!

தேவகாந்தன்: ஒரு எழுத்தாளன் அல்லது கவிஞன் அல்லது கூத்து நாடகம் போன்றவற்றில் இருக்கிற கலைஞர்களின்ரை படைப்பு மய்யத்தைச் சமகால நிகழ்வுதான் பாதிக்க வேணுமெண்டு  இல்லை. அதோடை மனதிலை பதியும் எந்தவொரு நிகழ்வும் உடனடியாய் எழுத்தாக வரவேண்டுமெண்டும் நாங்கள் எதிர்பாக்கவுமேலாது. எதிர் பாக்கவும் கூடாது.  அதுக்கான பிரதிபலிப்பு வேறுமாதிரியும் இருக்க லாம்.

இப்ப வடபகுதியில இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் குறிச்சு படைப்பாளிகள் ஆரும் எந்தப் பெரிய ஆக்கத் தையும் செய்யேல்லை எண்டுதான் நானும் நினைக்கிறன். தொண் ணூற்றி மூண்டு மேயிலை பிரதமர் பிரேமதாச கொலைசெய்யப்பட்ட நாலு மாசத்துக்குள்ளை அந்தச் சம்பவத்தின்ரை பின்னணியிலை ‘ஞானத் தீ’ எண்ட சிறுகதையை நான் எழுதினன். அதுக்கு கல்கி நினைவுச் சிறுகதைப் பரிசும் கிடைச்சது அப்ப. ஒரு சம்பவம் நடந்து நாலு மாசத்துக்குள்ளை அதைப் படைப்பாக்க முடிஞ்சிருக்கு. அதுபோலை அனார், இளையஅப்துல்லா, முல்லை முஸ்ரிபா போன்ற சிலரின்ரை கவிதையள் வடக்கிலையிருந்து முஸ்லீம்கள் வெளியேற் றப்பட்டது குறிச்சு வந்திருக்கு. வடபகுதிப் படைப்பாளிகளின்ரை ஆக்கங்களும் இல்லாமலில்லை. ஆனா இவை போதாது. வராதது பிழை எண்டும் நான் நினைக்கமாட்டன். அதற்கு மாறான கருத்தை எழுதுகிறபோதுதான் இந்தப் பிரச்சனையே வரும்.

எந்தவொரு சம்பவத்தையும் படைப்பாக்கு அல்லாட்டி படைப்பாக்காதை எண்டு சொல்லுற உரிமை  வாசகனுக்கோ விமர்சக னுக்கோ இல்லை. அப்படைப்பாளிக்கு ஒரு சம்பவம் மனசிலைபட்டு, அது கலையாய் வெளிப்பாடடையிற விஷயம் வந்து அவனுக் குச் சொந்தம். அவனுக்கே அவனுக்குச் சொந்தமானது. இது அவன்ரை தன்னுணர்வு சார்ந்த விஷயம் எண்டிறன். இண்டைக்கு முஸ்லீம்கள் கலைக்கப்பட்டு ஏறக்குறைய 10 வருஷங்களுக்கு மேலை ஆகியிட்டா லும் இன்னொரு படைப்பாளி இதை எழுத ஏலும். அவன் இதை எழுதுற நேரத்திலை இதை ஏன் இப்ப எழுதுறாயெண்டும் கேக்கேலாது எண்டது என்ரை நிலைப்பாடு. இது ஒண்டு.

இந்த விஷயத்திலை கேக்கப்படவேண்டிய இன்னொரு கேள்வி இந்தச் சம்பவத்தை நான் எப்பிடிப் பாக்கிறனெண்டது. இது சரியா பிழையா எண்டதிலை திட்டவட்டமான அபிப்பிராயம் என்னிட்டை இருக்கு. வடபகுதியிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டது நூற்றுக்கு நூறு வீதம் பிழையானது. மோசமானது. மனிதாபிமானம் அற்றது. இதைச் செய்த அரசியல் இயக்கம் அரசியல் இயங்கு தளத்திலை தன்ரை செயற்பாட்டுத் திறமையின்மையைத்தான் இதன்மூலம் வெளிப்படுத்தியிருக்கெண்டு நான் சொல்லுவன்.

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதுக்கான காரணம் வேறை வேறை விதமாய்ச் சொல்லப்படுகுது. விடுதலைப் போராட்டத்துக்கு எதிராய்ச் செயற்படுறதுக்காய் முஸ்லீம் இளைஞர் பலர் பேரினவாத அரசினாலை அங்கை சேர்க்கப்பட்டிருந்தினமெண்டும் சொல்லப்பட்டுது. எண்டாலும் இதைக்கூட ஒரு அரசியல் பிரச்சினையாயெடுத்து அந்தத் தளத்திலை வைச்சு ஒரு செயற்பாட்டுத் திறமையுள்ள இயக்கத்தாலை தீர்த்துக்கொண்டிருக்கேலும்.  ஒரு சில முஸ்லீம்கள் செய்த ஒரு தவறை ஒட்டு மொத்த சமூகமும் செய்ததாய் நினைச்சு ஒட்டு மொத்தமான சமூகத்தையும் வெளியேற்றினது சகல வடபகுதித் தமிழரையுமே சிலுவை சுமக்க வைச்சிட்டுது. ஒரு வடபகுதித் தமி ழனாய் என்ரை தலை குனிஞ்ச  இடம் இதுதான்.

கற்சுறா: படைப்பாளிகள்  தங்களுடைய தன்னுணர்வு சார்ந்து எழுதுகிறார்கள் . எல்லாவற்றையும் எழுது என்று கேட்க முடியாது, காலஞ்சென்றும் எழுதலாம் என்கிறீர்கள். ஒரு ஓர்மமான எழுத்தாளனால் மனித வாழ்வியல் வாதை களுக்கும் அதன் இன்பங்களுக்கும் இடையில் ஓடி எழுதிக்கொண்டிருக்கவே முடியும்.  ஈழத்து எழுத்தாளப் பெருந்தகைகள் அல்லது இப்படிச் சொல்லும் எழுத்தா ளர்கள் ஈழத்து வாழ்வியல் அவலங்களை கண்டுகொள் ளாமல் இருப்பதைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன். பெரும்பாலான படைப்பாளிகள் தனது என்பதற்குள் இருந்தே புனைவுகளையோ கவிதைகளையோ செய்கிறார்கள் (நோட் த பொயிண்ட் செய்கிறார்கள்). பரந்த மனதுள்ள எழுத்தாளர்கள் மற்றதை அறவே மறந்து போய்விடுகிறார்கள். ஈழத்து விமர்சனச் செம்மலான கா. சிவத்தம்பி அவர்கள் கூட இவற்றை யெல்லாம் கடந்து நின்று தத்துவம் பேசுகிறார். கயிறைப் பாம்பாக நம்பி விட்டுவிடலாம் ஆனால் பாம்பைக் கயிறாக நம்பி விட்டுவிடக்கூடாது என்று ஈழவிடுதலை என்ற பெயரில் செய்த அநியாயத்துக் கெல்லாம் நியா யம் கற்பிக்கிறாரே?

தேவகாந்தன்: பேராசிரியர் சிவத்தம்பி எந்தப் பேட்டியில, எந்தக் கட்டுரை யில இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரெண்டு எனக்குத் தெரியேல்லை. அப்பிடிச் சொல்லியிருந்தாரெண்டால் பேராசிரியர்   இந்த விஷயத்திலை மிக நிதானமாயோ, சரியாயோ பதில் சொன்ன தாய் என்னாலை சொல்லேலாது. பாம்பும் கயிறும் மயக்கமான விடைக்கு அல்லது கேள்விக்கான மூலமாயிருக்கும். எப்பவும். முஸ்லீம்கள் வடபகுதியில இருந்து வெளியேற்றப்பட்டது எவ்வ ளவுதான் காரணங்களைக் கொண்டிருந்தாலும் அது மகா தவறான ஒரு காரியம். சரி, பிழைகளுக்கிடையிலை இடைபாதை எடுக்கேலாது. எண்டாலும் எனக்கு இன்னுமொரு கருத்திருக்கு. உண்மையெண்டது ஒண்டேயில்லை எண்டதுதான் அது. எண்டாலும் அதுக்கான வலுவான பதிலுக்கு முன்னாலை இத்தனை வருசத்திற்குப் பிறகு இப்ப இது கதைக்கப்படுறதுக்கான அரசியல் புலமும் எனக்குத் தெரியவேணும். ஒரு யுத்தம் நடந்துகொண்டிருக்கெண்ட யதார்த்தத்தை மீறி என்னாலை எதையும் பாத்திட ஏலாது. அந்த எதிர்ப்பின் பின்புலம் எனக்கு எல்லாமாயும் இப்ப தோற்றம் தருகுது.

ஏறக்குறைய வடபகுதியிலை முஸ்லீம்கள் திரும்பவும் வந்து மீளக் குடியேறுகினமெண்டுதான் செய்தியள் மூலம் நான் அறியிறன். முஸ்லீம்கள் இதை இண்டைக்குப் பெரிதுபடுத்துறதாயும் தெரியேல்லை. அவர்கள் மறக்காவிட்டாலும் மன்னிச்சுவிட்டார்கள் எண்டு இதை நாம் எடுக்கலாம். இளைய அப்துல்லா எழுதின  கவிதைகள்ளகூட முஸ்லீம்களின்ரை வெளியேற்றத்துக்கு அப்பாலான சில நியாயமான ஆதங்கங்களும் இருக்கிறதை நான் காணுறன். முஸ்லீம்கள் ஒருவேளை பேரினவாதத்தின் அரசியல் சதுரங்கத்தில காய்களாய் நகர்த்தப்படுகினமோ எண்ட ஐயம் அந்தக் கவிதைகளில -சில கவிதைகளிலையெண்டாலும் – இருக்கு. இளைய அப்துல்லா வின் கவிதைகளிலை ஒரு பூடகத்தன்மை இருக்கும். அவர் வெளிப் படையாய்க் கட்டுரைகளிலை எழுதினாலும் அவரின்ரை கவிதைக ளிலை முஸ்லீம்களின்ரை இடப் பெயர்வுப் பிரச்சனை குறிச்சு அவர் பெரிசாய்ப் பேசேல்லையெண்டுதான் நான் சொல்லுவன். அவ ரின்ரை ‘பிணம் செய்யும் தேசம்’ கவிதைத் தொகுப்பையும் கிட்ட டியிலைதான் படிச்சு முடிச்சன். அதிலைகூடப் பெரிசாய்ப் பேசேல்லை. பேசினவை கவிதைகளாய் இல்லை. இதை எப்பிடி நான் பாக்கிறன் எண்டால், முஸ்லீம்களை வெளியேற்றின ஒரு தவறை வைச்சுக் கொண்டு நாங்கள் எவ்வளவு தூரத்திற்குப் போகலாம் எண்டதுதான். புலிகளாலானது எண்டதைவிடவும், போராலானது எண்டதுதான் என்ரை தெளிவு, புரிதல்.

அடுத்தது சுயமரியாதை பற்றின விஷயத்துக்கு வாறன். ஈழத்தில சிறுகதை வளர்ச்சி தொடங்கின அந்த நாளில இருந்து எப்பவுமே அது தமிழகத்தின்ரை ஒரு மறுபதிப்புப் போலத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. நாங்கள் எவ்வளவுதான் நாவல்லை, சரித்திர நாவல்ல புதுமைகளையும் பரீட்சார்த்தங்களையும், சில முன்னோட்டங்களையும் செய்தம் எண்டு சொல்லிக்  கொண்டிருந் தாலும், எங்கடை சிறுகதை அல்லது கவிதை தமிழகத்தின்ரை ஒரு பின் விளைவாய்த்தான் எப்பவும் வந்து கொண்டிருக்கெண்டது மறுக்கேலாத உண்மை. அரசியல்ல எப்படி இருந்ததோ அது போலத் தான் இலக்கியத்திலும். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் புதிய தேசிய இலக்கியத் திட்டத்தை முன்வைச்சுச் செயற்படத் துவங்கிற வரைக்கும் அப்படியிருந்தது எண்டும் சொல்லலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றினதுக்குப் பிறகு அதிகமாய் அந்தச் சங்கத்தில இருந்து எழுதினவை சாதி அடக்குமுறை, வர்க்க அடக்கு முறை போன்றதுகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டில இருந்து  மண்வளத்தையும் மக்களையும் பேசிச்சினம் எண்டது சரியான வார்த்தைதான். அதிலை முக்கியமாகக் குறிப்பிடவேண் டியவர்கள் நீர்வை பொன்னையன், டானியல், டொமினிக் ஜீவா, செ.கணேசலிங்கன் போன்றவை. இவையின்ரை சிறந்த கலைப் படைப்புக்களா எண்டு தமிழ் நாட்டில விவாதம் வந்தது. ஈழத்தில வந்திருந்தா ஓரளவுக்குச் சரியாய் இருந்திருக்கும். எனக்கு வந்துது. தமிழ் நாட்டில வந்தது எனக்கு முரணாய்த் தெரிஞ்சுது. வந்ததுக்கான பின்புலத்தை பிறகு நான் யோசித்து அறிஞ்சன். கலாநிதியள் கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும் தமிழ் விமர்சனத்துறையில இருந்த மதிப்பு, இவை சோஷலிச முகாமைச் சேர்ந்தவையெண்ட காரணத் தாலை சிலபேருக்குப் பிடிக்கேல்லை. இவைதான் டானியல் மற்றும் இடது சாரி எழுத்தாளர்களின்ரை படைப்புக்களை முன்னெடுத்துப் பேசினவை. இவையின்ரை விமர்சன முறைமை மூலம் ஸ்தாபிக் கப்பட்டவையின்ரை செல்வாக்கை அழிக்கிறதுக்கும், இவையின்ரை செல்வாக்கை அழிக்கிறதுக்காயுமே ஒரு முயற்சி அந்தச் சிலராலை எடுக்கப்பட்டுது. அதுகின்ரை ஒரு அம்சம்தான் மு.தளையசிங்கத் தின்ரை படைப்புக்கள் மீதான ஆய்வரங்கு. அது ஊட்டியிலை 4 வருடத்திற்கு முந்தி நடந்தது. வேதசகாயகுமார் மு.தளையசிங்கத் தின்ரை சிறுகதைகள் பற்றின ஒரு பெரிய கட்டுரை வாசிச்சார். மு.தளையசிங்கம் குறித்த அவரின்ரை கருத்துக்களோடை எனக்குப் பெரிய மாறுபாடில்லை. இருக்கவேண்டினதுமில்லை. ஆனால் அது இடதுசாரி எழுத்தாளர்கள், விமர்சகர்களின்ரை வரலாற்றிருப்பையும் உள்ளீடாய்க் கேள்விக்குட்படுத்தியிருந்தது.                 அந்தக் கேள்வியின்ரை விரிவுதான் பிறகு ‘காலம்’இதழில் வந்த ‘ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரை. அந்தக் கட்டுரை முற்று முழுதாக  டானியல், நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா போன்றவர்களின்ரை இலக்கிய வரலாற்று முக்கியத்துவத்தை நிராகரிச்சுது. அவர்களின்ரை சிறுகதை களை ஒரு பிரஸ்தாபத்துக்குக்கூட வேதசகாயகுமாரின்ரை கட்டுரை எடுக்கேல்லை. அதுக்கு மறுப்பாய் நான் ஒரு கட்டுரையைப் பதிவுகள் டொட் கொம் இல் எழுதினன். அதற்கு ஜெயமோகன் மறுப்புக் கட்டுரையொண்டை ‘பதிவுகள்’ளையே எழுதினார். அந்தக் கட்டுரை என்ன சொல்லிச்சுது எண்டதை விளக்கிறதைக் காட்டிலும் அதுகின்ரை தலைப்பைச் சொன்னாலே எல்லாருக்கும் கருத்து விளங்கும். அது ‘ஒரு படைப்பை நிராகரிப்பதற்கு வாசகனுக்கு உரிமையுண்டு’ எண்டதுதான். அதற்கு நான் ஒரு பதில் எழுதினன். ‘ஒரு படைப்பை நிராகரிக்க வாசகனுக்கு உரிமையுண்டு. ஆனால் ஆய்வாளனுக்கு அந்த உரிமையில்லை.’ பொத்தம் பொதுவில டானியல், நீர்வை பொன்னையன் போன்றவையின்ரை கதைகளை ஒதுக்கும் மனோநிலை தமிழ்நாட்டிலை இப்பவும் இருக்கு. ஒதுக்கிறதெண்டது கலைத் தரம் எண்ட தளத்திலை சரியாயிருந் தாலும் சமூகத் தரங்கள்ள, அதன் வரலாற்று அடியிலை எப்பவுமே ஒதுக்க முடியாது. இவர்க ளின்ரை படைப்புக்கள் அந்தக் காலத்துக்குரிய நியாயத்தையும் சரியையும் கொண்டிருந்ததுகள். பிறகு மொழி அல்லது இனம் கார ணமான தளங்களிலை எழுந்த எழுத்தாளர்களிடையே ஒரு ஒட்டுண்ணித் தனமான கருத்துச் சத்துறிஞ்சல் வந்திட்டுது. இப்பவும் பரவலாய்த் தமிழ் நாட்டில அறியப்பட்ட செ.யோகநாதன், செங்கை யாழியான் போன்றவையின்ரை எழுத்துக்கள் வெகுசன வாசிப்பிற்கான சாதாரண நடையில சான்டில்யன் அல்லது புஸ்பா தங்கத்துரை போன்றவையின்ரை எழுத்துக்கள் மாதிரியிலேயே இருக்கு. ஒரு பிரச்சனையை எடுத்துக்கொள்ளுற விதம் கையாளுற விதம் எல்லாம் ஒண்டுதான். எங்களுக்கான மொழி நடை, மொழிப் பாவனைகளை விட்டிட்டு நாங்கள் எங்கையோ போய்க் கொண்டிருக்கிறம். இதைவந்து சுயமரியாதையற்ற எழுத்துக்க ளாய்த்தான் கொள்ளலாம்.

கற்சுறா: தமிழ் இலக்கியத்திலும் சரி, அரசியல் சூழலிலும் சரி இந்தத் தனித் தமிழ் வெறியர்களின் துன்பம் தாங்கேலாமல் இருக்கிறது. ஒரு மொழி அழிந்து போகக்கூடாது என்பதிற்கூடாக தமிழ்மொழியும் அழிந்து போகக்கூடாது என்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் இன்றுள்ள சூழல் ஒரு வன்முறை சார்ந்ததா கவே இருக்கிறது. தேசியம் பற்றிய ஆசையும் கற்புக் குறித்துக் கவலையும் படும் ஒரு குழு பெரியாரையும் ஆதரிக்கிறது. வெதுப்பகம்,வெதுப்பி, வாகன உதிரிப்பாக தொழிற்பாய்வு கூடம் என்று தமிழைப் பிய்த்தெடுக்கும் குழு தன்னைத் தமிழில் லெப்டின்ட் கேர்ணல் என்கிறது. இது உங்களுக்குச் சிரிப்பாக இல்லையா? சித்த சுவாதீன அல்லது கோமாநிலையில் நமது சமூகம் வந்திருப்பதாக நீங்கள் நினைக்கவி ல்லையா?

