Matrathu » Report

39வது இலக்கியச்சந்திப்பு.
விளிம்பு: விழிப்பும்  விசாரணைகளும்

ரொறொன்டோ கனடா மே 5-6 2012

1. கனேடிய சமூக வாழ்வியல் – முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள்

2. ஆக்க இலக்கியங்கள் – மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய வடிவங்கள், மேடை   ஆற்றுகைகள், திரைப்படங்கள்

3. போருக்கு முன்-பின் ஈழத்து நிலை

4. புலப்பெயர்வு வாழ்வியல் – குடிபெயர்வு செயன்முறைகள், புலம்பெயர்வு  வரலாற்றுப்பதிவுகளும் இனக்குழுத் தொடர்ச்சிகளும், புலம் பெயர் இலக்கியங்கள்  மரபுகள்; மீள்வரையறைகளும் புத்துயிர்ப்புக்களும் 80க்குப்பின்

5. பெண்ணியமும் பெண்கள் விடயங்களும்- கலாசாரங்கள், சம்பிரதாயங்களின்  மீள்எழுகை,   காலப்பதிவுகள் 80க்குப்பின் புனைவு இலக்கியங்களில் பெண்கள்  பங்களிப்பு

6. சமகால உலக ஒழுங்குகள்: அனைத்துலக முற்றுகைப்போராட்டங்கள், அரபுலக போராட்டங்கள்

இத்தலைப்புக்களின் கீழ் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர்,  கட்டுரைக்கான முன்மொழிவுகளை 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் எழுதி,  உங்களைப் பற்றிய விபரங்களுடன் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்பாக llakiyasanthipu39@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு – ஒழங்கமைப்பாளர்

சுமதி 647 351 2213

http://ilakiyasanthipu39.blogspot.com/

தமிழ் இடதுசாரிகளும் யாழ் மையவாதத்தின் சிந்தனையும்; -சண்முகலிங்கம்.
சண்முகலிங்கம் அவர்கள் கடும் சுகயீனமுற்று கடந்த ஒன்றரை வருடங்களாக படுக்கையிலிருக்கிறார். தற்போது சிறிது முன்னேற்றமடைந்து Craig lee nursing home இல் இருக்கிறார்.

சமூக அக்கறையாளனாக ஒரு விடுதலைப் போராளியாக தன்னுடைய இளமைக்காலத்திலிருந்து செயற்பட்டுவந்தவர் சண். காந்தீயத்தில் செயற்பட்டதும் சந்ததியார் தொடர்பும் மறுபக்கம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனான இணைந்த செயற்பாடுகளுமென தன்வாழ்நாள் பூராவும் ஏதோ ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர் அவர். கனடாவில் தேடகம் தொடக்கம் மாற்றுச் சிந்தனை குறித்த  அத்தனை விவாதங்களிலும் கலந்துரையாடல்களிலும் செயற்பாட்டாளனாய் முன்னுக்கு நிற்பவர். அவருடன் ஒருபக்கம் சேர்ந்து இயங்குவதும் இன்னொருபக்கம் சண்டையுமாகவே நமக்கு காலம் கழிந்தது. அவருடைய கருத்துக்களில் பல இடங்களில் முரண்படுகிறோம். அவருடைய குறுக்கு வாதங்களும் குழப்படிவாதங்களும் பலருக்கு முகச்சுழிவை ஏற்படுத்தியிருக்கிறது. முகத்துக்கு நேரே பேசிவிடும் அவரது தன்மை அவரிடமிருந்து பலரை விலத்திப்போக வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட அவரிடமிருக்கும் அனுபவமும் தகவல்களும் பெறுமதியானவை. அவற்றை முடிந்தளவு பெற்றுவிடவேண்டுமென்று நினைத்து கேட்டபோது எழுதித் தந்தது இந்தக் கட்டுரை. இது மற்றது இதழ் -2 இல் 2006 ஆண்டு வெளிவந்தது. அவர் எழுதுவதற்கு மினக்கட்டவர் இல்லை. அவர் சமூகச் செயற்பாட்டாளன். தனது கருத்துக்களுக்குரிதாய் வாழ்ந்தவர். ஈழவிடுதலைப் போராட்டங்கள் குறித்தும் சிங்கள இடதுசாரிகள், ஜே.விபியினர் என்று நாம் அறியாத ஆரம்பகாலத் தகவல்கள் நிரம்பவே அவரிடமிருக்கின்றது. அவர் சுகமடைந்து விரைவில் வரவேண்டும்.

கற்சுறா.

தமிழ் இடதுசாரிகளும்  யாழ் மையவாதத்தின் சிந்தனையும்;

-சண்முகலிங்கம்.

ஓரு மனிதன் பிறந்து,  மனித கூட்டமாக வாழும் பொழுது – அதிகாரம் கொண்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட, புரையோடிய சமூகப் பிரச்சனைகளை தன்வசப்படுத்தி, தன்கையில் எடுத்து செயல்ப்படும் போது ஒருமனிதன் பயங்கரவாதியாகவோ, அல்லது சமூக சிந்தனை கொண்ட முற்போக்குவாதியாகவோ உருவாகிறான்.

இந்த அடிப்படையை வைத்துத்தான் இலங்கையில் உள்ள இடதுசாரிகளை பற்றிய எனது விமர்சனம் அமைந்துள்ளது.

ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் மார்க்சிய இடதுசாரிக ளாகவும், சோஷலிச முற்போக்குவாதிகளாகவும் இருந்துள்ளார்கள் என்பதை நான் மறுதலிக்கவில்லை. உலகத்தில் உள்ள இயங்கியல் தத்துவ மேதைகள், தோழர்கள்  இவர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்கள். முதலாளித்துவத்துக்கு எதிராக இவர்களினது கேள்வியோ, விமர்சனமோ அமையவில்லை. இதற்கு மாறாக முதலாளித்துவத்தை வளர்க்க உதவியது. இதனால் மார்க்சியத்தின் இயங்கியல் தன்மை தடைப்பட்டதற்கு இதுதான் மூல காரணமாக அமைந்தது. இந்த விமர்சனத்தை வைத்து முதலாளித்துவவாதிகள் மார்க்சிய தத்துவத்தையும், புரட்சி நடந்த நாடுகளையும் சிதைத்தார்கள். எனவே என் விமர்சனம் அப்படியாக அமையக் கூடாது என்ற எண்ணத்தில் விமர்சிக்கின்றேன்.

இலங்கையில் இடதுசாரி அமைப்புக்கள் உருவாவதற்கு மூல காரணமாகும் அடிக் கல்லாக அமைந்த அமைப்பு 1924 ம் ஆண்டு யாழப்பாண வாலிபர் காங்கிரஸ் ஆகும். இதை ஆரம்பித்தவர்கள் யாழ்ப்பாணத்தில் உயர் கல்விகற்ற மாணவர்கள் ஆகும். இதில் ஹென்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்பிரமணியம், ஜே. வி. செல்லையா, நாகலிங்கம், காரளசிங்கம், வைத்திலிங்கம் நேசையா, நாகலிங்கம், கார்த்திகேசன் மாஸ்ரர், குமாரகுலசிங்கம் சகோதரர்கள், பொன் கந்தையா போன்ற பலர் இந்த அமைப்பில் அங்கம் வகித்தார்கள். இதில் தேசியவாதிகளும், முற்போக்குவாதிகளும், மார்க்சியவாதிகளும் அங்கம் வகித்தார்கள். இவர்கள் மத்தியதரவர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் அந்நியராட்சிக்கும், அவர்களின் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த உயர் இந்து உயர் சாதிகளுக்கும் எதிராக செயற்பட்டார்கள்.