தேவகாந்தன்: படைப்பாளிகளிடத்தில் தனித்தமிழ் பற்றின விஷயத்தில் கருத்துருவாகியிட்டுது.  தனித்தமிழ் எண்டு ஒரு தமிழை  நாங்கள் இனிமேல் கொண்டுவர ஏலாது. ஆனால் ஆரம்பத்தில தனித்தமிழ் எண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதக்கான அரசியல் நிலை தமிழ் நாட்டிலை இருந்தது. தமிழ் நாட்டில பிராமணர்களின்ரை தமிழ், ஆதிக்கம் செலுத்துகிற ஒரு வகையாய் இருந்தது. அதை அழிக்கிறதுக்கு திராவிட இயக்கத்துக்கு ஒரு தேவை இருந்தது. அதுக்கு முன்னாலை தமிழும் சமஸ்கிருதமும் ஏறக்குறைய சம பங்காய்க் கலந்து எழுதுற முறை வந்திருந்தது. இதை இலக்கணம் மணிப்பிரவாள நடை எண்டு சொல்லிச்சுது. மணிப்பிரவாளமெண்ட ஒரு புது மொழியே உருவாகிற நிலை. இதுக்கு அப்பவிருந்த எழுத்தாளரும் கவிஞரும்தான் தெரிஞ்சோ, தெரியாமலோ துணையி ருந்தினம். அந்தநேரத்திலை மறைமலையடிகள் மற்றது பரிதிமாற் கலைஞர்  போன்றவையாலை இந்த மொழியாபத்து தடுத்துநிறுத்தப் பட்டது. அவையாலை துவங்கப்பட்ட தனித்தமிழ் இயக்கத்துக்கு அந்த நேரத்தில தமிழ்நாட்டில தேவை இருந்தது மெய். அப்ப தனித்தமிழ் இயக்கம் வடமொழிக்கு எதிரானதாய்த்தான் இருந்தது. இப்ப ஆரும் தமிழ் நாட்டில தனித்தமிழ்த் தேவை பற்றி அதிகமாய்ப் பேசுறதில்லை. இடைக்காலத்திலை ஜெயகாந்தன், சுஜாதா போன் றவை ஆங்கிலத்தை அதீதமாய்ப் பாவிச்சு தங்கடை படைப்புக்களைச் செய்தினம். அப்பகூட ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பாவிக்காமல் மக்களின்ரை பயன்பாட்டு வடிவத்திலை பாவிக்க வேணுமெண்டதுதான் அப்ப எழுந்த எதிர்ப்பின்ரை ஆதாரமாயிருந்தது. இப்பத்தைய எதிர்ப்பு ஊடகங்கள், குறிப்பாய் தொலைக்காட்சிகளிலை வாற தமிழுக்கெண்டா ஆர் அதைப் பிழையில்லையெண்டு சொல்லப்போகினம்? இங்கு கனடாவிலைகூட தனித்தமிழ் முயற்சிகள் இருப்பதாய் நான் அறிகியிறன். அந்த இயக்கம் சார்ந்த பத்திரிகையிலை எழுதுற போதுகூட அவை சொல்லக்கூடியதான மொழி வரைபுகளை ஏற்க மறுத்துதத்தான்   சுயாதீனமாய் எழுதினன். எனக்கு ஒரு பஸ் வந்து பஸ்சாய்த்தான் இருக்கு. எனக்கு பேக்கரி பேக்கரிதான். பாண் பாண்தான்.  ஆனால் இதைவிட உயர்ந்த மட்டத்துக்குப் போய் பாணுக்கு ஏன் தமிழிலை ஒரு சொல் இருக்க்கூடாதெண்டு நான் நினைக்கலாம். ஆனா அது அகராதிக்கானதோ அல்லது கலைச்சொல் தொகுதிக்கானதாயோதான் இருக்க ஏலும். அதை நடை முறைப்படுத்தவேணுமெண்டு நான் நினைக்கமாட்டன். எனக்கு வந்து நிசங்கம், ஆதர போன்ற சிங்களச் சொல்லுகள் கூட பிரியமா னதாய் இருக்கு. நான் அதை நிறையவே எனது படைப்புக்களில பயன்படுத்தியிருக்கிறன். காதல் எண்ட சொல்லை விட கூடுதல் அர்த்தம் பொதிந்த சொல் ஆதர. அந்தவகையில அவை முக்கிய மானவை. ஆனா அவை இயல்பிலை வந்து கலந்த சொல்லுகளாய் இருக்கவேணுமெண்டது எல்லாத்தையும்விட முக்கியம். திருப்புழி எண்ட சொல் என்ரை கிராமத்திலை தச்சுவேலை செய்யிற ஆக்கள் பாவிச்ச மொழி. அதுக்குப் பதிலாய் ஸ்குரூ ட்ரைவர் எண்டு படிப் பிச்சால் அதைப் பிழையெண்டு சொல்ல நான் தயங்கமாட்டன். அதையும் சூழ்நிலைக்குத் தகதான் செய்யவேணும். கனடாவிலை திருப்புழியெண்டுதான் பாவிக்கவேணுமெண்டு நான் நிண்டா அது எப்பிடிச் சுவாதீனமானதாகும்? அது இப்ப அகராதிக்கானது. மக்களிடமிருந்து பெறப்பட்டதேயானாலும்கூட.

ஒரு படைப்பாளிக்கு தன் மொழி மகத்தானது. அதன் வாழ்வு அப்படைப்பாளியின் ஜீவநிலைப்பாட்டோடை கூடினது. மொழி யில்லாமல் படைப்பில்லை. ஏன், சிந்தனையேயில்லை.

மேலை நான் சொன்னதுகள் ஒரு படைப்பாளியாய் என்ரை கருத்து. மற்றப்படி, இது மொழிகளின்ரை இயல்பு தெரிஞ்ச மொழியாய்வாளராலை தீர்மானிக்கப்படவேண்டிய விஷயமே. நாங்களும்  சிந்திப்பம்.

தேவதைகளின் தீட்டுத்துணி…
வடலி வெளியீடுகளான நான்கு நூல்கள் அறிமுகத்தில்

தேவதைகளின் தீட்டுத்துணி.

கற்சுறா

ரொரன்ரோ தமிழ் இலக்கிய உலகமும் வழமையான தமிழ் இலக்கிய உலகம் போல் மிக விசித்திரமானது. எப்போதும் தனக்கு முரணானது குறித்து பேசுவதற்கு அச்சப்படும். தனக்கு இயைபான தன்னுடைய இருத்தலுக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு பாதையை அது எப்போதும் தெரிவு செய்யும். மிகக் கேவலம் என்னவென்றால் பரந்து பட்ட கருத்தியலுக்குள் விவாதத்தைத் தொடங்குவாதாக பொதுவெளியில் பாசாங்கு காட்டினாலும் ஒரு தலையாட்டியாய் ஒரு கிறீஸ் மனிதனாய்த்தான் உள்ளுக்குள் தமிழ் இலக்கிய உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ரொரன்ரோ தமிழ் இலக்கிய சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. வெளியில் ஒருகதை உள்ளுக்குள் ஒரு கதைதான். இதற்குள் இருந்துதான் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

09 Oct 2011வடலி வெளியீட்டகத்தின் நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வு Scarborough civic centre 150 Borough Drive. Scarborough, Ontario

இல் நடந்தது. நிகழ்விற்கு தில்லைநாதன் அவர்கள் தலமை தாங்கினார். அறிமுகத்தை மயூ மனோவும் அருண்மொழிவர்மனும் ரதனும் நானும் செய்தோம்.  1980களின் ஆரம்ப காலங்களில் மல்லாவியில் நடைபெற்ற எற்த அரசியற் கூட்டங்களானாலும் தில்லைநாதன் அவர்களின் பேச்சில்லாத கூட்டம் இருக்காது. அவர் ஈழப் புரட்சியமைப்பின் சார்பில் பேசுவார். முரண்பாடுகளுக்கப்பால் குறிப்பிட்ட இயக்கங்கள் சில ஒன்றாக கூட்டத்தில் பேசக்கூடிய காலம் அது.  புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் அமைப்புக்கள் ஒரு பொதுக்கருத்தில் ஒன்றாகக் கூடிக் கூட்டம் வைக்கக் கூடிய காலமாக 80களின் ஆரம்பங்கள் இருந்தன. மிக அவதானமாக அந்த மக்களின் வாழ்விலிருந்து உணர்ந்து கொள்ளும் பேச்சாக இருக்கும். ஈ.பி.ஆர்.எல்.எவ் ரொனால்டும் ஈரோஸ் தில்லைநாதனும் இல்லாத கூட்டம் -சப்- என்றிருக்கும் எங்களுக்கு. அப்போது எனக்கு இரத்தம் சூடேறக்கூடிய 15, 16 வயது. அவரது பேச்சுக்காகக் காத்திருப்போம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் தனது ஒருபக்க வாழ்வைத் தொலைத்தவர் அவர். இன்று அவர் கூட்டத்தைத் தலைமை தாங்க அதில் நான் பேச கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. அவரிடமிருக்கும் பல்வேறு அனுபவங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்ய வேண்டுமென்ற தேவையை கூடியிருப்பவர்கள் கருதுவேயி;ல்லை. முடிந்தவரை அவை பதிவு செய்யப்படவேண்டும்.

கூட்டத்திற்கு ஒரு கிழமையின் முன்  வடலி வெளியீட்டகத்து நான்கு நூல்கள் அறிமுகம் நடைபெறவுள்ளதாகவும் அதில் கலையரசனின் நூலை என்னை அறிமுகம் செய்யமுடியுமா என்பதாக தா. அகிலன் கேட்டார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கனடாவில் யாரும் என்னை எதுவும் பேசக்கேட்டது இல்லை. சரி ஆள் இல்லாமல் கேட்கிறார் என்று நினைத்தும் கேட்டதை ஏன் விடுவான் என்று நினைத்தும் உடனே ஓம் என்றேன். ஆனால் கலையரசன் புத்தகம் குறித்து நான் எதுவும் அறியவில்லை. அவருடைய கட்டுரைகளை வாசிக்கவில்லை அதனால் 7நாளில் அதுகுறித்துத் தேடமுடியாது என்று சொல்லிவிட்டேன். தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுப்பைத் தந்தால் நான் தயார் படுத்துவேன் ஏனென்றால் அதுபற்றி வந்த குறிப்புக்களையாவது வாசித்திருக்கிறேன். யோ. கர்ணன் கதைகள் இரண்டு வாசித்திருக்கிறேன். நான் புத்தகம் பார்க்கவில்லை. ஆனால் தந்தால் எனக்கு 7நாள் போதும் என்றேன். அப்படியில்லை கொலை நிலம்  குறித்து செய்வதாக இருந்தால் எனக்கு புத்தகமே தேவையில்லை நான் இரண்டு மணிநேரம் பேசுவேன் தருவீர்களா என்று கேட்டேன் அகிலன் சிரித்தார். பலமாகச் சிரித்தார். பின் அருண்மொழிவர்மன் செய்கிறார். அதனை மாற்றமுடியாது என்றார். நானும் சும்மா பகிடிக்குக் கேட்டேன் என்றேன். பின் மயூமனோவிடம் இருந்து யோ. கர்ணனது தேவதைகளின் தீட்டுத்துணி நூலை வாங்கினேன்.

இனி நான் அங்கு பேசியதும் பேசாததும்…

தேவதைகளின் தீட்டுத்துணி. மிக அருமையான தலைப்பினைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. 10க் கதைகள் அடங்கியது இந்தத் தொகுப்பு. தொகுப்பின் சில கதைகளை ஏற்கனவே வாசித்திருந்தாலும் ஒருகிழமைக்கு முன் கிடைக்கப் பெற்றாலும் வாசிக்கும் போது மிகுந்த பரிச்சயத் தன்மைக்கு வந்து விட்டன அக்கதைகள்.ஆகஸ்ட் 2010இல் அச்சுக்குச் சென்ற இக்கதைகள் அதிகமானவை 2009 மே மாதத்திற்குப்; பின் அதவது முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின் எழுதப்பட்டவை. முழுக்க வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர்க்காலங்களை மையப்படுத்தி எழுதியவை. அதனால் தான் அவை மிகச் சுலபமாகப் பரிச்சயமடைந்து விட்டன. பொதுவாக நாம் அனுபவித்த கேள்வியுற்ற சம்பவங்கள் கதையாகியிருக்கின்றன.

2. இந்தத் தேவதைகளின் தீட்டுத்துணித் தொகுப்பிற்கு பின்னரே எனக்கு யோ.கர்ணண் அறிமுகமாகிறார். அவருடைய கடந்த காலம் என்பது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து செயற்பட்டார் என்பதற்கப்பால் எதுவும் தெரியாது. அவர் என்ன எழுதினார்? என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என எதுவும் தெரியாது. இந்தக் கதைகள் மூலம் அறிமுகமாகும் யோ. கர்ணன் அவர்களது எழுத்து குறித்து உண்மையில் இப்போது அப்பட்டமாக எதையும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் நாம் கடந்து வந்த யுத்தம் என்பது அசிங்கத்தால் நிரம்பியது. வெறும் ரத்தங்களாலும் சதைகளாலும் அழுகுரல்களாலும் நிரம்பியது என்ற பகட்டுச் சொல்லாடலை விடுத்து சுயநலங்களாலும் முட்டாள்தனங்களாலும் ஏமாற்று வார்த்தைகளாலும் துவேசங்களாலும் வெறியூட்டல்களாலும் நிரம்பியது என்பதை நாம் இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் சொல்கிறேன் கர்ணனது எழுத்துக்கள் குறித்து இப்போதைக்கு எதையும் அப்பட்டமாகச் சொல்லமுடியாதுஎன்று.

உண்மையில் இந்தத் தேவதைகளின் தீட்டுத்துணி சிறுகதைத் தொகுப்பிற்கு இருக்கின்ற முக்கியத்துவம் என்னவென்றால் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் நடைபெற்ற யுத்தங்களுக்கிடையில் ஒரு போராளியாக வாழ்ந்த – அதில் பங்கு கொண்ட ஒருவர் தனது சாட்சியங்களைக் கதையாகப் பதிவு செய்வது என்பதே. அந்தக் கதைகள் சொல்லும் உண்மைத் தன்மை என்பதை-  யோ. கர்ணன் போன்றவர்கள் தான் பதிவு செய்ய முடியும். அந்த வகையில் இறுதியுத்தம் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்காலில் முடியும் வரையான இரண்டுவருட காலப்பகுதியில் பெறப்பட்ட அனுபவங்களை தன்னளவில் பதிவு செய்திருக்கிறார். விடுதலைப்புலிகளிடமிருந்தும் இராணுவத்திடம் இருந்தும் தம்மைப்பாதுகாக்க மக்கள் பட்ட அவஸ்தைகள் கதையெங்கிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தளவில் இந்தத் தொகுப்பின் அவசியம் இருக்கிறது. முக்கியமாகிறது.

6. புலிகள் இயக்கத்திற்கு விரும்பியும் கட்டாயத்தின் பேரிலும் போனவர்களுக்கு இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதிருக்கும் கோபம் மிகப்பெரியது. அவர்கள் யாரையுமே  இந்த சமூகம் தன்னுடைய அங்கத்தவர்களாகப் பொதுவாழ்வில் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அப்படியிருக்க அங்கவீனர்களாகத் திரும்பிவந்தவர்களை பொதுவாழ்வில் இந்த சமூகம் எந்தத்தளத்தில் ஏற்றுக் கொள்ளும் என்பதை நாம் மிக இலகுவாக உணரலாம்.

இத்தொகுப்பில் இரண்டாவது கதை மன்னிக்கப்படாதவனின் கைத் தொலைபேசி என்ற கதை. அதில் வரும் அப்பண்ணா என்ற பாத்திரம் இயக்கத்தை விட்டு விலத்தி கொழும்பில் நிற்கிறார். ஒரு காலில்லை. அந்த பாத்திரம் இந்த சமூகத்திற்கு சொல்கிறது

எனக்கு ஒரு காலில்லை ஏன்? நான் போராடின்னான்.

எனக்கு வேலையில்லை ஏன்? நான் போராடின்னான்.

எனக்கு ஒரு உறவில்லை ஏன்?… நான் போராடின்னான். என்று இந்தச் சமூகத்தின் மீது கோபப்படுகிறது.

7. பெயர் என்ற சிறுகதை இயக்கத்தில் சேர்ந்தவுடன் வைக்கப்படும் பெயர். மற்றும் கடைகளுக்கு வைக்கும் பெயர்களில் சுத்தத் தமிழ் இருக்க வேணும் என்று கட்டாய சுத்ததமிழ்ச் சட்டம் புலிகளால் கொண்டுவரப்பட்டது. வெதுப்பம் வெதுப்பி என்று இயக்கம் அல்லோல கல்லோலப்பட்ட நேரம் ஒருவன் படும் அவஸ்தையைச் சொல்லிச் செல்கிறார். ஆனால் பாருங்கள் மகிழூந்து தொடக்கம் உலங்கு வானூர்தி வரை  சுத்த தமிழ்ப் பெயர் மாற்றிய புலிகள் லெப்ரினன் கேணல் செக்கண்ட் லெப்பிரின் என்பவற்றை கடைசிவரை புலிகள் மாற்றவில்லை. அவர்களுக்குத் தெரியும் அவற்றை தமிழ்ப்பெயருக்கு மாற்றினால்அது கட்டாயம் அசிங்கமாக இருக்கும் என்பது. (இவற்றை திரும்பத் திரும்பச் சொல்வதால் புலியெதிர்ப்பு புலிக் காய்ச்சல் புலிகளைக் குற்றம் சொல்வது வசைபாடுவது என்று குறை சொல்லும் நண்பர்களுக்கு திரும்பத் திரும்பச் சொல்கிறோம் புலிகள் அழித்தது ஒரு நபரையோ ஒருகுழுவையோ அல்ல. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் மூன்று இனத்தை. மூன்று காலத்தை அதன் வரலாறை என்பதைக் கவனியுங்கள்)

அடுத்து தஸ்யுக்களின் பாடல்கள் ஒரு அரூப மொழியில் எழுதப்பட்ட சிறுகதை.இது எந்தக்காலப்பகுதியில் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. யோ.கர்ணன் அவர்களது சூழலில் 2009க்குப் பின் இந்தக்கதை எழுத அவசியமில்லாமல்தான் இருக்கிறது. அந்தக்கதை மிகப்பெரிய ஒரு வரலாற்றைத் தன்னகத்திலிருந்து வெளிப்படும் மொழிகளுக்குள்ளால் பிரித்துக்காட்டத் தோன்றியபோதும் அது பூர்த்தி பெறவில்லை. முழுமையடையவில்லை.

தேவதைகளின் தீட்டுத் துணி என்ற சிறுகதை இயக்கத்திற்கு கட்டாய ஆள்பிடித்துக் கொடுத்தவன் தான் மெனிக் பார்மில் ஆமிக்குத் தலையாட்டியாய் இருந்து தப்பிவந்த புலிகளைக் காட்டிக் கொடுக்கிறான். ரூட் கதை தமிழ்ர்களது வாழ்வில் கிளாலி ரூட். கொம்படி ரூட் நந்திக் கடல் ரூட். தாய்லாந் ரூட் என்று எப்பொழுதும் ரூட் மயமாகி இருப்பதைச் சொல்கிறது. இந்தத் தொகுப்பில் இல்hலத அவரது சிறுகதை ஒன்று திரும்பிவந்தவன் எனும் கதை. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளுக்குப் பின் எழுதியதொரு கதை. அவற்றிலிருந்து கொஞ்சம் அதாவது அதன் புனைவுத் தன்மையில் மாற்றமுள்ள கதை. படித்துப் பாருங்கள்.

உண்மையில் ஒரு படைப்பு என்பது கதையோ கவிதையோ எதுவானாலும் காலத்தின் பதிவாக இருப்பது ஒருபுறமிருக்க அவற்றின் புனைவுத் தன்மை பெறுமதி மிக்கதானதாக இருக்க வேண்டும். இங்கு அது சாத்தியப்படவில்லை. வரலாற்றின் பதிவாக இருப்பதற்கப்பால் புனைவுத்தன்மையில் தோற்றுவிடுகிறது. ஒரு வாசகனை இந்தக்கதைகள் ஒருபோதும் குழப்பவதில்லை. மறுமுனையில் தமக்காகத் தயார்படுத்தப்பட்ட தங்களுக்குரிய மொழியிலேயே கதை சொல்லப்படுவதை அவர்கள் நன்றாக விரும்புகிறார்கள். சிலாகிக்கிறார்கள். இந்தப்புத்தகத்தில் இடம் பெறும் அநேக கதைகள்… றூட் கதையானாலும் சரி சுதந்திரம் கதையானாலும் சரி மிக இலகுவாக வாசகனைக் கைப்பற்றி விட மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது வாசகன் வழமையாக உரையாடும் மொழியிலேயே கதை சொல்லப்படுகிறது. ஒரு கதை வாசித்து முடிந்தவுடன் வாசகனின் மனதிற்குள் கதை ஆரம்பிக்க வேண்டும். அத்தன்மை இந்தக் கதைகளில் நிகழவில்லை. வெறும் சம்பவங்களின் கோர்வையாக பரவிவிடுகிறது.

வாசிக்கும் போது அத்தகைய தருணங்களை க. கலாமோகனின் கதைகளில் காணமுடியும்.  பாருங்கள் கடைசிப்புத்தகம் கதை உயிர் மெய்5இல் வந்தது.

-நான் அவளைக் கற்பழித்தேன். எனது பசி முடிந்ததும் அவள் என்னிடமிருந்து தப்புவதற்காகக் கெஞ்சினாள். நான் அவளது கழுத்தைத் திருகினேன். துடித்தாள். மீண்டும் கெஞ்சினாள்.அவள் வழிகள் மூடப்படும் வரை நான் அவளைத் திருகினேன். அவளது பிணம் நிர்வாணமாக. நான் பொலீஸ் ஸ்ரேசன் சென்று நான் இளம் பெண்ணைக் கற்பழித்தும் கொலையும் செய்து விட்டேன். எனச் சொன்னேன். எனக்குப் பைத்தியம் எனச் சொல்லி என்னை அவர்கள் வெளியே துரத்தினார்கள். மறுநாள் காலைப் பத்திரிகையில் அவள் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட செய்தியும் அவளைக் கொன்றவன் படமும் இருந்தது. அது எனது படமாக இருக்கவில்லை.- என்று கதை தொடங்கும். கதை வாசகனை உள்ளாரக் கொல்லவேண்டும். இல்லையேல் கதை சொல்லி வாழமுடியாது. இது யோ. கர்ணனது கதைகளில் நிகழவில்லை.

மற்றது இந்தத் தேவதைகளின் தீட்டுத் துணி எனும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு நாம் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிராத பேசாப் பொருட்களைப் பேசுகின்றன எனச் சொல்லப்படுகிறது.

விடுதலைப் புலிகள் குறித்த எதிர்வினைக் கதைகள் அல்லது கட்டப்பட்ட தமிழ்த் தேசியம் குறித்த எதிர்வினைக் கதைகள் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலங்களிலேயே வந்திருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து எழுதமுடியாது – எழுதப்படவில்லை என்பது உண்மையாயினும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழர்கள் வாழ் பகுதிகளை முடிந்தளவு தமது கட்டப்பாட்டில் தான் வைத்திருந்ததார்கள். விடுதலைப்புலிகளின் அழிவின் கடைசியில் வெளியேறிய யோ. கர்ணன் அவர்கள் வன்னிப்பிரதேசங்களில் புலிகளின் வன்முறை கொடிகட்டிய தருணங்களில் கட்டாயபிள்ளை பிடித்த அந்த 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் என்ன மனநிலையில் இருந்தார் எவ்வiகான கதைகளை எழுதினார் என்பது நமக்கு முக்கியம்.

இன்று சொல்லப்படும் பேசப்படாத விடையங்கள் என்பதை சக்கரவர்த்தி 1990களில் எழுதினார்.

ஒரு மருதமுனை முக்கால்.. என கொச்சத்தனமாக சொல்லும் கணபதி என்ற தமிழ் ஈழத்தவனால் ஒரு1500ரூபாக் காசுக்காக அந்த முஸ்லீமை கொலைசெய்து கையோடு கம்மாரிசு அடிக்கும் அற்புதமான சிறுகதையை சக்கரவர்த்தி எழுதியபோது உடலெல்லாம் சிலிர்த்தது. போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர் எவரோ -அவரே ஈழம் ஈன்னமும் எரிந்து கொண்டிருக்கக் காரணம் என்பேன் என 90களில் எழுதியவர் சக்கரவர்த்தி. அவரின் யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத் தொகுப்பை சபாலிங்கம் கொலை செய்யப்பட்ட மண்ணிலிருந்து நாதன் கஜனைச் சுட்ட மண்ணிலிருந்து தான் வெளியிட்டோம். உண்மையில் அதன் அட்டைப்படம் பார்த்திருப்பீர்கள் கருணா செய்து அனுப்பியபோது மனம் மரணத்தை நனைத்தது.  ஆனால் அந்தக் காலங்களில் இருந்து இன்றுவரை எங்களை வெறுமனே புலி எதிர்ப்பாளர்கள் மட்டும் என்று அடையாளப்படுத்தியவர்கள் பலர்.

புனாவும் அதன் துனாவும் என்று ஒரு இன்னரலிஜன் புலிப் பெண் தனது கணவனையே கொல்லும் கதையை ஜீவா எழுதினார். அவற்றை சமூகம் வெறும் புலி எதிர்ப்பக் கதை என்று அப்போது பேசாது மௌனம் காத்தது.

ஆக எழுதப்படும் காலங்கள் முக்கியம். ஆனாலும் விதுல்ராசாவைப்போல் தீபச் செல்வனைப்போல் அல்ல யோ. கர்ணன் என்பதை அவரின் எழுத்துக்கள் நமக்குக் காட்டுகின்றனதான்.

மற்றது இந்தத் தொகுப்பிலுள்ள அடிக்குறிப்புகளது தேவை என்ன? ஒரு கதை சொல்லிக்கு இருக்க வேண்டிய தேவையை விடுத்து விளக்கமளிப்புக்கு முனையும் தன்மை எதற்காக உருவாகிறது. மைன்ஸ்  என்பதற்கு கண்ணிவெடி என்றும் கிளைமோர் என்பதற்கு ஒருவகை வெடிகுண்டு என்றும் இன்ரலிஜன்ஸ்க்கு புலனாய்வுத் துறை என்றும் லாவோஜித் என்பது ஒருவகைத் தேயிலை என்றும் சோல் பண்ணுவது தீர்த்து வைப்பது என்றும் விலத்தீற்றன் என்பதை விலத்தி விட்டேன் என்றும்  அடிக்குறிப்பு விளங்கப்படுத்தல்கள் யாருக்கு இடப்பட்டுள்ளது? கட்டாயமாக இது தமிழ் நாட்டு பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்குத்தான். தமிழ் நாட்டு வாசகர்களைத் திருப்திப்படுத்த வேண்டியநிலைக்கு யோ.கர்ணன் அவர்கள் ஏன் வரவேண்டும்?

அப்படியானால் மொளகாப் பொடிக்கும் சிலுவைராஜ் சரித்திரத்துக்கும் அடிக்குறிப்புக்களாக இன்னொரு புத்தகம் விடவேண்டிவரும்.ஒரு கதை சொல்லிக்கு இருக்கவேண்டிய தேவை ஒரு போதும் அடிக்குறிப்பு விளங்கப்படுத்தல்களல்ல. வாசகன் தேடி வாசிக்க வேண்டும்.

கனடாவில் பார்க்கிங் லொட்டில் பிச்சை எடுத்து  பிசாபிசாவில் பிசாத்துண்டு வேண்டினான் என்றோ பாரிசில் செயின் நதிக்கரைத் தெருக்களில் வைன் கோஸ்டிகளுடன் குடித்தது பற்றியோ கதை எழுதினால் தமிழ்நாட்டுக்காரர்களிடம் பெயரெடுத்து விடலாம். மனிசிய புத்திரன் ஆனந்தவிகடன் போன்றவர்கள் சிறந்த சிறுகதை என்ற அவார்டும் தரலாம். ஆனால் கர்ணனுடைய எழுத்துக்கள் அந்த நிலையை பெற்றுவிடக்கூடாது என்பதே எனது விருப்பம்.

இந்தத் தொகுப்பிலும் மற்றும் பின் எழுதிய திரும்பி வந்தவன் போன்ற சிறு கதைகளிலும் ஒரு சிறுகதை எழுத்தாளனுக்குரிய மனம் அந்த வித்தை கர்ணனிடம்  பெறக்கூடியதாகவே இருக்கிறது. இருந்தாலும் மனதுக்குள் கிடந்து உருமாறக்கூடிய மனதை மாறி மாறி சிதைக்கக் கூடிய  சிறுகதைகளையே  புனைவுத்தளத்தில் கர்ணனிடம் நாம் எதிர்பார்ப்பது. மற்றப்படி சம்பவங்களைப் பதிவாக்குவதில் அவை வெற்றியீட்டுகின்றன.

முருகபூபதியின் பதில்
எஸ்பொ அவர்களிடம் கனடாவந்திருந்தபோது இடைமறிக்கப்பட்டுக் கேட்கப்பட்ட கேள்விகள் இரண்டு. அவரிடம் பேச நிறைய இருந்தும் அண்மைக்கால முரண்பாடுகள் குறித்து முக்கியத்தவப்படுத்தலிலேயே நாம் அக்கறை கொண்டோம்.  எஸ்பொவின் இடைமறிப்பு போதமையாக இருந்தது எனவும் கடுமையாக இருந்தது எனவும் எஸ்பொ அவர்களின் பதில்களில் இருக்கும் தனிப்பட்ட தாக்குதல்களை வெட்டியிருக்கலாம் எனவும் நண்பர்கள் குறிப்பிட்டார்கள். அதற்குமப்பால்  எஸ்பொ அவர்களது பதில்கள் குறித்துச் சங்கடப்படுவோர் அவர் இப்படிச் சொல்லியிருக்கமாட்டார் கற்சுறா பொய் சொல்கிறான் எனச் சொல்பவர்களும் உள்ளார்கள். அவரது உரையாடல் வீடியோ வடிவிலேயே உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அனைவரது பார்வைக்கும் முன்வைக்கிறேன். அவசர அவசரமாக வெளியிடுவதற்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நமது தொழிநுட்ப அறிவின் பற்றாக்குறைதான் காரணம். இதற்கிடையில் நண்பர் முருகபூபதியிடமிருந்து  மறு- பதில் ஒன்று வந்திருக்கிறது. அதனை இங்கு பிரசுரிக்கிறோம்.

கற்சுறா

பொன்னுத்துரையின் புரட்டல்கள்தான் அவரது வரலாற்றில் வாழ்தல்.

- முருகபூபதி

வாழ்நாள் பூராவுமே ஒருவன் பொய்பேசியும் செல்லும் இடமெல்லாம் அவதூறுகளைப்பரப்பியும் பித்தலாட்டங்கள் புரிந்தும் வருவானென்றால் நிச்சயமாக அவன் கலகக்காரனாக இருக்கமாட்டான். மனநோயாளியிடம்தான் இத்தகைய பண்புகள் அதிகமாக இருக்கும். தகுந்த சிகிச்சை கிட்டாதுபோனால் தனக்குத்தானே பகைவனாகி தானும் சீரழிந்து தனது ஊக அடிப்படையிலான பிதற்றல்களுக்கு பலியாகிப்போகின்றவர்களையும் சோர்வடையச்செய்து மனநோயாளியாக்கிவிடுவான்.

இங்கே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொண்டு வாய்க்கு வந்தபடி புலம்பித்திரியும் ஒருவர் பற்றித்தான் பதிவுசெய்கின்றேன். அந்த நபர் எஸ்.பொன்னுத்துரை.

கனடாவில் சமீபத்தில் தனக்கு வழங்கப்பட்ட இயல் விருதுபெற்று சிலநாட்களுக்குள்ளாகவே தன்னை இந்த விருதுக்கு தெரிவுசெய்தவர்களை   நபுஞ்சகர்கள் என்று கற்சுறாவுக்கு தெரிவித்ததிலிருந்தே இந்நபரின் குண இயல்புகளை புரிந்துகொள்ளமுடியும்.

ஊரில் சொல்வார்கள் ‘விருந்து கொடுத்த இலையிலேயே மலம் கழித்துப்போகின்றவன்’ என்று அத்தகைய மனிதன்தான் இந்த எஸ்.பொ.

நாம் இலங்கையில் நீண்டகாலம் திட்டமிட்டு நடத்தி முடித்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராக கற்சுறா சொல்வதுபோன்று முதல் கொள்ளி வைத்தவர்தான் இந்த மனிதர். வாழ்நாள் பூராவுமே மற்றவர்களுக்கு எதிராக குறிப்பாக நண்பர்களுக்கு எதிராக அவதூறுகளைப்பரப்பிவிட்டு அந்த அவதூறுகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டதும் ஊகத்தின் அடிப்படையில் சொன்னேன் என்று தப்பித்து ஓடும் இந்நபரின் வரலாற்றில் வாழ்தல் அத்தகையதே.

காலம்பூராவும் பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, மௌனகுரு, டானியல், மல்லிகை ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன் உட்பட பலரை கேவலமாகத்திட்டியும் அவதூறு பொழிந்தும் காலத்தைக்கடத்தினார்.

ஜீவாவுக்கும் டானியலுக்கும் தான்தான் எழுதிக்கொடுத்தேன் அவர்களின் பெயரையே தனது புனைபெயராக்கி எழுதி அவர்களுக்கு பிரபலம் தேடிக்கொடுத்தேன். படைப்பு இலக்கியத்தில் தான்தான் அவர்களுக்கு குதிரை ஓடினேன் என்றெல்லம் அறிக்கை விட்டவருக்கு அரசாங்கப்பரீட்சையில் யார் குதிரை ஓடினார்கள் என்று நாமும் இவரைப்போன்று  ஊகத்தின் அடிப்படையில் கருத்துச்சொல்ல முடியும்.

எமது சர்வதேச எழுத்தாளர் மாநாடு தொடர்பாக இவரிடம் ஆலோசனை கேட்க பலமுறை தொடர்பு கொண்டபோதும் தந்திரமாக தவிர்த்துக்கொண்டு தனது சென்னை மித்ர பதிப்பக விற்பனை தொடர்பான பிஸினஸ் டீல் முறிவடைந்ததைத்தொடர்ந்து சுமார் ஆறுமாதம் கழித்து குமுதம், விகடன், கீற்று இணையத்தளம் ஆகிய குழுமங்களிடம் அவதூறு பரப்பி கொள்ளிவைத்து அந்த நெருப்பில் குளிர்காய்வதற்கு தம்மோடு பலரையும் அழைத்துக்கொண்டவர். இப்போது ‘ஊகம்’ பற்றி சொல்லப்புறப்பட்டுள்ளார். இவரது மாநாட்டு எதிர்ப்பின் ரிஷி மூலம் விரைவில் ஆதாரங்களுடன் அம்பலமாகவிருக்கிறது.

இம்மாநாடு தொடர்பாக  2010 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் ஆலோசனைக்கூட்டம்  நடந்தகாலப்பகுதியில்  இலங்கையில் நின்றவர்கள்தான்   ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும்,  நடேசனும். இவர்கள் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவிலிருந்து மாவை நித்தியானந்தன், சட்டத்தரணி ரவீந்திரன், டொக்டர் வாமதேவன், ஜெயந்தி விநோதன்,     மங்களம் ஸ்ரீநிவாசன்( லக்ஷ்மண ஐயரின் மகள்) ஆகியோரும் கொழும்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் எனது அழைப்பை ஏற்று அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவருமே எனது நண்பர்கள். அவர்களது அரசியல் இலக்கிய கருத்துக்களுக்கு அப்பால் அவர்கள் எனது நண்பர்கள்.   சகிக்கவே முடியாத கருத்துக்களைச்சொல்லும் எஸ்.பொ.வும்  ஒருகாலத்தில் எனது  நண்பராக இருந்தவர்தான். பொன்னுத்துரைக்கு அவதூறு பொழிவதற்கு  பல சாட்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக நடேசன், ரஜேஸ்வரியின் பெயர்களை பயன்படுத்துகிறார்.

பல வருடங்களுக்கு முன்னர் மல்லிகைக்காரியாலயத்தில் மாநாட்டு யோசனை முன்வைக்கப்பட்டபோது கூட அவர்களுக்கு இந்த மாநாட்டுடன் எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை. பொன்னுத்துரையிடம் ஆலோசனை கேட்க முயன்றது போலவே அவர்கள் உட்பட இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நூற்றுக்கணக்கானோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. கற்சுறா குறிப்பிடுவதுபோன்று பொன்னுத்துரைக்கு, காசி. ஆனந்தன் உட்பட பலரை திருப்திப்படுத்தவேண்டியிருந்தது அவரது காலத்தின் சோகம்.