இக்காங்கிரசின் கொள்கையானது இலங்கைக்குப் பூரண சுயாட்சி, சுயமொழிகளில் கல்வி, தேசிய ஒற்றுமை, சாதி தீண்டாமையை எதிர்த்தும், தேசிய இலக்கியம்- கலை- கலாசாரம் பேணல், தொழிலாளிகளின் நலனுக்காக தொழிற்சங்கங்கள் போன்றவைகளை உருவாக்கி, திட்ட வரையறை செய்து பிரச்சாரத்தையும், போராட்டங்களையும் நடத்துவது என்று முடிவு செய்து நடைமுறைப்படுத்தினார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் வரை இவர்களுடைய போராட்டம் ஆளும் ஐரோப்பியர்களுக்கும், யாழ் இந்து உயர் சாதியினர்களுக்கும் பெரும் தலையிடியைக் கொடுத்தது.

இக்காலகட்டத்தில் தென் இலங்கையில் உள்ள உயர் மத்தியதர வர்க்கத்தைச் (தரகு முதலாளிகள்) சார்ந்தவர்களின் பிள்ளைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வந்தார்கள். இத் தருணம் இந்தியாவின் தேசியப் போராட்டம் ஆரம்பம் ஆகியது. இதன் விளைவால் ஆசிய நாட்டவர்களுக்கு எதிரான போக்கு அங்கு உருவாகியது. இதனால் இலங்கை மாணவர்களை இது வெகுவாக பாதித்தது. இவர்களை பாதுகாத்தவர்கள் ஐரோப்பிய மார்க்சிய சிந்தனையாளர்கள் ஆகும். இதனால் இவர்கள் மத்தியில் மார்க்சியக் கருத்துக்கள் வேர் ஊன்றியது. இதனால் இவர்கள் மத்தியில் ஒரு மாற்று அரசியல் கொள்கை மார்க்சிய அடிப்படையில் உருவாகியது.

அன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் வறுமையில் வாடினார்கள். இச்செயலை வர்க்க ரீதியாகப் பார்த்து, தம் முழு இலங்கை மக்களையும் ஆளப் பிறந்தவர்கள் என்று கருதினார்கள். இவர்களுக்கு முன்பதாகவே ஏகாதிபத்திய வாதிகளான டி. எஸ். போன்றவர்கள் முழு மக்களையும் அடிமையாக்கும் அரசியலை ஐரோப்பியர்களின் ஆதரவுடன் நடத்தினார்கள்.

இம்மார்க்சியவாதிகள் முழு இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடன் இலங்கை வந்து, தெற்கில் வாலிபர் முண்ணனி என்ற அமைப்பை 1929 ம் ஆண்டில் உருவாக்கினார்கள். இதில் கொல்வின், விக்கிரமசிங்க, பிலிப் , லெஸ்லி, என். எம். பெரேரா, பீற்றக் கெனமன், பொன் கந்தையா, அ.வைத்திலிங்கம்  போன்றவர்கள் முக்கியமானவர்களாகும். அன்று இவர்கள் மார்க்சிய இயங்கியல் விஞ்ஞான சோஷலிசத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாகவே இலங்கைக்கு வந்தார்கள்.

முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய யாழ்வாலிபர் காங்கிரசும், தெற்க்கு வாலிபர் முன்னணியும் இணைந்து, அகில இலங்கை வாலிபர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். 1930ம் ஆண்டு ஐரோப்பியர்களின் பெப்பிமல் இயக்கத் துக்கு எதிராக சூரியமல் வியாபாரம் என்ற அமைப்பை உருவாக்கி முழு இலங்கை மக்களுக்குச் சேவை புரிந்தார்கள்.

மேற்கூறப்பட்ட மார்க்சிய இளைஞர்கள், ஒரு குழப்பமான முதலாளித்துவ கல்வி முறையை கற்றதுடன், தீவிர மார்க்சிய கருத்துக்களோடும், சோஷலிச சிந்தனையுடனும் வளர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். அன்றைய அரசியல் சூழ் நிலையால் இவர்களின் வர்க்கமுகம் அன்று மறைந்து இருந்தது. சுதந்திரத்துக்குப்பின் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றங்கள் இவர்களை அதிகார அரசியலுக்கு இழுத்துச் சென்றது. இதன் காலப்போக்கில் அவர்களின் அரசியல் நடவடிக்கையால் ஏற்பட்ட நடைமுறை செயற்பாட்டில், அவ்வர்க்க முகம் தோன்றத் தொடங்கியது. இவர்களில் அதிகமானோர் தங்களை ஒரு மார்க்சிய வாதியாகவோ அல்லது சோஷலிசவாதியாகவோ வெளிக்காட்ட விரும்பவில்லை. சோஷலிசத்துக்கு மாற்றுப் பெயராக, சமசமாஜிகள் என்ற பெயர் பதத்தை பாவித்தார்கள். இதனால்தான் இவர்கள் உருவாக்கிய கட்சிக்கு அப்பெயரை சூட்டினார்கள். இவர்கள் பாராளுமன்ற அதிகாரத்தில் நாட்டம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். சுதந்திரத்துக்கு முன் வர்க்க உணர்வுடன் அதி தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். இதனால் பாட்டாளிவர்க்க மக்கள் இவர்கள் பின்னால் சென்றார்கள். 1956ம் ஆண்டுக்குப்பின் அப்பாட்டாளி வர்க்கத்தையோ கைகழுவி விட்டார்கள். காட்டியும் கொடுத்தார்கள்.

1926 ம் ஆண்டு ஐரோப்பாவில் பட்டப் படிப்பு முடிந்து வந்த எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஒரு சோஷலிசக் கட்சியை ஆரம்பித்தார். புஞ்ச மகா பலவேகய என்ற அடிப்படையில் தேசிய அபிலாசைகளையும், முற்போக்குத் தன்மையையும் கொண்டு இருந்தது. அன்றைய அரசியல் சூழ்நிலையில் இவருடைய சோஷலிசக் கொள்கை தோல்வி அடைந்தது. அதன்பின் அவர் யு. என்.பி.யுடன் இணைந்து கொண்டார். பின் 1956ம் ஆண்டு இலங்கைத் தேசிய முதலாளித்துவத்தை மையமாக வைத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தொடங்கினார். இதனால் இவ்இடது சாரிகளின் வீழ்ச்சி ஆரம்பமாகியது. பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணத்துடன் இவ் இடதுசாரிகள் தேசிய முதலாளித் துவக் கட்சியுடன் இணைந்து கொண்டார்கள். இதன் விளைவு 1960ம் ஆண்டுக்குப் பின் உழைக்கும் வர்க்கத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டது. 1960ம் ஆண்டுக்குப் பின் இவர்களினது வர்க்க முகம் தெளிவாக வெளிவந்தது. தமிழர்களின் நியாயமான உரிமைகளை மறுதலித்தார்கள். இதற்கு கொல்வினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் மூல யாப்பு நல்ல உதாரணமாகும். தொழிலாளர் உரிமைப் போராட்டத்தை நசுக்கிய பெருமை என்.எம். பெரேராவுக்கு உரியது. முதலாளித்துவ வாதிகள் எப்படி இவ்விடதுசாரிகள் மூலம் இலங்கையில் உள்ள முழு மக்களின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பறித்ததற்கு இதைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை.

பண்டாரநாயக்காவின் வரவுக்குப் பின் தமிழ் பேசும் சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு கல்வி அறிவும், அரசு தொழில் வாய்ப்பும் கிடைத்தது. இத்துடன் யாழப்பாணத்தில் மாற்றுக் கருத்துக் கொண்ட தலைமைகள் உருவாகியது. இதற்கு ஜி. ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற யாழ் மையவாதத் தலைமையின் தோல்வி நல்ல உதாரணமாகும்.

1935 ம் ஆண்டு முதலாவது இடதுசாரிக் கட்சி உருவாகியது. இதில் இலங்கைத் தேசியவாதிகள், சீர்திருத்தவாதிகள், சோஷலிசவாதிகள், கம்யூனிசவாதிகள், முற்போக்கு சிந்தனை வாதிகள் அனைவரும் அங்கம் வகித்தார்கள். எனவே சோஷலிசம், கம்யூனிசம், வர்க்கம் என்ற மொழிப்பதங்களை மக்களிடம் இருந்து தவிர்க்கும் நோக்கத்தில்தான் சமசமாஸக் கட்சி என்ற பெயர்ப்பதத்தை பாவித்தார்கள்.

இம்மார்க்சிய இடதுசாரிகள் முதலில் லெனினிசத்துக்கும் (3 வது அகிலம்), ட்ரொஸ்க்கியத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு, முதல் பிளவை உண்டு பண்ணியது. சமசமாஸக் கட்சியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்வாதிகள் 1940 ம் ஆண்டு ஐக்கிய சோஷலிசக் கட்சியை உருவாக்கினார்கள். இக்கட்சி அரசால் தடைசெய்யப்பட்டது. பின் இவர்கள் 1943ம் ஆண்டு கம்யூனிஸ்சக் கட்சியை உருவாக்கினார்கள். பின்னர் 1963 ம் ஆண்டு ரஷ்சியா-சீனா என்ற முரண்பாட்டால் மீண்டும் பிளவு ஏற்பட்டது. இதன் மூலம் சீனா கம்யூனிஸ்சக் கட்சி சண்முகதாசன் தலைமையில் உருவாகியது. பீற்றக் கெனமன் தலைமையில் ருசியக் கம்யூனிஸகட்சி என்ற பெயரில் பழைய கட்சி இயங்கியது. இவ்விடதுசாரிக் கட்சிகள் அமைத்த தொழிற் சங்கங்களின் தலைமைப்பதவியில் இருந்த தலைவர்கள் தனியாக பிரிந்து சென்று தனித்துவமாக இயங்கினார்கள். இவர்கள் தான் எட்மன் சமரகொடி, பாலத்தம்பு, வாசுதேவ போன்றவர்கள் ஆகும். இவர்களின் செயற்ப்பாடுகளால் பல இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்களும் உருவாகியது. இதனால் பாட்டாளிவர்க்கம் பிளவுபட்டது. இதனால் தொண்டைமான் போன்ற முதலாளிகள் தொழிற்சங்கங்களை அமைத்து தொழிலாளர்களின் தலைவனாக வரமுடிந்தது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட இடதுசாரி தொழிற்ச்சங்கங்கள் 100, 200 தொழிலாளர்களைக் கொண்ட சங்கமாக மாறியது. தொண்டைமானின் தொழிற்சங்கம் லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட சங்கமாக மாறியது.

இவ்விடதுசாரிகளின் செயற்பாடு தொழிலாளர்களை விற்கும், வாங்கும் பொருளாக மாற்றிவிட்டது. இதனால் தொண்டை மான் போன்ற முதலாளிகள் தொழிலாளர்களின் தலைவனாக வரக்கூடியதாக அமைந்தது. இடதுசாரிகள் ஒட்டுமொத்தமாக விட்ட பிழைகள்தான் ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்சியான யு. என். பியும் வர்க்க உணர்வை கதைக்க தொழிற்சங்கங்களை ஆரம்பிக்க தொடங்கிவிட்டார்கள்.

இம்மார்க்சிய கட்சிகள் ஒரு புரட்சிகர கட்சியாகத் தங்களை தயார்ப்படுத்தத் தவறியதுதான் இவர்கள் விட்ட மாபெரும் தவறாகும். ஒரு சக்திமிக்க வெகுஜனப்புரட்சி மார்க்கத்தை அடைவதற்கு தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும்  புரட்சிகரமான போதனைகளை அல்லது நடைமுறைகளை செயல்லாற்றவில்லை.

இவ்விடதுசாரிகள் பாராளுமன்ற அபேட்சகர்களை நியமனம் செய்யும் போது கூட உயர் சாதியினர்களை நியமித்தார் கள். ஏனெனில் எதிராக நிற்பவர்கள் உயர் சாதிகள் என்பதால். சிங்களவர்களாக இருந்தாலும் சரி, தமிழர்களாக இருந்தாலும் சரி ,இந்துக்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, உயர் குடி மக்களே ஆகும்.  பொதுவாக மார்க்சிய முற்போக்கு இடதுசாரிகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள மேல்வாரியான தரவுகளை தந்துள்ளேன். இவைகளை நீங்கள் விரிவாக பார்க்கவும்.

யாழ்ப்பாணத்து மார்க்சிய இடதுசாரிகள் சுதந்திரத்துக்கு முன், பல தொழிலாளர்களின் நலனை முன் வைத்து அன்னியர் ஆட்சி அதிகாரத்துக்கும், அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்த இந்து உயர் சாதியினர்களுக்கும் எதிராகவும் பல போராட்டங்களையும் நடத்தினார்கள். இப்போராட்டம் இலங்கை தழுவிய போராட்டமாக அமைந்தது. அன்னியர்களின் அதிகாரத்துக்கு ஊடாக பௌத்த சிங்கள பேரினவாதிகளின் (டி. எஸ். போன்ற) ஒத்துழைப்புடன் தேசியவாதியும், முற்போக்குத் தொழிற்சங்க வாதியுமான பொன்னம்பலம் அருணாச்சலத்தை யாழ் இந்து ஆதிக்கார வர்க்கம் அரசியலில் இருந்து அகற்றினார்கள். இதன் பின்னர்தான் ஜி. ஜி. பொன்னம்பலம் மூலம் அரசியல் ரீதியான யாழ் உயர் சாதியின் மேலாதிக்கம் வித்திடப்பட்டது. இந்த மேலாதிக்கவாதிகள் – யாழ் இந்து உயர் சாதியினர்கள் – யாழ் மையவாதசிந்தனைப் போக்கை மெல்ல வளர்த்தெடுத்து  பயங்கரவாதியின் கையில் கையளித்துள்ளார்கள். இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பங்கு பெரும் அளவில் இருந்தது.