இதே காசி ஆனந்தனை, அமிர்தலிங்கம் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலின்போது மட்டக்களப்பு தொகுதியில் இராஜதுரைக்கு எதிராக நிறுத்தியபோது, அந்த உணர்ச்சிக்கவிஞரின் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக இராஜதுரைக்கு ஆதரவாக மேடைகளில் தோன்றி பேசியவர்தான் இந்தப் பொன்னுத்துரை.

அதிலே பிரசித்தி பெற்ற பொன்னுத்துரையின் வசனத்தை சமீபத்திலும் இலங்கையில் ஒரு இதழ் பதிவு செய்தது. “ இராஜதுரை போக்கிலி. அவரைவிட கடைகெட்ட போக்கிலிதான் காசி ஆனந்தன்.” இதுவே பொன்னுத்துரை மலர்ந்தருளிய வாசகம். இராஜதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சரானதும் அவரது பொறுப்பிலிருந்த பனம்பொருள் அபிவிருத்திச்சபையின் தலைவர் பதவிக்கு கனவு கண்டவர்தான் இவர். அந்தக்கனவு பலிக்காமல் நைஜீரியா சென்றார்.

இனச்சங்காரம் புரிந்த ஒரு அரசில் பதவிக்கு காத்திருந்தவர்  விடுதலைப்போரில் தன்னை ஆகுதியாக்கிக்கொண்ட புதல்வனின் பெயரில் குதிரை ஓடுகிறார்.

புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலைமைத்துவத்தைப்பெற்றுக்கொள்ளும் ஒரே ஒரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நான் முன்னிற்று உழைத்ததாகவும் கற்சுறாவுக்குச்சொல்கிறார் இந்தப்பொய்யர்.

புலிகள் வாழ்ந்த காலத்திலேயே நான் இலங்கையில் யாழ்ப்பாணம் சென்று 1986 இல் நல்லூரில் நடந்த மாநாட்டில் கலந்து பேசியிருக்கின்றேன். புதுவை இரத்தினதுரையும் எம்முடன் இணைந்திருந்தார். கவியரங்கில் பங்கேற்றார். கவிஞர் சேரனும் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்தான். அச்சந்தர்ப்பத்தில் நானும் பிரேம்ஜியும் மல்லிகை ஜீவாவும் புலிகளுடன் உரையாடியும் இருக்கின்றோம்.

அவுஸ்திரேலியாவிலும் புலிகளுக்கு மத்தியில் இலக்கிய விழாக்கள் நடத்தியிருக்கின்றேன். பொன்னுத்துரையையும் அழைத்து பேசவைத்துள்ளேன். அவரை பாராட்டி கௌரவித்துமிருக்கின்றோம்.  ஆனால் இங்கிருந்த புலிகள் ஆயுதம் ஏந்தாதவர்கள். கழுத்தில் சயனைற் அணியாதவர்கள். அதாவது பொன்னுத்துரையைப்போன்று.

இந்தப்பொன்னுத்துரை 1989 ஜனவரி 19 ஆம் திகதி எனக்கு எழுதிய கடிதம் இப்பொழுதும் என்னிடமிருக்கிறது. அந்தக்கடிதம் எனது கடிதங்கள் நூலிலும் இடம்பெற்றுள்ளது. அக்கடிதத்தில் தனது மனச்சோர்வு குறித்து பின்வருமாறு எழுதியிருந்தார்:- “நைஜீரியாவிலே மிகவும் ஓய்வான- மிகவும் மெதுவாகச்செல்லும் ஒரு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவன் நான். ஆனால் இங்கு (அவுஸ்திரேலியாவில்) எந்திரகதியில் நடமாடுபவர்ளுக்கு மத்தியிலே செயற்கையான புன்னகைகளை உதட்டிலே ஏந்திக்கொண்டு நடமாடுபவர்களுக்கு மத்தியிலே வாழ்வதற்கு கஷ்டமாக இருக்கின்றது.

நாம் எப்படிவேண்டுமானாலும் நைஜீரியாவிலே வாழலாம். யாரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார்கள். குடி- கூத்தி என்பன ஆண்மையின் பிரிக்க முடியாத அம்சம் என்று அவர்களாலே அங்கீகரிக்கப்படுகின்றது.  நெடுஞ்சாலை ஓரமாக மல-சலம் கழித்தல் அங்கே மனிதனுடைய அடிப்படை உரிமையாகும். இங்கு எனது குசினியில் சமைக்கும் கறியின் மணம் அடுத்த அறையிலே வாழ்பவனுடைய மூக்கினைத் தொடக்கூடாதாம்.

இங்குள்ள எழுத்தாளர் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு என் நோக்கிலே அவுஸ்திரேலியாவை சுயம்புவாக தரிசிக்க முடியுமல்லவா? இவை குறித்து உங்களாலே பயனுள்ள குறிப்புகள் தரமுடியுமாயின் மிக்க உதவியாக இருக்கும். இதனை நீங்கள் எஸ்.பொ.வுக்குச்செய்யும் தனிப்பட்ட உதவியாக மட்டும் கொள்ளாது, தமிழ் எழுத்துப்பணிக்குச்செய்யும் பங்களிப்பாகவும் கருதி உதவ முன்வருவீர்கள் என்று நம்புகின்றேன்.”

பொன்னுத்துரையின் குண இயல்புக்கு இக்கடித வரிகள் பதச்சோறு. தனக்கு அடைக்கலம் கொடுத்த அவுஸ்திரேலியாவுக்கே விசுவாசம் இல்லாத இவர் இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டுதான் அவதூறு எழுத்தூழியம் தொடர்கின்றார்.

நைஜீரியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்து சோர்ந்துபோய் முடங்கிக்கிடந்தவரை 1989 நடுப்பகுதியில் மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத்தொகுப்பு நூல்வெளியீட்டில் பேசுவதற்கு அழைத்தேன். அதுதான் அவர் அவுஸ்திரேலியாவில் முதல் முதல் தோன்றிய மேடை.

அச்சமயம் தானும் ஒரு மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதை கச்சிதமாக சொல்லிவிட்டார். வருடாந்தம் மாவீரர் நிகழ்வு நடத்துபவர்களுக்குத்தோதான ஒரு பேச்சாளர் கிடைத்தார்.

1991 ஆம் ஆண்டு மாவீரர் தின விழாவிலும் மெல்பன் எழுத்தாளர்கள் பற்றி அவுதூறு பரப்பினார். கரகோஷத்திற்காகவும் விசிலுக்காகவும் எதுவும் பேசக்கூடிய நபர்தான் இந்தப்பொன்னுத்துரை. அன்றைய மாவீரர் நிகழ்விலே ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல் இவர் கேவலமாகப்பேசிய பேச்சை  குறிப்பிட்ட நிகழ்வு பதியப்பட்ட ஒளிநாடாவில் பார்க்கலாம். அதற்காக கற்சுறா மெல்பன் தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரை தொடர்புகொள்ள வேண்டும்.

நான் ஏதோ வாழ்விழந்து போயிருந்ததாகவும் எனக்கு புதுவாழ்வு கொடுப்பதற்காகத்தான் சிட்னியில் நடந்த தமது நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க அழைத்ததாகவும் வேறு கதையளக்கின்றார்.

1996 இல் எதிர்பாரதவிதமாக எனது வாழ்வில் ஒரு திருப்பம் நேர்ந்தது. அதற்காக நான் தலையிலே துண்டைப்போட்டுக்கொண்டு ஓடி ஒளியவில்லை. எனது குழந்தைகளை தன்னந்தனியனாக சொந்த பந்தங்கள் இல்லாத ஒரு தேசத்தில் பராமரித்து காப்பாற்றி கரைசேர்த்திருக்கின்றேன்.

பொன்னுத்துரை சொல்லும் விதமாகப்பார்த்;தால் நான் எப்படி அதன் பிறகு 1997 இல் எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்திய நிகழ்வில் பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன், ஓவியர் செல்லத்துரை ஆகிய மூத்தவர்களை அழைத்து பாராட்டி கௌரவம் வழங்கியிருக்கமுடியும்.

1988 இல் ஆரம்பித்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தையும் 2001 இல் தொடங்கிய எழுத்தாளர் விழா இயக்கத்தையும் அல்லவா கைவிட்டு ஓடி  வாழ்விழந்திருக்கவேண்டும். 2002 இல் நாம் சிட்னியில் நடத்திய இரண்டாவது எழுத்தாளர்விழாவிலும் பொன்னுத்துரை கலந்துகொண்டார்.

அதன் பிறகுதான் பொன்னுத்துரையின் வரலாற்றில் வாழ்தல், அம்பியின் அந்தச்சிரிப்பு, தமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண், நடேசனின் வண்ணாத்திக்குளம் ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சிட்னியில் நடந்து நான் தலைமை தாங்கச்சென்றேன்.

என்மீது சேறு பூசும் இவர் பிரதேசவாதம் கக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துபோனார். நான் தமிழீழப்பகுதிகளின் பிரதிநிதியாக என்னை அடையாளப்படுத்திக்கொள்ள பிறப்பாலும் உரிமையற்றவன் என்றும் கற்சுறாவுக்குச் சொல்கின்றார்.

இதன் அர்த்தம் என்ன?

இலங்கையின் மேற்கு கரையில் நீர்கொழும்பிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். அங்கே தமிழ் இருப்பதனால்தான் 1960 களில் பொன்னுத்துரை, மகாகவி உருத்திரமூர்த்தி, கனகசெந்திநாதன், ஏ.ரி.பொன்னுத்துரை உட்பட பல இலக்கியவாதிகளை அழைத்து மூன்று நாட்கள் எமது ஊர் மக்கள் தமிழ் விழா எடுத்தார்கள். அப்போது எனக்கு பதினொரு வயது.

வடக்கிலே கிழக்கிலோ பிறந்தால்தான் தமிழ் உணர்வு, தமிழ் அறிவு, தமிழ் இலக்கிய பிரக்ஞை வரும் என்பதில்லை. பொன்னுத்துரைக்கு இதற்குமேலும் பதில் சொல்லி எனது காலத்தை விரயம் செய்யவிரும்பவில்லை.

அவர் செல்லாத வாதங்களை கொண்டு திரிகின்றார்.

வயது போவதனால் ஞாபகக்குறைவு ஒருவருக்கு ஏற்படலாம். அதற்காக தனது ஞாபக மறதி பலவீனத்தை மறைக்க மற்றவர்களின் மீது சேறு பூசுவதற்கு முனையக்கூடாது.

எமது மாநாட்டை கொச்சைப்படுத்துவதற்காக பலவகையான பிரயத்தனங்களையும் மேற்கொண்டவர் இந்த பொன்னுத்துரை. முதலில் இலங்கை அதிபரிடம் லஞ்சம் பெற்றோம். என்றார் (கீற்று இணையம்) பிறகு, அவுஸ்திரேலியா இன்பத்தமிழ் வானொலியில் நாம் குமரன் பத்மநாதன் ஊடாக கோடிகோடியாக பணம் பெற்றுள்ளோம் என்றார்.

பிறகு கைலாசபதி, சிவத்தம்பியினால் மூளைச்சலவை செய்யப்பட்டடவர்களினால் மாநாடு நடத்தப்படுகிறது என்றார். இந்தியாவின் தயவில் வாழ்ந்து தனது விஸாவை தக்கவைத்துக்கொள்தற்காக எமது மாநாட்டுக்குப்பின்னால் சீனா இருக்கிறது என்றார்.

இப்போது கற்சுறாவுக்கு சொல்லும்போது டக்ளஸ் தேவானந்தா எமக்குப்பின்னால் இருந்தார் என்று சொல்கிறார். இவரது எந்தக்கூற்றுக்கும் ஆதாரம் இல்லை. எழுந்தமானத்தில் குறிசுடும் இவர் தனது வாழ்நாள் பூராகவும் இவ்வாறு பிதற்றிப்பிதற்றியே தன்னை ஒரு கலகக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் சிறிதளவும் வெட்கப்படுவதில்லை.

இவரது வராலாற்றை கவனித்தால் எமது காலத்தில் இப்படியும் ஒரு  மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்று நாம்தான் வெட்கப்படவேண்டும்.

1970 களில் பொன்னுத்துரை எழுதிய இஸ்லாமும் தமிழும் நூலில் எம்.எஸ்.எம். இக்பால், எம்.எச். எம்.சம்ஸ். ஏ. இக்பால் ஆகியோரை மிகவும் தரக்குறைவாக எழுதினார். இரசிகமணி கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலில் அவருக்குத்தெரியாமல் தனது கைச்சரக்கை திணித்தார்.

சிலரது நூல் வெளியீட்டில், குறிப்பாக சில மொழிபெயர்ப்பு நூல்களின் பதிப்பில் செய்த பாரதூரமான மோசடிகள் தொடர்பாகவெல்லாம் நாமும் ஊகங்களுடன் எழுத முடியும்.;. பேசவும் முடியும். அவ்வாறு வாழ்ந்தால் நாமும் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நிலைக்கே தள்ளப்படுவோம்.

இந்த மனிதர் இந்த அந்திம காலத்திலாவது திருந்தவேண்டும். வரலாற்றில் வாழ்தல் எழுதிவிட்டால் மாத்திரம்போதாது தனது வாழ்வை தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும். தனது வாழ்நாளில் எத்தனைபேரை காயப்படுத்தியிருக்கிறார். எத்தனைபேருக்கு வீண் பழி சுமத்தியிருக்கிறார் என்பதை திரும்பிப்பார்க்கவேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

எஸ்.பொ. “?”
இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம்  ஒரு இடைமறிப்பு.

-கற்சுறா

கற்சுறா:  2011 ஜனவரிமாதம்  நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள்.   மாநாடு நடத்தியவர்கள் அரசிடம் பணம் பெற்றார்கள் பதவி பெற்றார்கள் என்றும் அரசுதான் பின் நின்று நடாத்துகிறது என்றும் ஆரம்பத்தில் சொன்ன நீங்கள் தற்போது அதை மறந்து அவர்கள் பட்ட நட்டம் குறித்து  பேசுகிறீர்கள். அண்மையில் அஸ்ரப் சிகாப்தீன் அவர்கள் மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து கொடுத்த பேட்டி பற்றி மிக மோசமாகக் கிண்டலடிக்கிறீர்கள். முஸ்லீம்களும் தமிழ்தானே பேசுகிறார்கள் பின் என்ன முஸ்லீம் மாநாடு என்று சொல்கிறார்கள் என குசும்பு பேசுகிறீர்கள்? தற்காலத்தில் உங்களைப் பிடித்து ஆட்டும்  தமிழ்த் தேசிய வெறியும் புலித்தேசிய விருப்பும் தானே  மாநாட்டை கண்மூடித்தனமாக எதிர்க்கவைத்தது?

எஸ்.பொ:  இதற்கு மிக இலகுவாகப் பதில் சொல்ல முடியும். ஆனால் அது நீண்ட பதிலாக அமையும்.  முருகபூபதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை செய்வதற்கு ஆரம்பித்த பொழுது அதற்கு ஆதரவாக முன்னோடியாக முன்னுக்கு நின்றவர்கள் இரண்டுபேர். ஒன்று லண்டனில் இருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மற்றது அவுஸ்ரேலியாவிலிருந்து டாக்டர் நோயல் நடேசன். இந்த இருவரும் முள்ளிவாய்க்கால் போரின் பொழுது அரச சார்பாக கொழும்பில் செயற்பட்டவர்கள் என்பதற்கு முழு ஆதாரங்களும் என்னிடம் உண்டு. அதற்கு மேல் பிற் கட்டத்திலே ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ராஜபக்சே அரசாங்கத்தினுடைய நம்பிக்கைக்குரிய உளவாளி என்பதை “த கார்டியன்” பத்திரிகை நிரூபித்திருக்கிறது. முருகபூபதி இலங்கையில் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த் தேசியத்தை நிராகரித்த ஒரு அரசியல் நிலைப்பாட்டுடன் வாழ்ந்தவர். அத்துடன் அவர் எக்காரணம் கொண்டும் தமிழீழப் பகுதிகளின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, பிறப்பாலும் உரிமையற்றவராவார். அடுத்து நான் இந்த மநாட்டினை எதிர்த்ததற்கு ஒரேயொரு காரணம்     இந்த இரத்த வெடில் இன்னமும் மாறவில்லை. இந்த இரத்த வெடில் மாறாத நிலையில் இந்த மாநாட்டை அவசர அவசரமாகக் கூட்ட வேண்டாம் என்றுதான் என்னுடைய வேண்டுகோள் இருந்தது. நாம் ஊகித்தது நிச்சயமாக இராஜபக்ச அதற்கு உதவி செய்வார் என்று. ஏனென்றால் அவர்களுக்குச் சாதகமாக இந்த மாநாடு இருந்தது. மாநாட்டுக்குப் போய் வந்தவர்களிடமிருந்து அறிந்து கொண்டேன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடைய ஆசீர்வாதக் கைகள் பின்னால் இருந்துகொண்டே இருந்ததை. ராஜபக்ஸவினுடைய  பணபலத்துடன் நடைபெறுகின்றது என்ற குற்றச்சாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகச் சிலசமயங்களில் அந்த உதவியைப் புறக்கணித்துவிட்டு தங்களுடைய நேர்மையை நிலைநாட்டியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.