ஏ. ஈ. குணசிங்கத்தின் இனவாதப் போக்கை எதிர்த்தும், அருணாசலத்தின் அரசியலை விட்டு ஒதுங்கிய பின்பும் வர்க்க உணர்வுடன் இனபேதங்கள் உருவாகாமல் பாதுகாத்துக் கொண்டவர்கள் இவ் இடதுசாரிகளே. (1948 ம் ஆண்டு வரை).

1956 ம் ஆண்டுக்குப் பின் சிங்கள இடதுசாரிகள் இனவாத ரீதியாக செயற்பட தொடங்கிவிட்டார்கள். தமிழர்களை நோக்கி தோசை, வடை என்ற கோஷத்தை முன்வைத்தார்கள். அன்று தமிழ் இடதுசாரிகள் இக்கோஷத்துக்கு எதிரக குரல் கொடுக்கவில்லை. இதன் பரிணாம வளர்ச்சி நிலை தான் இன்று புலிகளை தமிழ் இடதுசாரிகள் ஆதரிக்கும் நிலை.

1970 ம் ஆண்டுக்குப் பின் இவ்விடதுசாரிகளின் தப்பான போக்கு ஈழ விடுதலை அமைப்புகளில் இருந்து இயங்கிய மார்க்சிய முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்களையும், அமைப்புக்களையும் இந்த யாழ் மையவாதிகள் இலகுவாக அழிப்பதற்கு ஏதுவாக அமைந்தது. இதற்கு நல்ல உதாரணம் நாலு ஈழ விடுதலை அமைப்புக்களை இணைக்கும் கால கட்டத்தில், மார்க்சிய தத்துவத்தை ஏற்ற பல சிறிய அமைப்புக்கள் இயங்கின. அவ் அமைப்புக்களில் மார்க்சிய சிந்தனை கொண்ட முற்போக்கு இளைஞர்கள் இருந்தபடியால்  அச்சிந்தனைகளைக் கொண்ட தலைமை வந்துவிடும் என்ற காரணத்தால். அவ்வமைப்புக்களை இணைக்க யாழ் மையவாதிகள் தடையாக இருந்தார்கள். இவ் விணைப்பைத் தடுப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அமிர்தலிங்கமாகும். அன்று மார்க்சியவாதி என்று இனம் காட்டிக்கொண்ட வரதராஜப்பெருமாள்; அமிர்தலிங்தத்துக்கு பக்க பலமாக விளங்கினார். இவர் பிரான்ஸ்சில் இயங்கும் ஈ. பி, ஆர், எல். எவ். (மார்க்சிய கொள்கை கொண்ட ஈழ விடுதலை அமைப்பாகும்) என்ற அமைப்பின் கிளைக்கு பயங்கரத் தமிழ் தேசியவாதியான புஸ்பராஜாவை தலைவராக நியமித்தாh.;;; வரதர் தான் தலைவராக (முதல்வராக) வருவதற்கு எடுத்த நடவடிக்கை ஈ பி ஆர் எல் எவ் என்ற அமைப்பு அழிவதற்கு மூல காரணமாக அமைந்தது.

சண்முகதாசன் உட்பட தமிழ் மார்க்சிய இடதுசாரித் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் சிங்கள மக்கள் தங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இதனால் தலைமைக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி மவுனமாக இருந்து விட்டார்கள். இது சிங்கள பௌத்த இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது. (முழு இடது சாரிகளுக்கும் இது பொருந்தும்) இவ் இடதுசாரிகள் சிங்கள அரசியல்வாதிகள் தான் சிங்கள மக்களின் குரல் என்று கருதினார்கள்.  லும்பன் என்ற லெனின் கூறிய தார்ப்பரியத்தை புரிந்து கொள்ள முடியாத மார்க்சியவாதிகள், தெருச் சண்டியன்களுக்கு மார்க்சிய வகுப்பு எடுத்தார்கள். இக்பால், வி. பி போன்றவர்கள் வகுப்பு எடுத்தது நல்ல உதாரணமாகும்.

இந்த யாழ் மார்க்சிய இடதுசாரிகள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களானபடியால், உயர் சாதிச் சிந்தனைகள் அவர்களிடம் குடிகொண்டு இருந்தது. அந்த உயர்சாதி மனோபாவம் அவர்களைத் தமிழ் மக்களை ஆளும் எண்ணத்தை தூண்ட  அவர்கள் பாராளுமன்ற அதிகாரத்தை நாடினார்கள். இதனால் அனைத்து உயர் சாதியினருடனும்; சமரசம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் சிவசிதம்பரத்துக்கு எதிரக தருமரட்ணத்தையும், செல்வநாயகத்துக்கு எதிராக காரளசிங்கத்தையும் அபேட்சகர்களாக நியமித்தார்கள்.

இப்படியான நியமனங்கள் ஒவ்வொரு தொகுதிகளிலும் நடைபெற்றது. இச்செயற்பாடு இவ் இடதுசாரிகளின் உயர் சாதிச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இடதுசாரிகளை வளரவிடாது முடக்குவதற்கு அச்சிந்தனைதான் மூல காரணமாக அமைந்தது. தாங்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களை பகடைக்காயாக பாவித்தார்கள். இதில் சிலர் முற்போக்கு மார்க்சியவாதிகள் என்று இனம் காட்டி தங்களை வளர்த்துக் கொண்டு உயர் சாதியினர்கள் ஆக மறிவிட்டார்கள். தங்களை மறந்ததுவும் அல்லாமல் அம்மக்களையும் மறந்து அவர்களின் உணர்வுகளையும், உழைப்பையும் சுரண்டிக் கொண்டார்கள். இதில் தீண்டாமை என். நாகரட்ணம் மட்டும் விதி விலக்காகும்.

எந்த ஒரு மனிதன் மற்ற மனிதனுடைய உணர்வுகளையும், உழைப்பையும் சுரன்டுகின்றானோ அவன் ஒரு மேலாதிக்க வாதியாகும். இது இந்து உயர் சாதியின் தன்மையும் ஆகும்.

இத்தமிழ் இடதுசாரிகள் இலங்கையின் சமூக பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சியையும், இன முரண்பாடுகளையும், தத்துவத்தின் நவீன வளச்சியையும் உரிய மார்க்கத்தில் புரிந்து கொள்ள முடியாததால் (விமர்சனம் இவர்களுக்கு பிடிக்காத விடையம்) பழைய சொற்பதங்களை மீண்டும் மீண்டும் இசை மீட்டுக் கொண்டு, பழைய தத்துவ மார்க்கத்தில் செல்வதில் அதிக கவனம் செலுத்தினார்கள். தலைமையின் தவறான போக்கின் விளைவால் யாழப்பாணத்து முற்போக்கு மார்க்சிய வாதிகளும், யாழ்ப்பாணத்தில் மேல் மேல் உயர் சாதியானவர்களும், (இவர்கள் உழைப்பாளிகள்) இந்த இந்து உயர் சாதியினரின் ஆதிக்கத்தால் கவரப்பட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் வி.பொன்னம்பலம் செந்தமிழர் இயக்கம் ஆரம்பித்தது. யாழ் உயர் சாதியின் மையவாதம்  யாழ் மர்க்சிய இடதுசாரிகளின் சிந்தனையை அழித்ததற்கு நல்ல உதாரண மாகும்.

இதனால் ஒரு பொதுவுடைமைச் சமுதாயம் தமிழர்கள் மத்தியில் உருவாக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மனிதம் என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. தோழன் என்ற சொல் தமிழர்கள் மத்தியில் பிழையான அர்த்தத்தை கொடுத்துள்ளது. (தான் மனைவியின் சகோதரன் என்ற எண்ணப்பாட்டை உருவாக்கி விட்டது.). இத்தமிழ் இடதுசாரிகள் பேசியதற்கு நேர் எதிர்மாறான செயற்ப்பாட்டையே செய்தார்கள்.

இவர்கள் தங்களின் வீடுகளிலேயே, தங்கள் ஆதிக்கத்தில் இருக்கும் கோயில், குளம், கிணறு போன்ற பொது இடங்களை பொது சனங்களுக்கு திறந்து விடவில்லை. அம் மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. உயர் சாதிக் கட்சியினர் அவ் மக்களை எப்படிப் பாவித்தார்களோ அதே மாதிரியாகவே இடதுசாரிகளும் அம் மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.  இவ்விடதுசாரிகள் மத்தியில் காத்திகேசன் மாஸ்ரர் விதிவிலக்காக இருந்தார். இவர் இறக்கும் மட்டும் மார்க்சிய கொள்கையுடன் வாழ்ந்தவர். சமூகக் குறைபாடுள்ள மக்கள் மத்தியில் சென்று பிரச்சனைகளை அணுகியவர். மற்றவர்கள் அனைவரும் பிரச்சனைகளை தம் பக்கம் இழுத்துத்; தீர்வை அடைய முயன்றவர்கள். நல்ல உதாரணம் ஆலய பிரவேசம்.

இவ் இடதுசரிகள் பேசும் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் செயல் திறன் அற்றவர்கள். மார்க்சியம் ஒரு இயங்கியல் தத்துவம் என்பதை மறந்துவிட்டார்கள்.

சண்முகதாசன் புளொட், புலிகள் நடத்திய மேதினக் கூட்டங்களில் பேசினார். தொழிலாளவர்க்கம் என்று கருதப்பட்ட மலையக மக்களைக் கணக்கில் எடுக்காது முதலாளித்துவ கட்டமைப்புக்குள் உள்ளேயே தொழிற்சங்க வேலைகளை செயற்படுத்தினார்களே ஒழிய, அம்மக்களுக்கு வர்க்கச் சிந்தனைகளை போதிக்கவில்லை. மார்க்சுக்கு ஒரு ஏங்கல்ஸ் இருந்தமாதிரி இவ் இடதுசாரித் தலைவர்களுக்கு பல ஏங்கல்ஸ்சுகள் இருந்தார்கள். ஆனால் இந்த ஏங்கல்ஸ்கள் மார்க்சிய விரோதப் போக்கை கொண்டவர் களாக இருந்தார்கள். இதனால் இடதுசாரித் தலைவர்கள் இப்போக்கை பாராமுகமாக இருந்ததால் அவர்களுக்கு சுகபோகமாக வாழவழி கிடைத்தது.

கட்சியில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் போதும், தொழிலாளவர்க்கம் மிகப் பெரிய போராட்டத்தை நடாத்தும் போதும் சண்முகதாசன் அல்பேனியா போன்ற வெளிநாடுகளுக்கு தத்துவ முரண்பாடுகளை பேச சென்று விடுவார். கினக்கலை தோட்ட தொழிலாளர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்திய சமயத்திலும், யாழ்ப்பாணக் கிளை தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் நோக்கத்தில் கூடிய கூட்டத்துக்கும் வராது இருந்ததுடன் இரண்டாம் மூன்றாம் நிலையில் உள்ள தலைமைகளிடம் விடையத்தை  ஒப்படைத்தார். தொழிலாளர் நலன் பேண இராமையா போன்றவர்களையும், தேசிய இனப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு டானியல் போன்றவர்களையும் சண்முகதாஸன் நியமித்தது இதற்கு நல்ல உதாரணமாகும். இலங்கையின் இனப் பிரச்சனைகளைப் பற்றியும். வர்க்க முரண்பாடுகளைப் பற்றியும் விளங்கிக் கொள்ள முடியாத சண்முகதாசனை, ஓரளவுக்கு மார்க்சிய சிந்தனை கொண்ட இளம் தோழர்கள் விமர்சிக்க முற்ப்பட்ட போது அதை  எதிர்த்தவர்கள் சண்ணின் விசுவாசிகள் ஆகும்.  பின் புலிகளின் கொலைகளுக்கும், பயங்கரவாதத்துக்கும் மார்க்சிய ரீதியான விஞ்ஞான விளக்கத்தை கொடுக்கின்றார்கள் இவர்கள்.

ஜி. ஜி. கொழும்பை மையமாக வைத்து தமிழ் மக்களை ஆளலாம் என்று கருதிச் செயற்பட்டார். யாழ் மையவாதிகளான செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து தமிழ் பேசும் மக்களுடன் கூடி இருந்து ஆள்வதற்காக செயற்பட்டார்கள். மார்க்சிய இடதுசாரிகள் கொழும்பை மையமாக வைத்து பாட்டாளி மக்களை ஆளலாம் எனக் கருதி செயற்பட்டார்கள். மக்களுடன் இணைந்தால்த்தான் தங்கள் எண்ணங்களை நடைமுறைப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்ட யாழ் மையவாதிகளுக்குப் புரிந்தளவு இந்த மார்க்சியவாதிகளுக்கு புரியவில்லை. இதனால் உழைக்கும்  மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உருவாகியது. இந்த இடைவெளியை நிரப்ப தரகர்களை நாடவேண்டி வந்தது. இத்தரகர்கள் தான் தோட்டத்தில் உள்ள தலைவர்களும், மார்க்சியத்தைப் புரிந்து கொள்ளாத சிறு தலைமைகளும் ஆகும். யாழப்பாணத்தில் இயங்கிய மார்க்சிய இடதுசாரிகள் அனைவரும் தலைமையின் விசுவாசிகளாக இயங்கினார்கள். தலைமையின் விசுவாசிகளாக இருப்பதும், தலைமைக்கு எதிரானவர்களை துரோகி என்று கூறுவதும் தமிழர்களின் மரபாகும். இது தமிழரின் கெட்டிதட்டிப் போன மேலாதிக்க சிந்தனையாகும். இவ் விடையத்தில் இடதுசாரிகளினுடைய சிந்தனையும் ஒத்ததாகவே இருந்துள்ளது.

தொழில் ரீதியாக இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்த பல தமிழர்கள் வெளிநாடுகளில் தங்களை இடதுசாரிகள் என்று அறிமுகம் செய்வதை இன்று பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. திட்டமிட்டு முதலாளித்துவம், தேசிய இனப்பிரச்சனையை பாரிய அளவில் வளர்த்தபின்பும் வர்க்கப் பிரச்சனையை பேசிக் கொண்டு இருந்தார்கள் இந்த இடதுசாரிகள்.

பின்பு தங்கள் பிள்ளைகள் ஈழ விடுதலை இயக்கங்களுடன் இணைந்தவுடன் அவ்வியக்கங்களுடன் இணைந்து செயல்படுகின் றார்கள். அதனால்தான் இன்று பல மார்க்சிய இடதுசாரிகள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்ப்படுகிறார்கள். மாற்றுக் கருத்துக்கள் ஏதுமற்று புலிகளின் பயங்கரவாதத்துடன் இணைந்து மார்க்சியத்தில் விளக்கம் கொடுக்கின்றார்கள்.