அடுத்து இந்த முஸ்லிம்களது விடையம். நான் நம்புறன் இலங்கையில் முஸ்லீம்களுடைய எழுத்து வல்லபங்களை முன்னெடுப்பதிலே என்னைப் போன்ற வேறு எந்தத் தமிழனும் உயிர்ப்புடன் பங்களிப்புச் செய்ததில்லை. இதற்கு பாணந்துறை முகைன் சமீமைக் கேட்கலாம் அல்லது ஓட்டமாவடி எஸ். எல். எம். ஹனீபாவைக் கேட்கலாம். குச்சவெளி தொடக்கம் பாணும வரையிலே பரந்து வாழ்ந்துகொண்டிருக்கும் முஸ்லீம்கள் மத்தியில் வாழுகின்ற இலக்கியச் சுவைஞர்களைக் கேட்கலாம் எல்லோரும் இதனைச் சொல்வார்கள். “இஸ்லாமும் தமிழும்” என்று-  நான் நினைக்கிறன் 1970களிலே எழுதியவன் நான். அதுதான் முதல் முதலாக இலங்கையிலேயே- ஈழநாட்டிலே முஸ்லீம்களுடைய தமிழ் நேசிப்பும் பங்களிப்பும் காத்திரமானதென்று. இந்த முறை கனடாவுக்கு வந்தபொழுது கூட அதில் இரண்டுபிரதிகள் கொண்டு வந்து விற்கப்பட்டுள்ளது. எனவே நான் முஸ்லீம் விரோதியாக இலட்சியத்தில் என்னை அடையாளப்படுத்திக் கொண்டவன் கிடையாது. நான் பெருமைப்பட்டு என்னால் வளர்க்கப்பட்ட இலக்கியகாரர்கள் முஸ்லீம்கள் மத்தியிலே இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒன்று கூடலுக்குக் குரல் கொடுத்து அந்தப் பணியிலே முன்னணியில் நின்ற எந்த முஸ்லீம் எழுத்தாளர்களாவது  ராஜபக்சேவினுடைய புதிய தந்திரங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

என்னவென்றால் இலங்கையில் இரண்டு மொழி. சிங்களம் அல்லது தமிழ். ஒரு முஸ்லீம் சிங்களத்திலே எழுதினால் அவன் சிங்கள எழுத்தாளன். ஒரு முஸ்லீம் தமிழிலே எழுதினால் அவன் தமிழ் எழுத்தாளன். ஆனால் ராஜபக்சே இதே முருகபூபதி எல்லோரையும் வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் முஸ்லீம் என்ற மூன்று பிரிவை உண்டாக்கி வைத்துக் கொண்டு மாநாட்டை நடாத்தியிருக்கிறார்கள். இந்த மூன்று பிரிவை தலை நிமிர்ந்து ஏற்று ஆமாம் சாமி போட்ட இந்த முஸ்லீம்கள் மேற்கொண்டும் தமிழர்களுடைய இலக்கிய நலன்களையும் இலக்கிய வீறுகளையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தார்மீக உரிமையை இழந்துவிட்டார்கள்.

மற்றது இந்த ஒன்று கூடலை இனிய உறவுகளின் ஒன்று கூடல் என்று ஒரு சொல்லாடலை  முருகபூபதி அவர்கள் திரும்பத் திரும்பக் கையாண்டார். இனிநான் சொல்லப் போவதை நீங்கள் வெட்டலாம். வெட்டாமல் விடலாம். ஆனால் உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முருகபூபதி என்னுடன் குழாயடிச்சண்டையில் ஈடுபட்டிருந்தபொழுது நான் ஏதோ யாருமேயில்லாது – சிட்னியிலே எனக்குத் தலமை தாங்க யாரும் இல்லாது செல்வாக்கிழந்திருந்த எஸ்.பொவினுடைய நூலை தான் வந்து அபயகரம் நீட்டி வெளியிட்டு வைத்ததாக எழுதியிருக்கிறார். நீ எவ்வளவு ஒரு அயோக்கியன். ஏனென்றால் அந்தக் கட்டத்திலேதான் நீ உன்னுடைய குடும்பத்தில் நடைபெற்ற சிக்கல்கள் மூலம் முடங்கி மூலையிலே இருந்தபொழுது என்னுடை மகன் என்னிடம் வந்து அப்பா முருகபூபதி அண்ணைக்கு நடந்தது very unfortunate. அவர் முடங்கிப்போய் மூலையிலே கிடக்கிறார்.அவரை எப்படியாவது வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும். அந்த வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது உங்கள் நூல் வெளியீட்டுடன் இருக்கட்டும். நீங்கள் ஏன் அவரைச் செய்யச் சொல்லிக் கேட்கக்கூடாது என்று சொன்னான். அதற்காக சிட்னியிலே என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏதாவது ஒரு தலைவர்  கிடைக்கவில்லை என்று சொல்லி உன்னை இரவல் விடுத்தேன் என்று நீ எழுதலாமா? இப்படிமகா அயோக்கித்தனமான பொய்யையும் பித்தலாட்டத்தையும் நேர்மையான எந்தவொரு எழுத்தாளனும் செய்யமாட்டான். இரண்டாவதாக தமிழை நேசிக்கிறேன் தமிழுடைய விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்று சொல்லும் நீ இன்று அதிலே கூடத் தோல்வியடைந்து நீ உன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு இப்பவந்து, புலிகள் இல்லாத ஒரு கட்டத்திலே சர்வதேச தலமைத்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு ஆசைக்காகத்தான் இந்த மாநாட்டிலே நீ முன்னின்று உழைத்ததாக நான் நினைக்கின்றேன்.

இன்னொன்று இந்த மகாநாடு நடந்ததிற்குப் பிற்பாடு அதில் பங்கு பற்றிவிட்டு இந்தியாவுக்கு வந்தவர்களில் ஓங்கி அந்த மாநாடு வெற்றியளித்துவிட்டது என்று சொன்னவர் என்னுடைய நண்பர் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள். இன்றுகூட இந்தியாவிலே பேசப்படுகிறது அங்கு அற்புதமான முஸ்லீம்களுடைய எழுத்தாளர் மாநாடு அங்கு நடந்தது என்று. அதற்கு மேல் அங்கு இந்திய சமூக எழுத்தாளர்கள் சார்பாக வந்தவர்களில் கொஞ்சம் பிரபலமாக இருந்தது சின்னப்பாபாரதி. அவர் வந்து விட்ட அறிக்கையைப் பாருங்கள்.  எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று சொன்னார்.

அடுத்ததாக என்னவென்றால் நான் புலி ஆதரவாளன் என்றவகையில் நிச்சயமாக நான் அதனை எதிர்க்கவில்லை. நான் எதிர்த்தது இலக்கியவாதி என்ற அதே கோதாவிலேதான். ஏனென்றால் இலக்கியவாதிகளுடைய அக்கறைகள் அரசியல் சார்ந்த அக்கறைகளாக மாறிவிடக்கூடாது. அரசியல் பேசுவது வேறு அரசியல் சார்புகொண்டிருப்பது வேறு.  ஆனால் இலக்கியம் செய்யும் எழுத்தையும் அரசியல் ஆக்கிக் கொள்ளக்கூடாது. ஆனால் முருகபூபதி போன்றவர்கள் அதை அரசியலாக்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்த்தேன்.  முதற்தடவை கூடவேண்டாம் என்று சொன்ன பிறகு எந்தக் கட்டத்திலும் அதனை எதிர்த்து எந்தவித அறிக்கைகளும் நான் விடவில்லை. ஒதுங்கியிருந்தேன். மற்றவர்களுக்குத் தில் இல்லை. உண்மையாக கல் எறியமுடியாதவர்களாக திராணியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று முதல் கல் எறிந்தவன் நான். அதன் பிறகு இதை நடாத்து – நடத்தவேண்டாம் என்று பிரசாரம் செய்ததே கிடையாது. அதற்குப் பிறகு அந்தக் கூட்டத்திலே ஒவ்வொரு பேச்சாளனாக எழுந்து என்னை ஏசியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை விளங்கவேண்டும் நான் ஏச்சிலே பிறந்து ஏச்சிலே வளர்ந்து ஏச்சிலேயே வாழ்ந்து கொண்ருப்பவன். உங்களுடைய ஏச்சு என்னை ஒன்றும் செய்யமுடியாது. இங்கே மொன்றியலில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறீஸ்கந்தராசா என்னுடைய நல்ல நண்பன். இந்த முறை என்னை வந்து சந்திக்கவில்லை என்பது எனக்கு மகாதுக்கம். இல்லை எனில் இந்த சனிக்கிழமை மொன்றியலுக்குச் சென்றிருப்பேன். அவர் வந்து சொன்னார் ‘evrry speaker literally cruciffied you’  என்று. எவ்வளவு மகிழ்ச்சி. என்னத்துக்கு என்னைச் சிலுவையில் அறைய வேண்டும்? ஏன் நான் கடந்த 65ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக்கொண்டிருப்பது குற்றமா? இந்த 65 ஆண்டுகளில் இன்றும் ஈழத் தமிழர்களுடைய இலக்கியம் Archive இல்அழிக்கப்பட்டவிடும், அதைப் பாதுகாத்து  நாளைய சந்ததிக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி கடந்த நான்கு வருடங்களாக ஆறாயிரம் பக்கங்களை எடிற் செய்து கொண்டிருப்பது ஈழத் தமிழர்களுக்கு நான் செய்யும் துரோகமா?

அல்லது, இலத்தீன் அமெரிக்க இலக்கியம் தான் மூன்றவது உலக இலக்கியம்  என்று இன்றும் நீங்கள் மயங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஸ்பானிஸ் மொழியில் எழுதப்படும் இலக்கியம்தான் மூன்றாம் உலக இலக்கியம் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஆபிரிக்கக் கண்டத்தையும் தமிழ்நாட்டையும் இந்து சமுத்திரம் பிணைத்து வைத்திருக்கிறது. இந்திய நாட்டினுடைய தாக்கங்களும் கலாசாரங்களும் அங்கு இருக்கிறது. என்றைக்காவது இந்த ஆபிரிக்க நாட்டினுடைய இலக்கியங்களை தமிழ்படுத்த யோசித்திருக்கிறிர்களா? சிலசமயம் என்.கே. மகாலிங்கம் அவர்கள் இங்கிருந்து Things Fall Apart ஐ “சிதைவுகள்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.Things Fall Apart என்றால் சிதைவுகள் அல்ல.

இவ்வளவும் நான் செய்ததற்கு நீங்கள் என்னைச் சிலுவையில் அறையத்தான் வேண்டும். ஆனால் தம்பிமாரே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், சிலுவையில் அறைந்தால்தான் மீள உயிர்ததெழும் அற்புதம் நிகழும். இன்று அந்த அற்புதத்தைக் கனடாவில் நீங்களே பார்த்துக் கொண்டு அதன் சாட்சியமாக இருக்கிறீர்கள். எனக்கு மகிழ்சியாக இருக்கிறது.

கற்சுறா: நீங்கள் தமிழ் ஆக்க இலக்கியத்தில் யாரும் எட்டாத பெரும் பாய்சலை நிகழ்த்தியவர். ஒரு கலகக் காரனாக அதிர்வூட்டும் படைப்புக்களை எழுதிக்காட்டி தமிழிலக்கிய ஊழியத்தில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியவர். படைப்பிலக்கியத்தில் தமிழை உண்டு இல்லை என்றளவுக்கு பயன்படுத்திக் காட்டியவர். தமிழ் இலக்கியத்தில் சிறுகதை கவிதை நாவல் என்று பரந்து பட்டு விளாசித் தள்ளியவர். ஈழத்தில் எஸ்.பொ ? என்ற நாவல் போல் இன்றுவரை ஒன்று வந்ததில்லை. நீங்களே சொல்கிறீர்கள் உங்களுடைய எழுத்தில் உங்களுக்குப் பிடித்ததும் அதுதான் என்று. அவ்வளவு விறைப்பான வித்தைகள் அடங்கிய எழுத்து அது. தீ சடங்கு வீ நனவிடை தோய்தல் என்று உங்கள் நூல்கள் கொடுத்த தாக்கத்தில் இருந்து இன்னும் நாங்கள்; விடுபடவில்லை. இப்படியிருக்க இன்றுவரை இந்தக் கனடா இலக்கியத் தோட்டம் உங்களைக் கண்டு கொள்ளவில்லை. கண்டு கொள்ளவில்லை என்பதை விட புறக்கணித்தது. அது உங்களைப் புறக்கணித்தது என்பதை அவர்களால் இதுவரை விருது கொடுக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்தால் தெரியும். அவர்களது அரசியலுக்குள் நீங்கள் ஒருபோதும் வந்து கொள்ள மாட்டீர்கள்.  ஆனால் இந்த எழுத்தாளர் மநாட்டை எதிர்த்து நின்றதால்தான் – தமிழ்த் தேசியவெறியை காசி ஆனந்தனுக்கும் மேலால் நீங்கள் கக்குவதால் தான் அட இவனும் நம்மாள்தான் நம்ம கட்சிதான் என்று கண்டுகொண்டு உங்களை இவர்கள் இன்று ஏற்றார்கள். விருது தந்தார்கள்.. பாருங்கள் வாழ்நாள் இலக்கியசாதனைக்குக் கொடுக்கப்படுவதாகச் சொல்லும் இவர்களது விருது கடைசியில் ஒரு மாநாடு எதிர்ப்பு நோட்டீசுக்காக  உங்களுக்குக் கிடைக்கிறது. இவ்வளவு காலமாக எஸ்.பொ. என்பவன் எதிர்ப்புணர்வு -கலகம் -மறுத்தோடி -காட்டான் என்று சொல்லி வரும் நீங்கள் இதைப் புறக்கணித்திருக்க வேண்டாமா? எள்ளி நகையாடியிருக்க வேண்டாமா? கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மநாட்டுக்காரன் சிலுவையில் அறைந்தான் இயல் விருதில் உயிர்த்தெழுந்தேன் என்று சொல்கிறீர்கள் இந்த விருது வாங்குவதில் உங்களுக்கு வெட்கம் வரவில்லையா? உண்மையில் எங்களது எஸ்.பொவுக்கு தற்போது என்னதான் நடந்தது?

எஸ்.பொ: நல்ல கேள்வி. அற்புதமான கேள்வி. இயல் விருதில் எனக்கு இரண்டு நிர்ப்பந்தங்கள் இருந்தது. ஒன்று அரசியல்ரீதியான நிர்ப்பந்தம். அந்த நிர்ப்பந்தம் என்னவென்றால் யூத இனம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக நாட்டுக்குநாடு அலைந்து, எத்தனையோ மில்லியன் மக்கள் இறந்து மொழியே இறந்த மொழியாகிப் போய் 2000வருடங்களுக்கப் பிறகு அமெரிக்காவில் வாழ்ந்த யூதர்களுடைய பணம், சாதுரியம்  என்பனதான் ஒரு யூதநாடு இஸ்ரேல் தோன்றுவதற்கு சகாயித்தது. நான் வீராப்பாக இந்த இயல்விருதை வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். சொல்லியிருக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். நான் வேண்டாம் என்று சொல்லாததற்குக் காரணம் இந்த இயல் விருதை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு இன்று கனடாவில் வாழும் தமிழ் ஈழர்களுடைய உணர்வுகளையும் போக்குகளையும் நேரடியாக அறிந்து கொள்ள ஆசைப்பட்டேன். இரண்டாவது எனக்கு வேறு எந்த நாட்டிலும் உள்ளதிலும் பார்க்க  கனடிய நாட்டிலே உறவுகள் அதிகம். இந்த உறவுகளின் பண உதவியுடன் 6000 பக்கங்களில் நீடிக்கக் கூடிய தமிழ் ஈழர்களுடைய இலக்கியங்களை பொக்கிசங்களை பிரசுரிக்க இருக்கிறேன்.

நான் கலகக்காரனாகவே வாழ்ந்து கொண்டிருப்பதனால் விருது வேண்டாம் என்று புறக்கணித்ததாக அர்த்தப்படுத்தி- இதற்காகத்தன் இவருக்கு சாகித்தியமண்டலப்பரிசு கொடுக்கவில்லை. இவர் கலகக்காரன் எந்தப் பரிசைக் கொடுத்தாலும் நிராகரித்து விடுவார் என்ற ஒரு அவச்சொல் வரக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

அடுத்து இதுவரை இந்த இயல்விருது கொடுக்கப்பட்டவர்களைப் பார்க்கிறேன். சுந்தரராமசாமி என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதன் என்ன சாதித்தார்? வெங்கட் சாமிநாதனது பங்களிப்பு என்ன? அவர் விமர்சனம் மட்டும் செய்தார். ஆனால் அது அல்லாத ஒன்றே ஒன்றுமட்டும், அந்தக்காலத்திலே அருமையான வலிமையான விமர்சன போசகத்தை கைலாசபதிக்கு எதிராக  ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து…’ என்று எழுதினார்.அதன்பிறகு இல்லை. சரி எங்களுடைய  தாசிசியஸ் என்ன சாதித்தார்? இல்லாவிட்டால் இந்தப் பத்மநாபஐயருடைய சாதனைதான் என்ன? அவ்வளவும் எனக்குத் தெரியும். ஒரேயொருவர் இதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றால் அது கோவை ஞானி மட்டுந்தான். இந்தமாதிரியான கேவலங்களில் இருந்து கனடாவாழும் இலக்கிய சம்பந்தமான உயிர்ப்புக்கள் இன்னும் கொஞ்சம் சேட்டமாக வளரட்டும். இந்தக் கலகக்காரனுக்கு பரிசு கொடுத்து ஏற்று இங்கு வந்து கனடாவில் வாழக்கூடிய தமிழ் இலக்கிய  முனைப்புகள் அனைத்தையும் கண்டு அளவளாவிச் செய்த பிறகு வேறும் என்னைப்போன்ற கலகக்காரர்களுக்கும் தகுதியுள்ளவர்களுக்கும் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த நபுஞ்சகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதனைச்செய்துவிட்டேன். நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம். பொன்னுத்துரையும் எஸ்.பொவும் விலை போட்டானோ என்று நீங்கள் ஆதங்கப்பட்டது நியாயம்.there are own Agenda .i have my agenda.   உங்களுக்குத் தெரியாது இயல் விருதில் பேச நான் தயார் செய்து கொண்டுவந்தது ‘கனடாவில் கதைத்தது’ என்று சொல்லி ஒரு பேச்சு. அதில் இரண்டு வரிகூட நான் அங்கு பேசவில்லை. எதையாவது இவன் உளறிவிடுவானோ என்று அவர்கள் எல்லோரும் பயந்து போயிருந்தார்கள்.  என்ர பயறு எல்லா இடமும் அவியும் தம்பி.

அடுத்தது உங்கள் ஒருதருக்கும் புரியாது… என்னுடைய புலிசார்பு நிலைப்பாடுஎன்பது , அவர்களது இயக்கத்திலே அவர்களுடைய செயற்பாட்டிலே நான் கொண்டிருந்த பற்றுதல் அல்ல. நான் உணர்வு பூர்வமாக எழுதுபவன். அநேகமாக கோட்பாடுகளை வைத்துக் கொண்டு எழுதியவனே அல்ல. கூடுதலாக உள்ளுணர்வுகளை வைத்துக் கொண்டு எழுதுபவன். அந்த உள்ளுணர்வு மிக மென்மையான மனித உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. என்னுடைய ஒரேயொரு வாரிசு மித்ராதான் அவன் ஒரு கவிஞனாகவே இருந்து என்னுடன் வாழ்ந்தவன். அவனை நான் இழந்த தவிப்பு உங்கள் ஒருவருக்கும் தெரியாது. என்னுடைய அந்த ஆதரவு நிலைப்பாடு என்னுடைய மகன் மீது கொண்டுள்ள பாசம் மட்டுந்தான். இது உண்மை.  . நான் ஒருபோதும் பொய் சொல்பவனல்ல. பொய்யைத் தலைக்கள் கொண்டு திரிந்தால் என்னால் எழுதமடியாது.

பாவமன்னிப்பு அரசியல். – கற்சுறா
1. தோழர் சிவம் நினைவும் தேடகம் 20 ம்ஆண்டு சிறப்பு மலரும்.