பயங்கரத் தமிழ்த் தேசியவாதிகளை விட இவ்விடது சாரிகள்தான் பயங்கரவாதத்துக்கு பக்கபலமாக விளங்குகின்றார்கள். ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்கியபின் இலங்கையில் உருவான முரண்பாடுகளை இனம்கண்டு, தீர்க்கும் விதத்தில் மார்க்சிய விளக்கம் கொடுக்கும் பல முற்போக்குத் தமிழ் இளைஞர்களுடன் நட்பு ஏற்படுத்த இந்த பழைய மார்க்சிய இடதுசாரிகள் தயங்கினார்கள். ஏனெனில் தங்களைவிட அவர்கள் மார்க்சியத்தை நன்கு அறிந்து கொண்டு யதார்த்தமாக விவாதிப்பதால். சண்முகதாசன் தலைமையில் இயங்கும் சீனாக் கம்யூனிஸ் கட்சியால் தான் இனப் பிரச்சனைக்கு நல்ல தீர்வை கொடுக்க முடியும் என்று கருதி சந்ததியார், விசுவானந்ததேவன் போன்ற இளைஞர்கள் சண்ணுடன் கதைக்கச் சென்ற போது நீங்கள் இனவாதிகள் வெளியே போங்கள் என்று சொல்லி அனுப்பிய கூற்று இதற்;கு நல்ல உதாரணமாகும். டானியலும் அச் சந்தர்ப்பத்தில் இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. .

அன்ரன் பாலசிங்கம் புலிகளுக்கு மார்க்சிய வகுப்பு எடுத்தமை, இந்தியாவில் இயங்கிய ரெலோவுக்கு வி. பொன்னம்பலம் மார்க்சிய வகுப்பு எடுத்தமை, யாழ்ப்பாணத்தில் ரெலொ தாஸ்க்கு இக்பால் மார்க்சிய வகுப்பு எடுத்தமை இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மார்க்சிய இடதுசாரிகள் வகித்த வலுவான பத்திரத்தை யாரும் மறுதலிக்க முடியாது. இவர்கள் (தலைமைகள்) மார்க்சியப் பாதையைப் பின்பற்றி இருந்தாலும், இவர்கள் மத்தியில் பல குறைபாடுகளும், தத்துவப் போட்டிகளும், நடைமுறைத் தவறுகளும் நிறைய இருந்துள்ளது. இத்தவறுகளை சுட்டிக்காட்ட தலைமையின் விசுவாசிகளான பல தோழர்கள் மவுனமாக இருந்தார்கள்.  இதுதான் இன்றுவரைக்குமான சிக்கல்களுக்கு மூல காரணமாகும். எல்லாத் தவறுகளையும் மறைத்து எவ்வித கேள்வியுமற்று தலைமையைக் காப்பாற்றுதல் என்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் இன்றுவரைக்குமான மரபான செயற்பாடாய் வந்துவிட்டது. இதுதான் மேட்டுக் குடியின் சிந்தனையாகும். இச்சிந்தனைதான் யாழ்ப்பாணத்தில் இயங்கிய அனைத்து மார்க்சிய சிந்தனை கொண்டவர்களையும் அழித்தது.

உலகத்தில் பல தத்துவங்கள் மனித குலத்தை மனித நாகரிகத்தை மேன்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது.  இந்தத் தத்துவங்களை செயல்படுத்தியவர்கள் விட்ட பிழைதான் தத்துவங்களை பிழையாக்கி இயங்கவிடாமல் முடக்கியது. புத்த தத்துவமும், மார்க்சிய தத்துவமும் நல்ல உதாரணமாகும். இத்தத்துவங்களின் நெகிழ்ச்சிப் போக்கை உருவாக்க புதிய நவீன தத்துவங்கள் உருவாகியது. இவைகளை மக்களின் சமூகப் பார்வையில் பார்க்காமல், அதிகார அரசியலின் பார்வையைப் பார்த்து தங்களுக்கு சாதகமாக எடுத்து, இன்றைய முற்போக்கு வாதிகள் கதைக்கின்றார்கள்.

விமல் குழந்தைவேலின் – கசகறனம் – நாவல் உரை அரங்கு!

வடலியின் நான்கு நுால்கள் அறிமுக அரங்கு.
1. அபராதி ( கவிதைத் தொகுதி)

ஆசிரியர் : ஃபஹீமா ஜஹான்

அறிமுக உரை :மயூ மனோ

2. கொலை நிலம் ( முரண் அரசியல் உரையாடல்)

உரையாடியவர்கள் : ஷோபாசக்தி – தியாகு

அறிமுக உரை : அருண்மொழி வர்மன்

3.தேவதைகளின் தீட்டுத்துணி(சிறுகதைத் தொகுதி)

ஆசிரியர் : யோ.கர்ணன்

அறிமுக உரை : கற்சுறா

4.ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?( கட்டுரைத் தொகுதி)

ஆசிரியர் : கலையரசன்

அறிமுக உரை: ரதன்

இடம் -

Scarborough civic centre

150 Borough Drive

Scarborough, Ontario

M1P 4N7

காலம் – 09 Oct 2011 பி.பகல் 3.30 – 6.00 Pm.

தொடர்புகளுக்கு : 647-702-8603

:647 – 896-3036

குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு…
செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல்

ஸ்காபரோ விலேச் கொம்ய+னிட்டி சென்டர்

3600 கிங்ஸ்டன்

ஸ்காபரோ, ரொறன்டோ

(மார்க்கம் – கிங்ஸ்டன்)

சிறப்புரை: கல்வியும் சமூக நீதியும்

பேராசிரியர் சின்னத்தம்பி

(யாழ் பல்கலைக்கழகம்)

சிறப்பு நிகழ்ச்சி

ஒடுக்கப்பட்டவனின் குரல்

எழுத்தாளர் சோபா சக்தியுடன்  ஒரு உரையாடல்

தொடர்புகளுக்கு: 416 7311752-

Killலி சூனியம்.
Killலிசூனியம் குறித்த பதிவு.