கனடாவில் தேடகம் அமைப்பினரால் தோழர் சிவம் அவர்களது நினைவும் தேடல் நூல் வெளியீடும் ஒக்ரோபர் 2ம் திகதி நடாத்தப்பட்டது. நிகழ்வில் இலங்கையில் இருந்து மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளளர் தோழர் சி.கா.செந்தில்வேல் அவர்கள் கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றினார்.

நிகழ்வின் தலைமையுரை ஆற்றிய ப.அ. ஜயகரன் அவர்கள் தேடகத்தின் கடந்தகால எதிர்கால நடைமுறை அரசியற் செயற்பாடுகள் குறித்து உரையாற்றினார். குறிப்பாக ஈழத்தில் நடைபெற்ற இறுதியுத்தகாலத்தில் தேடகம்  மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். கனடாவில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டதற்கு தேடகம் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன அறிக்கை வெளியிட்டதும், ஈழயுத்தத்தில் இந்தியத் தலையீடு குறித்து இந்தியதூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டதும் ஏன் என்பதற்கான காரணங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து காலம் செல்வம் அவர்களும் தோழர் மாற்கு அவர்களும் சிவம் அவர்களது நினைவு குறித்தும் தேடகம் செய்த பங்களிப்புக்கள் குறித்தும் பேசினார்கள். அத்துடன்;  சென்றவருடம்  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது சிவம் அண்ணை அவர்களது பங்களிப்பு அர்ப்பணிப்பு குறித்து சில சம்பவங்களை சொல்லி உரையாற்றினார்கள். சிவம் அவர்கள் தனது உடல்நிலை குறித்து கொஞ்சமும் கவலை கொள்ளாது அனைத்திலும் முன்னுக்கு நிற்பவர் என்பது அனைவருக்கும் தெரியும். கனடாவில் நடைபெற்ற அநேக பொதுவிடையங்களில் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்துபவர். இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் சரி நாடக நிகழ்வாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் தோள் கொடுப்பவர். கனடாவில் தோழர் டானியல் நினைவுமலர் வெளியிட்டதில் சிவம் அவர்களது பங்களிப்பு நிறையவே இருந்தது. இதுபோன்ற அவரது அக்கறை பற்றி பேசியவர்கள் அனைவரும் நினைவு கூர்ந்தார்கள்.

தொடர்ந்து தேடல் நூல் வெளியிடப்பட்டது. நூலை சி.கா. செந்திவேல் வெளியிட சிவம் அவர்களது துணைவியார் சாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இடைவேளையின் பின் தோழர் சீவரத்தினம் அவர்கள் சிவம் பற்றியும் செந்திவேல் பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தியபின்  புதிய ஜனநாயக மார்கஸிய லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்தில்வேல் அவர்கள்  நினைவுப் பேருரையாற்றினார். தோழர் சிவம் அவர்களது இடதுசாரியச் செயற்பாடுகளும் மனிதஉரிமைச் செயற்பாடுகளும் குறித்து சம்பவங்களுடன் தெரிவித்தார்.

பின் இலங்கைத் தமிழர்களது வாழ்வும் அவர்களது எதிர்காலம் என்ற தலைப்பில்  நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரை  ஏறத்தாழ இரண்டு மணிநேர உரை. இலங்கையில் இனமுரண்பாடு, வர்க்க முரண்பாடு ஈழத்தின் சாதி அமைப்பு, சாதிப் போராட்டங்கள், ஈழவிடுதலை யுத்தம் என்று கடந்தகால நிகழ்கால சம்பவங்களுடன் விபரித்தார். சென்றவருடம் நடைபெற்ற ஈழத்தின் இறுதி யுத்தகாலம் எவ்வளவு கொடுமையானது என்று பல உதாரணங்கள் கொண்டு உரையாற்றினார். இலங்கை அரசும் அதற்கும் மேலால் விடுதலைப் புலிகளும் எவ்வாறு மக்கள் மீதான வன்முறையை நிகழ்த்தினார்கள் என்பதை நேரடியாக வன்னிமக்களுடன் உரையாடிப் பெற்றுக் கொண்ட தகவல்களைத் தெரிவித்து விளக்கமளித்தார்.

யுத்தம் முடிந்த கையோடு தமிழ் மக்களுக்குரிய பிரச்சனை முடிந்துவிட்டது. ஒரே நாடு ஒரே மக்கள் நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்று இலங்கை அரசு சொல்லிக் கொள்வது ஒரு ஏமாற்றுவேலை என்றார். இத்தனை அழிவுகளுக்குப்பிறகும்  இத்தனை இழப்புக்களுக்குப் பிறகும் அந்த மக்கள் கடந்த தேர்தல்களில் வாக்களிப்பினை முடிந்தளவு தவிர்த்ததன் மூலம் தமது எதிர்ப்புணர்வினை மௌனமாகத் தெரிவித்தார்கள். சூழல் காரணமாக அப்படித்தான் தெரிவிக்கமுடியும் என்றார். கடந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் 20தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றார்கள். அவர்களையும் மக்கள் புறக்கணித்ததார்கள். ஆனால் தாம்தான் தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றம் சென்றார்கள். இவ்வளவையும் செய்து முடித்த மகிந்த ராஜபக்ஸ கூட சொல்லாத வார்த்தை அது. ஆனால் நமது தமிழ்த் தலைவர்கள் இன்று சொல்லிக் கொள்கிறார்கள்.  ஒருமுறை சொல்லித் தோல்விகண்ட சொல் அது. இப்போது திரும்ப இவர்கள் தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நமது தோழர்கள் சிலர் வன்னிக்குச் சென்றோம். கண்கொண்டு பார்க்க முடியாத கோலத்தில் வன்னி இருந்தது. அங்கிருந்த பலருடன் உரையாடினோம். இது இங்குள்ள பலரால் உள்வாங்கிக் கொள்ள முடியாது.  இலங்கை இராணுவம் செய்த கொடுமைகளைச் சொன்னவர்கள் தம்மைப் பலாத்காரமாக புதுமாத்தளன் வரையிலும் இழுத்துக்கொண்டு போனவர்கள் செய்த கொடுமையையும் அவர்கள் சொன்னார்கள். சுட்டிருக்கிறாhகள். பிள்ளைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போயிருக்கிறாhகள். பிள்ளைகளைப்பிடித்துக் கொண்டு போனபோது வாகனத்தின் முன் படுத்துக்கிடந்து தடுத்த தந்தையின் தலைக்கு மேலால் வாகனத்தை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள் என்று சொன்னார்.

இவ்வாறு தமது மக்களையே கொன்றொழித்த விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம் என்று எப்படிச்சொல்வது என்று கேள்வி கேட்டார். இப்படி வன்னி மக்களிடம் தான் சென்று கேட்ட அனுபவங்களைப் பட்டியலிட்ட பொழுது புலம் பெயர் சூழலில் விடுதலைப்புலிக்கொடிகளுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடாத்தியவர்கள் பலர் வெட்கப்பட்டுத்தான் போனார்கள். (அவரது  உரையை வீடியோவில் பார்க்க, காட்சிப் பகுதியை அழுத்தவும்.)

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சாதியத்தின் கொடுமை பற்றி விளக்கமளித்தபோது 1995ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோது இரண்டு பிரிவினராகவே வேளியேறினோம். ஒன்று உயர்த்தப்பட்ட சாதி மற்றது தாழ்த்தப்பட்ட சாதி என்பதைக் கூறி, நாவற்குழி பாலத்தில் ஒன்றாகிய தமிழ் மக்கள் பாலம் கழிந்து இரண்டு பிரிவினராகவே சென்றதாகவும் சொன்னார். தமிழ்த் தேசியத்தின் பொய் முகம் கிழிந்து போகும் இடம் இதுதான். சாதிரீதியாக  மதரீதியாக பிரதேசரீதியாக பிளவுபட்டு;ள்ள தமிழினத்தை தமிழீழத்திற்குள் ஒன்று சேர்க்க முடியும் என்ற கட்டுக்கதை இன்றுவரை பொய்த்துப் போயுள்ளது. இறுதி யுத்தத்திற்குள் இடம் பெயர்ந்து போயிருந்த வவுனியா முகாம்களினுள் கூட தமிழ் மக்களிடத்தில் மிக மோசமான சாதி வெறி தாண்டவமாடியதை அனைவரும் அறிவர். இலங்கை அரசு எப்படி இலங்கை ஒரு நாடு. ஒரே மக்கள் என்று சொல்வது பச்சைப் பொய்யோ, அதைவிடப் பொய்யானது நாம் எல்லோரும் தமிழ் மக்கள். நாம் ஒரு இனம் என்று சொல்வது.

கூட்டம் ரதன் அவர்களது நன்றி உரையுடன் முடீவுற்றது.

2. தேடகம் – அறிக்கையும் அதன் அரசியலும்.

தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்ட தேடல் இதழில் எழுதப்பட்டிருக்கும் (பக்கம் 88) அறிக்கை குறித்து பேசவேண்டியுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் கோரமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் தேடகம் அமைப்பினர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். 15.02.2009 திகதியிட்ட அந்த அறிக்கை குறித்தும் தேடகத்தினரது கோரிக்கை குறித்தும் எனது எதிர்வினையை அப்போதே தெரிவித்திருந்தேன். சென்ற வருட அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் அரசியலில் பெரிய மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை எனினும் தமது அரசியல் எதுவென்ற குழப்பம் இரண்டு அறிக்கையிலும் அப்பட்டமாகத் தெரிகிறது.

சென்றவருட அறிக்கையில் கனடிய அரசே விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு என்று கேட்டிருந்த தேடகத்தினர், இலங்கை அரசே தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து! சொந்த மண்ணிலேயே அகதி முகாமுக்குள் மக்களை அடைப்பதை நிறுத்து! இந்திய அரசே புலிகள் மீதான யுத்தம் தமிழ் மக்கள் மீதான யுத்தமே. இலங்கை அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்து என்று எழுதி கனடா இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  விடுதலைப்புலிகளின் தடையை நீக்கு! என்று அறிக்கையிடுவதற்கு இவர்களுக்கு இருந்த அரசியல் நிலைப்பாடு எதுவென்று யோசிக்க வேண்டும். புலிகள் அமைப்பு ஒரு விடுதலை இயக்கச் செயற்பாடுடையது. ஈழத்தமிழ் மக்களுக்கான விடுதலையை அவர்கள் உருவாக்குவார்கள். என்று  அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அதன்மூலம் கனடாவில் விடுதலைப்புலிகளை தடையில்லாமல் செயற்படவைப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கான விடுதலையை உரிமைகளைப் பெற்றுத்தர முடியும் என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்.

கனடாவிலும் சரி எந்தப் புலம் பெயர் நாடுகளிலும் சரி குறைந்தளவு ஜனநாயகப் பண்பைக் கூட ஏற்றுக் கொள்வோ நடைமுறைப்படுத்தவோ விரும்பாதவர்கள் அவர்கள். சர்வதேச ரீதியாக சபாலிங்கம் கொலை தொடக்கம் தேடகம் எரிப்புவரை நடாத்தியவர்கள் அவர்கள். அவர்களது தடையை நீக்கு என்று தேடகம் கேட்பது ஆபத்தானது.

அமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற மேற்குலக நாடுகள் தமது நாடுகளில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை இயங்கவிடுவதும் தடைசெய்வதும் அந்த நாடுகளின் நலன்சார்ந்த விடையம். தற்போது புலிகளின் தடை என்பதுவும் அவர்கள் நலன் சார்ந்த விடையமே. இதில் தேடகம் அமைப்பினர் கனடாவில் புலிகளின் தடையை நீக்கு எனக் கேட்பது வேடிக்கையானது என அப்போதே நான் மறுத்து எழுதியிருந்தேன். (பார்க்க தூ..)

அடுத்து தமிழர் தேசியவிடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க நினைக்கும் இலங்கை இந்திய அரசுகளின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடும் இந்தியத் தமிழர்களுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் கைகோர்க்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் எழுதினார்கள். விடுதலைப்புலிகளது யுத்த வெறியையும் வன்முறை அரசியலையும் காவிநின்ற செயற்பாட்டை தமிழர்களது தேசியவிடுதலைப் போராட்டம் என்று சொல்வது முற்றிலும் தவறானது. அதிலும் அந்தப் போராட்டத்திற்காகவே புலம்பெயர் தமிழர்களும் சீமான் வழி இந்தியத் தமிழர்களும் தெருவில் இறங்கினார்கள் என்பது அதைவிடப் பொய்யானது. இதனை தேடகம் அமைப்பினரால் விளங்கிக் கொள்ளமுடியாமல் போனது என்பது அப்போது பெருங்கோபத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இலங்கை அரசு மேற்கொள்ளும் புலிகளின் அழிப்பு  என்பது தமிழ் மக்கள் மீதான அழிப்பல்ல. இந்த யுத்தத்தை விரும்பித் தொடங்கியவர்கள் புலிகளே என்றும் மக்களை மாட்டுமந்தைகள் சாய்ப்பது போல் தம்முடன் சாய்த்துக் கொண்டு போகிறவர்கள் புலிகள் தான் என்றும் இந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை விட புலிகள் தான் தொடர்ந்தும் கோரமாக அழித்து வருகிறார்கள் என்றும் யுத்தம் நடந்த காலங்களில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். தமிழ்த் தேசியவாதிகளும் புலிகளின் உத்தியோகத்தர்களும் சொல்வது போல் தமிழ் மக்களும் புலிகளும் ஒன்றல்ல. புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று மிகவும் இறுக்கமாகச் சொல்லியிருந்தோம். வன்னியில் நடந்த சண்டையில் மக்களைப் புலிகள் கொத்துக் கொத்தாகச் சுட்டுத் தள்ளுகிறார்கள், யுத்தத்திற்குள்ளும் குழந்தைகளைக் கடத்துக்pறார்கள் என்றும் நாம் சொல்லிக்கொண்டிருந்ததை வெறும் புலி எதிர்ப்புக் கோசமாக தேடகம் உட்பட பலர் தவிர்த்துவிட்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று இவர்கள் எல்லோருக்கும் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இலங்கையிலிருந்து வந்து சொல்ல வேண்டியிருக்கிறது.

இன்று ஒருவருடகாலத்தின் பின்னாலும் விடுதலைப்புலிகளின் தோல்வி வெறுமனே புலிகளின் தோல்வியாக மட்டும் கருத முடியாது இத்தோல்வி ஒட்டுமொத்த தமிழர்களின் தோல்வியே என்று தேடலில்(தேடல் 16 பக்கம் 88) எழுதியுள்ளார்கள். புலிகள் செய்த அத்தனை  இன அழிப்புக்களையும் பாசிசச் செயற்பாடுகளையும் கொலை வெறியையும் மிக நூதனமாக  தமிழ் மக்களின் தலையில் கட்டிவிடும் செயற்பாடு இது. தேசியவிடுதலைக்கான தலைமையைக் கைப்பற்றுவதற்கான போட்டியில் ஆயுதமுறையில் வெற்றிபெற்று பெரும்பான்மைத் தமழர்களின் பிரதிநிதிகளாகினார்கள் விடுதலைப்புலிகள் என்று புலிகளின் சகோதரக் கொலைக்கு மென்மையான சாயம் ப+சியது தேடகத்தினரது சென்றவருட அறிக்கை. இந்தவருடம் புலிகளது இராணுவ ஒடுக்குமுறைக்கு தம்மைத் தக்கவைக்க முடியாத அமைப்புக்கள் இலங்கை அரசிடம் தஞ்சமடைந்ததார்கள் என்று அதே கொலை வெறியாட்டத்திற்கு கொஞ்சம் வீர சாயம் ப+சியிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசுக்குழு புலிகளின் கடந்தகாலத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கேட்பதுடன் பலவந்தமான முஸ்லீம் மக்களது வெளியேற்றத்திற்கும்  முஸ்லீம் மக்களது படுகொலைக்கும் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்று கேட்கிறது. இந்த நாடு கடந்த அரசு என்பதை எப்படி விடுதலைப்புலிகளது தொடர்ச்சி என்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. விடுதலைப்புலிகளது இரணுவமும் அதன் தலைமையும் அழிக்கப்பட்டு அதன் வலைப்பின்னல் செயற்பாடுகள் அனைத்தும் செயலிழந்த நிலையில் உலகெங்கும் இயங்கிய விடுதலைப்புலிகளது பினாமிகள் தமது பணத்தைத் தக்கவைக்க நாடுகடந்த அரசு என்றும்  வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்றும் மக்களவை என்றும் பிளவுபட்டுப் போயிருக்க நாடுகடந்த அரசு மட்டும் புலிகளின் தொடர்ச்சி என்று சொல்வதன் நோக்கம் என்ன? இதற்குள் தமிழ்த் தேசியத்தின் தூண்களாக தம்மைச் சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லீம்கள் மீதான வன்முறைக்கு 20வருடம் கழித்து மன்னிப்புக்கோரியுள்ள வேடிக்கையும் நடந்து விட்டது. இப்போ யார் விடுதலைப் புலிகளது தொடர்ச்சி?

வெறும் மன்னிப்புக் கேட்டுவிடுவதன் மூலம் சகோதரப் படுகொலைகளிலும் கந்தன் கருணைப் படுகொலையிலும் காத்தான்குடிப் படுகொலையிலும் அறந்தலாவையிலும் வெருகல் ஆற்றிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்ட அத்தனை இளைஞர்கள் வாழ்வும் வலியும் மறக்கப்பட்டுவிடுமா என்ன? ஒரு இனத்தின்  அழிவை முன்னின்று நடாத்தியவர்கள் விடுதலைப்புலிகள். தனது இனத்தை தானே அழித்த இனம் நம்முடையது. இந்த அழிவை தூபம் போட்டு வளர்த்தவர்கள் தமிழ்ஈழம் என்றும் தேசிய விடுதலை என்றும் சொல்லி அத்தனை அழிவுகளுக்கும் காரணம் கற்பித்துக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் எந்த சபையில் பாவமன்னிப்புக் கேட்டாலும் எக்காலத்திலும் பாவம் தீரப்போவதில்லை.

சூரியனைத் தின்றவர்கள்- இரண்டு கவிதைகள்- வரலாற்றின் தடையம்.
சூரியனைத் தின்றவர்கள்

சூரியனைப் பிய்த்து

தம் சீடர்களுக்கு அதையளித்து

அவர் கூறியதாவது:

அனைவரும்

இதனை வாங்கித் தின்னுங்கள்

இது

உங்களுக்காக கையளிக்கப்படும்

என் அதிகாரங்கள்

இதனை உட் கொள்ளும் நிமித்தம்,

ஒளியின் மீதான ஆட்சியையும்

இருளின் மீதான ஆதிக்கத்தையும்

நீங்கள் அடைகிறீர்கள்

எனது ராஜ்ய பரிபாலனத்தின்

திறவுகோல்களை

உங்கள்

இடுப்பிலும் தோளிலுமாகச்

சுமத்துகிறேன்.