-கற்சுறா

ஜோர்ஜ். இ.குருசேவ் அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலம் தொட்டு கடைசிவரை மிக இறுக்கமான விமர்சனங்களை முன்வைத்து வருபவர். 90களில் அவரால் கனடாவில் இருந்து வெளியிடப்பட்ட தாயகம் பத்திரிகை புலம் பெயர் சூழலில் மிக முக்கிய பங்காற்றியது. சமூகத்தில் நிகழும் ஆழுகுண்ணித்தனமான அனைத்து விடையங்கள் மீதும் தனது கோபம் மூலமும் நையாண்டித்தனம் மூலமும் விமர்சித்துத் தள்ளியவர். அவருடைய நாடகம் தான் முடைடலி சூனியம். ஜோர்ஜ் இ. குருஷேவினால் எழுதி, இயக்கியிருக்கும் முடைடலி சூனியம் எனும் இந்தப்பிரதி மயிர்க்கூச்செறியும் சாதியப் பின்புலத்தைக் கொண்ட நமது சமூகத்தில் தமிழ்த் தேசியம் வளர்க்கப்பட்டவிதங்களையும் பின்னர் அதீதமாக வெறியூட்டப்பட்டதாகத் தேசியம் மாறிய வடிவங்களையும்  கடந்தகால அனுபவங்களுக்குள்ளால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.  தியாகிக்கும் துரோகிக்கும் இடையில் ஈழ அரசியல் படும் அவஸ்தையை இந்தப்பிரதி கடுமையாக விமர்சனத்திற்குள்ளாக்கிறது. வழமையான ரொறன்ரோ தமிழ்ச்சூழலின் நாடகத்திலிருந்து சற்று வேறுபாடுடையதாக இருக்கும்; முடைடலி சூனியம் என்ற நாடகத்தில், முழுப்பிரதியின் ஒருபகுதி மட்டுமே தற்பொழுது மேடையேறியது. நேர அவகாசம் கருதி மிக முக்கியமான பக்கங்கள் பல நீக்கப்பட்டன என்பதைச் சொல்லியாகவேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஜோர்ஜ் அவர்கள் அவற்றையும் வெளிக்கொண்டுவரவேண்டும்.

பொதுவாக மிக அமைதியான கூச்சசுபாவமுடைய பேசுவதற்கு தயங்கும் குருசேவ் தனது எழுத்துக்களில் யாருக்கும் கருணை காட்டியதில்லை. தனது உண்மையை  தனது அறத்தை தனது கோபத்தை எப்போதும் எழுத்துக்களில் காட்டிநிற்பவர். நான் ஏன் இவற்றைச் சொல்லி வருகிறேன் என்றால் இந்த நாடகப்பிரதி பூராவும் இவை யாவும் பரவிக்கிடக்கிறது. தொடர்ந்து குருசேவின் எழுத்துக்களை வாசிப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள்.

இந்த நாடகம் யாழ்ப்பாணத்தை மையப்படுத்துகிறது. யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது என்ற வளை கோபுரம் திரையில் வரவேற்க ஒளி யாழ்ப்பாணத்து நிலச்சுவாந்தரான பாணரில் போய்க் குவிகிறது. தனது நிலங்களை சிங்கனிடம் பறிகொடுத்துவிட்டு சாய்மனைக் கதிரையில் தூங்கிக் கொண்டிருக்கும் பாணருக்கு கால்பிடித்துவிட்டு விசிறிக் கொண்டிருக்கும் அவரது அடிதடி, அவருக்கு எடுபிடி வேலை செய்யும் ஒடுக்கப்பட் சமூகத்தவரான எடுபிடி, பாணருடைய கணக்கு வழக்குகளைப்பார்த்துக் கொள்ளும் கணக்குப்பிள்ளை, அவ்வப்போது வந்து பாணருக்குப் புத்தி சொல்லி அவரை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் நல்லூர் அறுமுகம் வாத்தியார் போன்றவர்கள் மேடையில் இருக்க முதல் கட்ட நாடகம் தொடங்குகிறது. மிக இறுக்கமான உரையாடல் எடுபிடிக்கும் நல்லூர் ஆறுமுகம் வாத்தியாருக்கும் தொடர நாடகம் சூடு பிடிக்கிறது. ஈழத்தின் சாதியமைப்பின் விளையாட்டுக்களை மிகமிக நையாண்டித்தனமாக மிகக் கோபமாக இருவரது உரையாடலும் போட்டுடைக்கிறது.

வாத்தியார்: பொடியைப்பார்த்தால் படிச்சவன் மாதிரித்தான் கிடக்குது. சாதி குலம் கோத்திரம் சரியெண்டால் பேசலாம்தானே.

எடுபிடி: வாத்தியார் அதுக்கு நீங்கள் இவ்வளவு நேரமும் மினக்கெட்டிருக்கத் தேவையில்லை. நேரையே என்ன சாதி எண்டு கேட்டிருந்தால் சொல்லியிருப்பன்.

வாத்தியார்: இந்தியாக்காரன் மாதிரி நாங்கள் என்ன பேருக்குப் பின்னால சாதியே போட்டுவைச்சிருக்கிறம். உப்பிடி எவடம் அந்த ஒழுங்கையோ, இந்தக் கோயிலடியோ அவரைத் தெரியுமோ. இவருக்கு என்ன முறை எண்டு சுத்தி வளைச்சுத்தானே சாதியைப் பிடீக்கேலும்.

எடுபிடி: சட்டம்பியார் உங்கடநேரத்தை  ஏன் மினக்கடுத்துவான். நானும் இந்த ஊர்தான் கந்தசாமியின்ர பேரன்.

வாத்தியார்: அட… கந்தன்…ர… பேரன்.

எடுபிடி: பிறப்புப் பேர் பதியப் போகேக்கை கூட கந்தசாமி வைரவநாதனுகளை எல்லாம் கந்தன் வைரவன் பூதன் எண்டு சாதியை அறிய வசதியாப் பதிஞ்ச பரம்பரை… முழுப்பேர் சொல்லிக் கூப்பிட மனங்கேளாது.

வாத்தியார்: டேய் உன்னத்தானே உன்ர கொப்பன் எங்களிட்டப் படிப்பிக்க அனுப்பாமல் வெள்ளைச்சட்டை போட்ட பாதிரியிட்ட படிக்க அனுப்பினவன்.

எடுபிடி: எங்கட சனத்திற்கு நீங்கள் எங்க படிப்பிச்சனீங்கள்? அடிமை குடிமையாய் வைச்சு வேலையெல்லோ வாங்கிக் கொண்டிருந்தனீங்கள்.

வாத்தியார்: ஏன் நாங்கள் திண்ணைப்பள்ளிக்கூடத்தில உங்கட ஆக்களுக்கும் படிப்பிச்சனாங்கள் தானே.

எடுபிடி: ஓமோம்  மேலில சட்டை போடவிடாமல் நிக்கவைச்சுப் படிப்பிச்சனீங்கள்.

வாத்தியார்: நாங்கள் ஓரே ஆட்கள் உங்கட ஆக்கள் என்னெண்டு அந்நிய சாதிட்டப் போய் படிப்பியள்?

எடுபிடி: உங்களிட்ட வந்திருந்தாலும் என்ன கணிதமும் விஞ்ஞானமுமே படிப்பிச்சிருப்பியள். சும்மா தேவாரத்தையும் இலக்கணச் சுருக்கத்தையும் படிப்பிச்சுப் போட்டு எளிய சாதியரிடத்திலும் சைவமும் தமிழும் செழித்தோங்குது எண்டு காது குத்தியிருப்பியள்.