அவர்கள் எலும்புக்கூடுகளின் மேல்

உங்களது இருப்பும்,

உங்கள் அனைவரின்

எலும்புக்கூடுகளின் மேல்

எனது இருப்பும்

எனதேயான சித்தம்

ஒன்றை மட்டும்

நானுங்களுக்குச் சொல்லுகிறேன்

ஆயுதங்களின் மீதான

நம்பிக்கையையும்

அராஜகங்களின் மீதான விசுவாசத்தையும்

வலுப்படுத்துங்கள்

ஏனெனில்

தண்டிக்கும் அதிகாரம் மட்டுமேயன்றி

மன்னிக்கும் அதிகாரம்

உங்களுக்கு வழங்கப்படவில்லை

எவனொருவனை நீங்கள்

மரணத்திற்கு தீர்வையிடுகிரீர்களோ

அவனது மரணம்

எனது நித்திய அரசின்  ஓர்

செங்கல்லுக்குச் சமானமாகும்

நீங்கள் ஒவ்வொருவரும்

சுடுகுழலின் மீது

பிரமாணிக்கமாயிருங்கள்

உங்கள்

தூக்கத்தின் துணையாக

துப்பாக்கிகளே

என்றென்றும் இருக்கக்கடவதாக!

துப்பாக்கியை இழக்கும்

எவனொருவனும்

எனது

மந்தைகளை மேய்க்கத்

திராணியற்றவனாவான்

இயற்கை மரணம்

உங்களை அணுகாதபடிக்கு

செய்யவேண்டியது

எனது

பேரரசின் கடமை என்பதை மறவாதீர்

பூமி எங்கும்

வானத்து மீன்களைப் போலவும்

கடற்கரை மணலைப் போலவும்

மானுடத்தின் பிணங்களை

பல்கிப் பெருகச் செய்யுங்கள்

எனது அரசின் வரலாறு

மனிதக் குருதியால்

எழுதப்படும் என்ற

தீர்க்கதரிசிகளின் வாக்கு

நிறைவேறக் கடவதாக!

-தமயந்தி- (நோர்வே/ 10.ஜனவரி.1989)

(சரி நிகரில் வெளியானது, மார்கழி 1990)

தின்றது அவர்கள் மட்டும்தானா?

எமது சூரியனை

அவர்கள் தின்றுவிட்டதாக

பட்டையம் எழுதி

நாலாதிசைகளிலும் நாட்டிய காலங்களக் கடந்து

நாலடியெடுத்து நடந்து வந்த வழியில் தான்

ஒட்டி மெலிந்து எலும்பும் தோலுமாய்

கூதலித்தபடி தெருமுனையில் குந்தியிருந்த

உண்மையாளை காண நேர்ந்தது

சேடனிழுத்தபடி உண்மையாள் சொன்னாள்

“ஆளாளுகொவ்வொரு கடியென

சமமாய்த்தான் தின்றார்கள்

காரியமென்னவெனில்

அகண்ட வாயுடையோன்

அதிகமாய்த் தின்றான்

அவ்வளவுதான்”  என்று

சாம்பற் குவியலுக்குள்ளிருந்து

தீய்ந்துபோன

சூரியனின் ஒற்றைக் கை

மேலே உயர்ந்தது

இதை நான் ஆமோதிக்கிறேன் என்றவாறாய் .

அந்திம வானத்தின் அடிப்பரப்பில்

மறைந்து செல்லும் பறவைபோல்

அரூபமாகிக்கொண்டிருந்தது விடுதலையும்

அதன் பொருட்டான போரும்

கரைகளில் ஒட்டிக்கிடந்த கொஞ்ச நஞ்ச

அமைதியும் சமாதானமும்

இவை

இன்னும் சற்று நேரத்தில்

மறைந்து போகவும்கூடும்.

இப்போதவது சொல்லமாட்டீர்களா

நமது சூரியனை

நாமேதான்,

எல்லோருமாகவேதான்

தின்று தீர்த்தோமென்று.

-பானுபாரதி

20.05.1990

பெயல் மணக்கும் பொழுது – கற்சுறா
ஒரு செயலைத் தொடங்கு முன் அது பற்றி உன்னால் முடிந்தவரை தேடு.  உன்னால் முடிந்தவரை என்பது அசைவற்ற, பற்றற்ற தேடுதல் அல்ல. முன்னும் பின்னும் அருகும் முரணுமாய் தேடவேண்டும். நாம் செய்கின்ற செயல் சரியானது என்பதோ தீர்க்கமானது என்பதோ தீர்மானிக்கப்படமுடியாதது. சரியையும் தவறையும் சகல திசைகளிலும் துளாவிச் சொல்லுதல் வேண்டும். இது இருத்தலுக்கும் இயங்குதலுக்குமான பருத்த உறைவிடத்தை நம்மிடம் உணர்த்திச் செல்லும் பெரும் புள்ளியாக இருக்கும்.

ஆம், கடந்த காலங்களில் ஈழம் பற்றிய தீ தமிழ்நாட்டில் பரவலாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் இலக்கியமாகட்டும் இசையாகட்டும் எதையும் அது விட்டுவைக்கவில்லை. கால்நூற்றாண்டுக்கு மேலாக யுத்தத்தில் இரண்டு இனங்கள் இரத்தமும் சதையுமாக வாழந்து கொண்டிருந்தது. நடந்த ஈழயுத்தம் குறித்தோ அல்லது அவர்களது கோரிக்கைகள் அழிவுகள் குறித்தோ தமிழ்நாட்டு பத்திரிகைகள் சஞ்சிகைகள் எக்காலத்திலும் உண்மையை எழுதியதில்லை. ஆரம்பத்தில் வாஸந்தி மூலம் உள்நுழைந்த இந்தியாருடே மற்றும் குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைளும் பின்னாளில் காலச்சுவடு உயிர்மை போன்ற சஞ்சிகைகளும் தமது வியாபாரத்தைப் பெருக்கும் குறிக்கோளைத் தவிர சரியான பக்கங்களை எழுதவேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. இறுதி யுத்தகாலங்களில் தமது கழிவிரக்கங்களை வெளிக்கொண்டுவர தமிழ்நாட்டில் தோன்றிய தேசியவெறிக்கு ஈடுகொடுக்க கடைநிலை எழுத்துக்களை  பிரசுரித்தார்கள் அவர்கள். அதேபோல சினிமாக்காரர்களான பாரதிராஜா சீமான் போன்றவர்கள் தமது ஆகக்குறைந்தளவு ஈழம்பற்றிய தெளிவுகூட இல்லாது தமது அரசியற்பிரவேசங்களுக்காக ஈழவிடுதலை குறித்துப் பேசினார்கள். தமக்கான குறைந்தளவு தேவைகளுக்காகக்கூட ஈழவிடுதலைபற்றி பேசவேண்டியிருந்தது அவர்களுக்கு. மறுபக்கம் இதில் முக்கியமான விடையம் என்னவென்றால் எதையும் விமர்சனத்தூடாகப் பார்க்கும் நோக்கைக் கொண்டிருந்த  பல அறிவுசீவிகளும் கைவிட்டார்கள். திராவிடத் தேசியம் பற்றிப் பேசி ஈழவிடுதலைக்கு முடிச்சுப் போட்டார்கள் அவர்கள். வெறும் வீரவேசங்களை தமது வழிபாடாக்க வேண்டியிருந்தது.  தமழ்நாட்டாளர்களுக்கு இது ஒருபக்கம் பணம் பண்ணும் நோக்கமாகவும் மறுபக்கம் தமது அரசியல் நுழைவாகவும் இருமாங்காய்களை விழுத்த ஈழமக்களது வாழ்வும் மரணமும் துணைநின்றது.

இந்தவகையில் இலக்கியப் பக்கத்தின் செயற்பாட்டாளர்களாக புலம்பெயர் கவிதைகளைக் கொண்டுவந்த திருநாவுக்கரசும் பெயல் மணக்கும் பொழுது என்ற ஈழத்துப் பெண்கள் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவந்த  அ.மங்கையும் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள். மேற்சொன்னவர்களுக்கு கொஞ்சமும் குறைந்து விடவில்லை இந்த இரு இலக்கியவாதிகளின் செயற்பாடு.

பெயல் மணக்கும் பொழுது என்ற தொகுப்பு ஈழம் எரிந்து கொண்டிருக்கும் போது அதன் தீச்சுவாலையின் வெளிச்சத்தில் காசுபண்ண வெளிக்கிட்ட இன்னும் ஒரு தடயமாகவே நான் பார்க்கிறேன். மங்கை அவர்களுக்கு தொகுப்பை வெளியிடுவதில் மிக மிக அவசரம் தெரிந்தது. இன்று உலகில் இருக்கின்ற சாத்தியப்பாடுகளுக்கு இறந்தவர்கள் போக குறைந்தளவு ஈழத்துப் பெண்கவிஞர்கள் பெரும்பாலனவர்களுடன் தொடர்பு கொண்டிருக்க முடியும். ஜெயபாலனும் மதுசூதனனும் ஐங்கரநேசனும் பெண்கவிஞர்கள் பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டிய தேவையில்லை. குறைந்தபட்சம் கவிதைகள் குறித்த அக்கறையுடைய பெண்களுடன்; பேசியிருக்க வேண்டும். அல்லது ஈழத்து, புலம்பெயர் சஞ்சிகை பத்திரிகை ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இவை எதற்கும் மங்கை அவர்களிடம் அவகாசம் இருக்கவில்லை.

கனடாவந்திருந்த போது மங்கையிடம் பெயல் மணக்கும் பொழுது தொகுப்பில் எனது கவிதையும் இருக்கிறது என்று தெரிவித்த போது,எனக்குத் தெரியும். அவசரத்தில் கவனிக்க முடியவில்லை என்றே மங்கை அவர்கள் தெரிவித்தார். எனது கவிதை வெளிவந்தது  இருள்வெளி என்ற தொகுப்பில். அதன் தொகுப்பாளர் சுகன் அவர்கள் பாரீஸில் இருப்பவர். கிருஸ்ணராஜாவே அதனை வடிவமைப்புச் செய்தவர். இவர்கள் யாருடனும் மங்கை அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை. இந்தமாதிரி அவசரத்திற்கான காரணம் என்ன என்று மங்கை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஈழத்துஎழுத்தாளர்களது எழுத்துக்களை அவர்களது உடன்பாடுகள் இல்லாது  தொகுக்கப்படும்  பின் அரசியல் தெளிவுபடுத்தப்படவேண்டும். ப.திருநாவுக்கரசின் செயற்பாடுகள் குறித்து நமது அதிருப்தியை முன்னர் தெரிவிதிருக்கிறோம். அவர் புலம் பெயர் கவிதைத் தொகுப்புத் தொகுக்கும் போது எந்தக் கவிஞர்களுக்கும் தெரிவிக்கவில்லை. அவருக்கு நிறையவே தொடர்பிருந்தும்.

இது நிறுத்தப்படவேண்டும்.

மங்கை திருநாவுக்கரசு போன்றவர்கள்  பாரதிராஜா போல் போலீஸ்ஜீப்பில் எறி அடுத்த சந்தியில் இறங்கத் துடிக்கும் அரசியல் இனி இலக்கியப்பக்கம் செய்ய மாட்டார்கள் அதிலும் ஈழத்தை வைத்துச் செய்யமாட்டார்கள் என்று நம்புவோ

சோபாசக்தி, தீபச்செல்வன் உரையாடல் குறித்த எதிர்க்கதையாடல். கற்சுறா – அசுரா
ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டு வார்த்தை போதும்.”

ஞானசம்பந்தர் ஞானப்பால் குடித்து ஐந்து வயதில் பதிகம் பாடியதாக எமக்கு புராணம் சொன்னது. புராணங்கள் எல்லாமே புரட்டுகள்தான் என்று மனம் புறந்தள்ளியது. “ஆனால்கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது.எங்களுக்கு என்ன நடக்கிறது? நாங்கள் யார்? என்று புரிந்து கொண்டேன். ஆமிக்குப் பயந்து வாழும் வாழ்க்கை எனக்கு அந்த வயதிலேயே தெரிந்தது.” என புலிப்பால் குடித்து ஆறுவயதில் தமிழ்த் தேசியப் புராணம் பாடிய தீபச்செல்வனுக்கும் திருஞான சம்பந்தருக்கும் மிஞ்சி..மிஞ்சிப்போனால் ஒரு வயதுதான் வித்தியாசம். இந்த தீபச்செல்வனது அதிசயம் எம் கண்முன்னாலேயே நடக்கிறது. எனவே ஐந்து வயதில் சம்பந்தர் பதிகம் பாடியிருப்பார் என்பதை நாம்  இப்போது ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தீபச்செல்வன் புலிஆதரவாளராக இருப்பதும் புலி இராட்சியத்தின் அவசியம் குறித்துப் பேசுவதும் நமக்கு ஒரு பொருட்டல்ல. இப்படியான மனம்படைத்தவர்களுடன் உரையாடுவதும் ஒரு தவறான விடயமும் அல்ல.

ஆனால் ஆக்க இலக்கியம் குறித்த சிந்தனையாளர்கள் எனக் கூறிக் கொள்பவர்களும், பன்முக சிந்தனைகள், மாற்றுக் கருத்தியல்களின்  அவசியம் கருதுபவர்களும் தீபச்செல்வன் போன்றவர்களின் உணர்வெழுச்சி உந்துதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதே இங்கு விவாதப் பொருளாக உள்ளது.

இந்த நேர்காணல் குறித்து நாம் கேட்கும் முதல் கேள்வி யாதெனில்,

“கிளிநொச்சி இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி, எழுத்து, ஆவணப்படம், திறநாய்வு, ஊடகவியல் எனப் பல துறைகளில் இயங்கிக் கொண்டிருப்பவர்.’பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ …… போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகின்றார். தற்போது யாழ்ப் பல்கலைக்கழக ஊடக நிலையத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றும் தீபச்செல்வனுடன் இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகக் கேள்விகள் அனுப்பியும் பெற்றுக்கொண்ட பதில்களிலிருந்து துணைக் கேள்விகள் அனுப்பிக் கூடுதல் பதில்களைப் பெற்றும் நிகழ்த்தப்பட்டது.” போன்ற அறிமுகங்களினூடாக தீபச்செல்வனை அணுகுவதா?

அல்லது தீபச்செல்வனின் பதில்களில் உறைந்து கிடக்கும் அறியாமையையும் அலட்சியங்களையும், தீபச்செல்வன் போன்றவர்களால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் விளைவுகளையும் அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டியது அவசியமா? என்பதுதான்.

போரைக்குறித்தும் போரின் வடுவைக்குறித்தும் அலைந்து திரியும் ஏதலி வாழ்வு குறித்தும் எங்கள் புலவர் சேரன் பாடாததையா தீபச்செல்வன் தற்போது பாடப்போகின்றார்.

துயிலா இரவுகளில்

அப்பா என்று அலறித்துடிக்கின்ற

சின்ன மழலைக்கு

என்னதான் சொல்வாய்?

உலாவித்திரிந்து நிலவைக் காட்டி

அப்பா கடவுளிடம் போனார்

என்று சொல்லாதே.

துயரம் தொடர்ந்த வகையைச் சொல்

குருதி படிந்த கதையைச் சொல்

கொடுமைகள் அழியப்

போரிடச் சொல்;

இரவல் படையில்

புரட்சி எதற்கு?

எங்கள் நிலத்தில்

எங்கள் பலத்தில்

எங்கள் கால்களில்

தங்கி நில்லுங்கள்

வெல்வோமாயின் வாழ்வோம்

வீழ்வோமாயினும் வாழ்வோம்

நமது பரம்பரை போர் புரியட்டும். (சேரனின் ‘நீ இப்போது இறங்கும் ஆறு’ எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

என்றெல்லாம் கவிதைபாடி உணர்ச்சி ஏற்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், குழந்தைகளையும் கொல்லக் கொடுத்துவிட்டு தனது வாழ்வை எவ்வாறு தக்கவைத்துள்ளார் புலவர் சேரன் என்பதைப் பாருங்கள். ‘வீழ்வோமாயினும் வாழ்வோம்’ என்று பாடியதற்காகவே இன்று ‘வீழ்ந்தபோதும்’ அவர் நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு தனது ஆதரவை நல்குவதனூடாக அவர் ‘வாழ்ந்து’ கொண்டிருக்கின்றார்.

இந்த நேர்காணலின் வாசிப்பு மன நிலையானது ஒரு ஆரம்பகால புலி உறுப்பினருக்கும், ஒரு நிரந்தர (eternal) புலி உறுப்பினருக்குமான உரையாடலில்  எதிர்நிலைகளில் கேள்விகளும் விடைகளும் போய்க்கொண்டிருப்பதான ‘தோற்ற மயக்கத்தில்’ இழுத்துச் செல்லும். ஆனால் உண்மை அதுவல்ல. விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிந்ததும் இணையத்தளங்களில் அவரது படங்களைப்பார்த்ததும் எனது இரண்டு கண்களும் தாழ்ந்தன. நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒரு குழந்தைப் போராளியாக இருந்தவன் அதனால் காட்டப்பட்ட படம் அவரேதான் என்பது எனக்குத் தெரியும். என்று சோபா எழுதியபோது எமக்கு எதுவித ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை. விடுதலைப்புலிகளது சாகசவிளையாட்டில் அதிகமாய் மயக்கமுள்ளவர் அவர்.  கொரில்லா நாவல் அதற்கு நல்ல உதாரணம்.

அதனால்தான் சொல்கிறோம் தனக்குரிய அரசியலை தீபச்செல்வனுக்குள்ளால் கொண்டுவர நினைக்கிறார் அவர். அதனால் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் எவ்வாறிருக்கவேண்டும் எவ்வாறிருக்கக்கூடாது என்று தீபச்செல்வனிடம் புத்திமதி கேட்கிறார் அவர்.

இதே கேள்விகள் நிலாந்தன், கருணாகரன்,  புதுவை ரத்தினதுரை, ஜெயபாலன், உருத்திரகுமார், சீமான், வை.கோபால்சாமி  போன்றவர்களிடம்  கேட்டாலும் இதேமாதிரி சப்புக்கெட்ட பதில்கள் தான் வரும். இனிவருங்காலங்களில் அவர்களிடமும் கேட்கப்பட்டு அவற்றை லும்பினி இணையத்தில் பிரசுரித்து எல்லோரையும் புல்லரிக்க வைக்கவேண்டும்.

முதலில் நாம் ஒன்றைத் தெரி(ளி)ந்து கொள்ளவேண்டும். “யுத்தம்தான் என்னை உண்மையான எழுத்தையும் இலக்கியத்தையும் நோக்கி நகர்த்தியது” என தீபச்செல்வன் அவர்கள் கூறியதிலிருந்தும், “நானோ விடுதலைப்புலிகள் தொடர்பான நிரந்தரமான விருப்பை வைத்துக் கொண்டு பேசுகின்றேன்” என்று கூறுவதனூடாகவும் தீபச்செல்வனிடம் தொடர்ந்து கேட்கவேண்டிய கேள்வி என்பது புலிகளின் சாகசம் குறித்ததாக மட்டுமே இருக்கமுடியும்.

தீபச்செல்வன் அவர்கள் தான் ஆறுவயதில் பெற்ற ஞானத்திலிருந்துதான் உலகத்தைப் பார்க்கிறார். பாவம் அவர். அவர் இலங்கையின் அரசியல் சமூக வரலாறுகள் குறித்த தேடலோ அது குறித்த அக்கறையோ எதுவுமற்ற ஒரு அப்பாவி.

புலிகள் காலத்தில் தொடர்ச்சியாகவே யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் புலிகளைக் காப்பாற்றுவதிலும் யாழ் மேலாதிக்க சிந்தனையை பேணுபவர்களுமாகவே இருந்து வந்தவர்கள். இதில் முறிந்த பனை ஆசிரியர்கள் மட்டுமே விதி விலக்காக இருந்துள்ளனர்.

புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது: “ இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள், சிங்களவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் வளர்ந்த பின்புதான் அறிந்தேன். அதை யார் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அப்பாவிச் சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் கொல்வது தீர்வல்ல என்று விடுதலைப்புலிகள் கருதியவர்கள் என்பதை நான் அறிவேன்”. என்கிறார் தீபச்செல்வன். கேக்கிறவன் கேணையன் என்றால் கேப்பையிலும் பால் வழியுமாம்.

அட அதுக்கு அப்படி ஒரு புலுடா விடுகிறாரென்று பார்த்தால்,  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகள் பற்றிக் கேட்டதற்கு, “அவர்கள் கொல்லப்படும் பொழுது நான் குழந்தையாகவும், சிறுவனாகவும் இருந்தேன். …..அவர்களைப் புலிகளா கொன்றார்கள் என்பதைப் பற்றியும் நான் அறியவில்லை. நான் உன்னதமான போராட்டம் நடந்த சூழலில்தான் நான் இருந்தேன்”. என்கிறார். எங்கபோய் முட்டுறது நாம.

“ஆனால் கிட்டத்தட்ட ஆறுவயதில் ஏன் யுத்தம் நடக்கிறது? எங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிந்து விட்டது”. என்று ஆறுவயதுக் குழந்தையாக இருக்கும்போதே இராணுவம் மக்களைக் கொல்வதையும், சிங்கள ஆட்சியின் அரசியலையும் அறிந்து கொள்ளக்கூடிய ஞானப் பார்வை பெற்றிருந்தவர் தீபச்செல்வன். ஆனால் அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும், அப்பாவிச் சிங்களவர்களையும்  புலிகள் கொல்லும் போது மட்டும் நான் குழந்தையாக இருந்தேன், நான் அப்போது  சிறுவன் என்றெல்லாம் குழைகின்றார். அவர் சொல்லுவதில்  ‘புலி நியாயம்’ ஒன்றிருக்கிறதல்லவா! புலிகள் தமது ‘உன்னதமான போராட்டத்திற்காகத்தானே’ தமது அதிகாரத்திற்கு எதிரானவர்கள் எனக் கருதுபவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். ”புலிகள் மரணத்தை எதிர்கொள்ளும் விதம் மக்களிடம் பெரியளவிலான ஆதரவைப்பெற்றது” என்று கூறும் தீபச்செல்வனுக்கு

“ஐயோ! நாங்கள் ஒன்றுமறியாத அகதிகள். எங்களால் சண்டைபோட முடியாது. எங்களுக்கு சண்டையில் விருப்பமில்லை. உங்களால் நாங்களெல்லாம் சாகப் போகிறோம். தயவு செய்து இங்கிருந்து போய்விடுங்கள்”. என பொதுமக்களின் வேண்டுதலை பதிவு செய்த முறிந்த பனை ஆசிரியர்களின் கள ஆய்வின் ஆதாரமான (பக்கம் 300) முறிந்த பனை நூலை வாசிக்குமாறு அடுத்த கேள்வியில் சொல்லியிருக்க வேண்டாமோ?

அந்த காலகட்டத்தில் தீபச்செல்வனுக்கு நாலு வயதுதானே இருந்தது என்ற காரணத்தால்  அவருடன் உரையாடியவர் அதைத் தவிர்த்துக் கொண்டாரோ என்னவோ!

“புலிகள் பொதுமக்களை பாதுகாப்புக்கான கவசமாக பயன்படுத்தினர். போராளிகள் மக்கள் செறிந்திருந்த மருத்துவமனைகளிலிருந்தும் கோயில்களிலிருந்தும் பாடசாலைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி தப்பிக்கொண்டனர்”.(முறிந்த பனை, பக்கம் 357) …“அக்டோபர் யுத்தத்தின் போதும் இலங்கை அரசோ, இந்திய அரசோ தமிழ் மக்களின் அக்கறைகளை ஒருபோதும் பொருட்டாகவே கருதியதில்லை என்பதை நாம் அறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகள்கூட தமது இயக்கத்தின் குறுகிய நலன்களைவிடப் பொதுமக்களின் ஜீவமரணப் பிரச்சனைகளை மிகவும் அற்பமாகவே கருதியிருந்ததை அக்டோபர் யுத்தத்தின்போது அவர்கள் நடந்து கொண்ட விதம் நன்றாகவே தெளிவாக்கியது.” (முறிந்த பனை, பக்கம்405) இங்கே ஒன்றை நினைவு கொள்ளவேண்டும் முறிந்த பனை நூல் ஆசிரியர்கள் இலங்கை அரசிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்ட  அனைத்து இயக்கங்களையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியவர்கள். அதுமட்டுமல்லாது இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட யுத்த காலத்தில் களப் பணிகள் ஊடாக மக்களை ஊர், ஊராக, கிராமம், கிராமமாக சென்று நிலமைகளை நேரில் கேட்டு, அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

அக்காலகட்டத்தில் மக்கள் ஓரளவிற்கு புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை காட்டியுள்ளனர். 90 களின் பிற்பகுதியிலிருந்து மக்கள் வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர். இப்படியான சூழலே புலிகள் அழியும் வரை வட-கிழக்குப் பகுதியில் இருந்து வந்தது.

“விடுதலைப் புலிகளுக்கு அறிவுரை சொல்லும் விதமாக இருக்கவில்லை விடுதலைப் புலிகளை அழிக்கும் விதமாகவே இருந்தது” எனக் கூறிய தீபச்செல்வனுக்கு புலிகளுக்கு அறிவுரை கூறி பலன் அற்ற காரணத்தாலேயே புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் சூழல் ஏற்பட்டது என்பதாக கூறியருக்க வேண்டாமா?

தீபச்செல்வன் போன்றவர்கள் புலிகள் புனிதமானவர்கள் என்று பட்டைச்சாராயம் அடித்து நாக்குச் செத்தவர்கள் போல் திரும்பத்திரும்ப ஒரேபதிலைச் சொல்வார்கள். ஊருக்கே தெரிந்த விடையம் தமக்குத் தெரியாது என்பதாக புலுடா விட இவர்களால் மட்டும்தான் முடியும். இவர்களுக்கு நடைபெற்ற எல்லமே தெரியும். ஆனால் இன்றுவரை புலிகளுடன் கூட இருந்து நம்பி ஏமாந்து போனதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே ஒரு உண்மை. அதனால் தாம் சொல்வது பொய் என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. இறுதி யுத்தத்தில் புலிகள் மக்களைக் கொன்றார்கள் என்று எத்தனையோ நேரடி ஆதாரங்கள் இருந்தும் தீபச்செல்வன் பச்சையாக மூடிமறைக்க வேண்டியிருப்பதற்கு வேறுகாரணம் எதுவும் இருக்க முடியாது. அந்த உண்மையை இன்று கருணாகரன் இந்தியாவில் இருந்து விதுல்ராஜா போன்ற பல புனைபெயர்களில் சொல்வதனால் கருணாகரனுடன் தற்போது தான் முரண்படுவதாகச் சொல்கிறார்.

சாதாரணமாக விடுதலைப்புலியில் இணைந்துகொண்ட ஒரு போராளி என்பவனுடைய சிந்தனையில் இருக்கக்கூடிய ஆகக் குறைந்தளவு நேர்மைகூட இல்லாதவர் அவர். புலிகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பதில்களையே திரும்பத்திரும்பச் சொல்லும் தீபச்செல்வன் போன்ற புலி உத்தியோகத்தர்கள் எப்போதும் ஆபத்து நிறைந்தவர்கள். ஒரு இனத்தின்  கொடடுரமான படுகொலைகளுக்கு துணைபோனவர்கள்  தீபச்செல்வன் போன்றவர்கள்.

பார்த்தீர்கள்தானே பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கும் விடுதலைப்புலிகளது உத்தியோகத்தரான தீபச்செல்வன் கேட்கப்படும்  மிகச் சாதாரணமான கேள்விகளுக்கு அற்பத்தனமாகப் பதிலளிப்பதை!  சகோதரப்படுகொலை குறித்து கேட்டால்..,  அப்போது நான் குழந்தை. முஸ்லீம்கள் வெளியேற்றம் குறித்து, அப்போது நான் குழந்தை. கிழக்கிலங்கைப் படுகொலை… அப்போது நான் சிறுவன். சிங்களமக்கள் படுகொலை… அதை நான் அறியவில்லை. என்று குழந்தைத்தனமாகவே பேசிக் கொள்கிறார். இங்கே பல்வேறு ஆதாரங்களையும்,  விளக்கங்களையும் எழுதி தீபச்செல்வனின் புத்திக்குள் புதைக்கவேண்டும் என்ற எண்ணமும் கருசனையும் எமக்கில்லை. அது நமது தேவையுமல்ல.

ஏனெனில் அவர்களுக்கு சகலதும் விளக்கமாகத் தெரியும். நாமும் காலாகாலமாக எழுதியும் வருகின்றோம். ஆனால் தீபச்செல்வன் போன்றவர்களது ஏக்கம் கவலையெல்லாம் தாம் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அவசரமாக அழிந்து போனதைப் பற்றித்தான். தங்களது அந்த ஏக்கத்தைத்தான் மக்கள் மனதில் இருந்து என்றும் புலிகளது நினைவு அழியாது என தமக்காக மக்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

இன்றைய ஜேர்மனியர்கள் தமது மூதாதையர்கள் செய்த செயல் குறித்து மிகவும் வெட்கப்படுகிறார்கள். அதேபோல் புலிகளது தீபச்செல்வன்கள் போன்ற உத்தியோகத்தர்களும் வெட்கப்படும் நிலை உருவாகவேண்டும்.

இந்த உரையாடலானது ‘இனிஒரு இணையத்திலோ’ தேசம் இணையத்திலோ’ அல்லது ‘லங்காசிறீ இணையத்திலோ’ ஏன் கனக்கவேண்டாம் even சோபாசக்தி டாட் காமிலையோ (!!!) வந்திருந்தால் நாம் இதை வாசித்து விட்டு பிறங்காலால் உதைத்து தள்ளிவிட்டு சிவனே என்று சென்றிருப்போம்.

ஆனால் நாம் தொடர்ச்சியாக வாசித்துவரும் ‘லும்பினி இணையத்தில்’ வந்ததால் தான் இதை நாம் எழுத நேரிட்டது. காரணம் லும்பினியில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் மிகப்பெரிய சிந்தனையாளர்கள், இலக்கிய வாதிகள்,பேராசிரியர்கள், தலித் சிந்தனையாளர்கள். இவர்கள்   புலிகளின் அதிகார மோகத்தையும், அதற்கான அவர்களது பாசிச அணுகுமுறைகளையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். எனவே இவர்களிடமே சில நியாயத்தை நாம் கோரவேண்டியுள்ளது.

“மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார அரசுக்கு ஏதிராக சிங்கள முற்போக்குச் சக்திகளிடையே பலமான ஓர் எதிர்ப்பியக்கம் தோன்ற வாய்ப்புள்ளதா?” என புலியின் நிரந்தர ஆதரவாளரான தீபச்செல்வனிடம் கேட்கவேண்டியதின் தார்மீகம் தான் என்ன?

புலிசெய்த சர்வாதிகாரம் என்பது ‘பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்’ என்ற காரணத்திலா முதலாளித்துவ சர்வாதிகாரம் குறித்து தீபச்செல்வனிடம் வினா தொடுக்கப்பட்டது?

1983 இல் தான் பிறந்ததால அதற்கு முன்பு நடந்ததெல்லாம் தனக்குத் தெரியாது, அதை நான் அறியவில்லை நான் குழந்தை, நான் சிறுவன்.  நான் ஆறுவயதில் இருந்தே புலிப் புராணம் பாடுகின்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அழித்த ஒருவரிடம் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் குறித்தும், மேலும் உலகமயமாதல் குறித்தும் கேட்கப்படும் கேள்விக்கான நியாயம் தான் என்ன?

தீண்டாமை குறித்தெல்லாம் இவரிடம் எந்த நியாயம் எதிர்பார்க்கப்பட்டது?

“சாதிய ஒடுக்குமுறை மீறலை பேசும் இலக்கியங்கள் இன்று காலத்திற்கு ஏற்ப ஈழத்தில் எழவில்லை” என்று கூறும் தீபச்செல்வனுக்கு தெணியான் எனும் தலித் எழுத்தாளர் இருப்பது தெரியவில்லை. புலிகளின் அடக்குமுறைக் காலத்திலும் சாதிய ஒடுக்கு முறை குறித்த இலக்கிய படைப்புகளை எழுதி வந்தவரல்லவா தெணியான் அவர்கள்?

வடபகுதியில் எழுந்த சாதி எழுச்சிபோராட்டங்களான தேனீர்கடை பிரவேசம், கோவில் நுழைவுப்போராட்டம் போன்ற சமூக அதிர்வுகள் தீபச்செல்வனின் புத்திக்குள் நுழைந்திருக்குமா?

“யாழ்ப்பாணம் புலிகளது ஆட்சியின் கீழ் இருக்கவில்லை என்பதனால் சாதிய ஒடுக்குமுறை இருக்கலாம்”.  “…..வன்னியில் தீண்டாமை முற்றாக ஒழிந்திருந்ததைப் பார்த்திருக்கின்றேன்”.என்று கூறும் தீபச்செல்வனிடம், அட நாசமாப்போவானே உன்ர வாய்  அழுகிப்போகும்.என்று சோபாவால் கூறமுடியாதிருந்ததன் காரணம் என்ன. முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு பிற்பாடு வன்னியில் கிளம்பிய சாதிய அதிர்வுகளை  சோபா தொட்டுக்காட்டியிருக்கலாமே?

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்தபோது சாதியம் சடைத்துக் கிளம்பியதை அங்கு சென்று வந்தவர்கள் நேரில் பார்த்து அறிந்ததாக வெளிவந்த செய்திகள் சோபாவுக்குக்கூடத் தெரியாது போனதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறுகிறார் தீபச்செல்வன் அவர்கள். அண்மையில் வவுனியாவில் “வெளிய போங்கடா சக்கிலிய நாய்களே” என சாதிவெறியில் குலைத்தவர் தீபச்செல்வன் நம்புகின்ற தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் அங்கத்தவர்.

நாம் அனைத்தும் அறிவோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யார்…திபச்செல்வன்கள் யார்…இவர்களின் கருத்துக்களும், சிந்தனைகளும் யாருக்குரியது என அனைத்தும் நாம் அறிவோம்.

தீபச்செல்வனோடு உரையாடியவர் மிகப்பெரிய எழுத்தாளர். முற்போக்கு, மாற்றுச் சிந்தனை, மார்க்சியம், ரொட்ஸ்கியம், ஜனநாயகம், தலித்தியம், புலிகளின் அராஜகம், மனித உரிமை போன்ற பல தளங்களில் பயிற்சிபெற்று (!!!) அவை குறித்தெல்லாம் ‘அக்கறையுடன்’  பேசியும் , எழுதியும் வருபவர்.

எமக்கு தீபச்செல்வனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் யாவும் எதிரும்-முரணுமாக நகர்வதான ஒரு ‘தோற்ற மயக்கமாகவே’ இருக்கின்றது. காண்பதிலிருந்து நாம் காணததைக் காணுகின்றோம். இருந்தபோதும் தீபச்செல்வனிடம் தொடுக்கப்பட்ட கேள்விகள் யாவும் வெறும் சம்பிரதாய பூர்வமானதென்றோ, அல்லது இது வெறும் அயோக்கியத்தனமான நாடகம் என்றோ நாம் தீர்ப்புச் சொல்லிவிட முடியாதுள்ளது.

ஏனெனில் இது ‘லும்பினி இணையத்தளத்தில்’ வந்த சம்பவம். நாம் கண்டபடி எதையும் பேசிவிடமுடியாது. அதில் எழுதி வருபவர்கள் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் எனவே தான் நாம் அவர்களிடம் (லும்பினியில் கட்டுரைகள் எழுதுபவர்களிடம்) நியாயம் கேட்கின்றோம். லும்பினியில் வரும் ஆக்கங்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எனும் குறைந்த பட்ச உரிமையுடன்தான் இந்த நியாயத்தைக் கேட்கின்றோம். எமக்கு நீங்கள் பல்வேறு எடுகோள்கள் காட்டி ,பல்வேறு சித்தாந்தங்களை முன்வைத்து  நியாயங்கூற முயற்சிக்க வேண்டாம். ஏனெனில் எமக்கு அவை புரியாமலும் போகலாம். நறுக்கென்று இரண்டு வார்த்தையில் விளக்கம் அளித்தாலே போதுமானது.

கேள்வி, 1) தீபச்செல்வனுடன் உரையாடியதன் மூலமாக கண்டிறிந்த உண்மைகளை பேசியிருக்கவேண்டாமா? புலிகள் விதைத்த பாசிசம் வேரோடு அழிக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா?

கேள்வி,2) தீபச்செல்வன் முற்போக்கு இலக்கிய வட்டத்திற்கும், மாற்றுச்சிந்தனை கொண்டவர்களுக்கும், ஜனநாயகம் மனித உரிமை குறித்தெல்லாம் அக்கறைகொண்டவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய ஒரு ‘இலக்கியப் பொக்கிசமா’?

ஆம்..இல்லை, என நறுக்கென்று இரண்டுவார்த்தை போதும்.

நன்றி.