வாத்தியார்: உங்களுக்கு எங்கயடா காது குத்துறது? உங்களுக்கும் காது குத்தலாம் எண்டு ஆகமத்தில சொல்லயில்லையே

இப்படி மிகக் காரமான சாதிபற்றிய உரையாடல் வாத்தியாருக்கும் எடுபிடிக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்க வாத்தியாருக்கு பக்கபலமாய் இருந்து ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறார் கணக்கப்பிள்ளை. யாழ் சாதி வெறிபிடித்த சமூகம் தனக்கான தேசியத்தை எப்படிக் கட்டிவளர்த்தது என்பதையும். அதை எப்படி பொதுவானதாக்கி தனக்கு இயைபாக நாடகமாடியது  என்பதையும் நாடகத்தின் தொடர்ந்த உரையாடல் பதிவு செய்கிறது. ஆகம விளக்கத்துடன் விளக்கம் சொல்லும் வாத்தியாரை மறுத்து அடிதடி வைக்கும் அத்தனை விவாதங்களையும் மறுதலிக்க முடியாமல் போன வாத்தியார் ஒருகட்டத்தில்,

வாத்தியார்: சும்மா விதண்டாவாதம் பண்ணாதை. உப்பிடிக் கதைக்கிறதுக்கு உந்த வெள்ளைச்சட்டை போட்ட பாதிரியள் உனக்குக் காசு தந்திருக்கிறாங்கள்.

எடுபடி: இதுதானே உங்கட புத்தி கதைக்கமுடியாமல் போனவுடன அதகடிக்கிறது. நீ பொய் சொல்லிறாய். துரோகி. புறத்தியான் காசு தந்திருக்கிறான் என்று கதையைக் கிளப்பிவிடுறது. உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் இப்படிச் செய்யுறதின்ர பலனை எல்லாம்  நீங்கள் அனுபவிக்கிறத நாங்கள் பாக்கத்தானே போறம்.

வாத்தியார்: நாங்கள் ஆகமத்தில் சொல்லிறதின்ர வழியில நடக்கிறம் அதுக்கு எங்கள ஏன் குறை சொல்லுறாய்.

எடுபிடி: எளிய சாதியார் கோயிலுக்க வந்தால் தீட்டு. கிணத்தில தண்ணி அள்ளினால் தீட்டு கிளாசில தண்ணி குடிச்சால் தீட்டுவீட்டுக்குள் விட்டால் தீட்டு என்று சொன்ன ஆகமங்கள்  கோயில் வீடு கட்டுற வேலை கிணறு வெட்டுற வேலை வீட்டில சட்டிபானை கழுவிற வேலையையெல்லாம் சூத்திரரைக் கொண்டு செய்யுறதைப்பற்றி என்ன சொல்லியிருக்காம்?

வாத்தியார்: எங்கட ஆகமங்கள் சும்மா இல்லை. பாவத்துக்கும் தோசத்துக்கும் நிவர்த்தி வழி சொன்ன ஆகமங்கள்  தீட்டு நிவர்த்திக்கும் வழி சொல்லித்தான் இருக்கு. அதுதான் அவை தொட்ட தீட்டைக் கழிச்சுப் போட்டுத்தானே நாங்கள் பாவிக்கிறம்.

எடுபிடி: தாழ்ந்த சாதியாரிடத்தில் போசனம் பண்ணுதல் ஆகாது எண்டு சைவ வினாவிடையில் சொன்ன ஆகமங்கள் கள்ளுக் கொட்டில்ல எல்லாரும் வாய் வைச்சுக் குடிக்கிற பிழாவில கள்ளுக் குடிக்கேக்க எப்பிடித் தீட்டுக் கழிக்க வேணும் எண்டும் சொல்லியிருக்கோ?

வாத்தியார்: இஞ்ச சும்மா… சைவசமயத்தையும் எங்கட ஆகமங்களையும் கொச்சப்படுத்தாத கண்டியோ.

என்று யாழ்ப்பாணத்து சைவ வேளாளனின் -புத்திசாலிபோல் நினைக்கும் முட்டாள் தனமான விவாதங்களோடு நாடகம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்பப்போ தூங்க்கொண்டிருக்கும் பாணர் திடுக்கிட்டு எழும்புவதும் தனது காணிகளைப்பற்றிய கவலையில் அழுவதும் நடந்து கொண்டிருக்க தொடர்ந்தும் கணக்குப்பிள்ளையும் வாத்தியாரும் பாணருக்கு புத்தி சொல்லி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் எடுபிடி எதேச்சையாகச் சொன்ன சூனியம் என்பதைப் பிடித்தக் கொண்டு பாணருக்கு தலையில் திரும்பவும் மிளகாய் அரைக்கத் தொடங்கினார்கள். பாணரின் காணிகளை மீட்க சூனியம் செய்வதே ஒரே வழி என்பதில் திடகாத்திரமானார்கள். பாணருக்கு நம்பிக்கையில்லாமல் போக இதொண்டும் புது விசயமில்லைப் பாணர், காணிப்பிரச்சனை தொடக்கம்  கலியாணத்தக் குழப்புறது வரைக்கும் காலங்காலமாக நாங்கள் செய்யுற வேலைதான் என்று கணக்கு சூனியத்தின் மீதான நம்பிக்கையைப் பாணருக்கு கொடுக்கிறான். பாணரும் சரி எதாவது நடந்து தன்ர காணி வந்தால் போதும். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்று கடவுளில் பாரத்தைப் போட்டு சம்மதிக்கிறார். எடுபிடி பாணரை எச்சரிக்கிறார். உங்கட நன்மைக்காக என்று இவர்கள் ஏதோ செய்து கொண்டிருக்கினம். கடைசியா உங்கட தலையில் மொட்டை அடிச்சசு மிளகாய் அரைச்சு கடைசியில் நடுரோட்டில கோவணத்தோட நிப்பாட்டப் போகினம் ஏதோ புத்தியைப் பாவியுங்கோ. என மிரட்டுகிறார். அனால் யாரும் கேட்கவி;ல்லை. கணக்கும் வாத்தியாரும் சூனியம் செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். சூனியம் செய்து சிங்கனை போராயுதத்தால் வீழ்த்துவதே இவர்கள் கனவு. தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து சண்டையை நடாத்தச் சொல்லி அதற்கு தாங்கள் காசு தருவதாகவும், தாங்கள் அங்கு பெரிய புரளி கிளப்பி அங்குள்ள தலைவர்களோடு தாம் பேசி வெண்டு தருவம் எண்டு சொன்னதாகச் சொல்ல,

எடுபிடி: றோட்டில ஒரு குரங்கு நின்று ஆடினாலே நூறு சனம் வேடிக்கை பார்க்கும்.ஒரு இலட்சம் செம்மறி கூடி நின்று கூத்து நடாத்தினால் உலகமே சுத்தி நிண்டு புதிம் பார்க்கும்.கடைசியில் வேடிக்கை பார்த்தவன் தன்ரபாட்டில போடுவான். அதால ஒரு பயனும் வரப் போறேல்ல. கடைசில நீங்கள் முட்டாள் ஆகுறதுதான் மிச்சம்.

வாத்தியார்: அதுக்குத்தான் இப்ப நாங்கள் சூனியம் செய்யச் சொல்லுறம். சூனியம் செய்தால் சிங்கள் அழிஞ்சு போவான். அதுக்குப்பிறகு எங்கட ஆதிக்கம் தானே.

எடுபிடி: சட்டாம்பி, அன்றைய சைவக் குரவர் தொடங்கி இன்றைய வெளிநாட்டப் பாதிரிகள் வரைக்கும் பேராசான்கள் தொடங்கி மதியுரைஞர் வரைக்கும் சுயநலத்துக்காக வால் பிடிக்கிற முதுகெலும்பில்லாத பச்சோந்தி அரசியல்வாதிகள் தொடக்கம் இண்டைக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் வரைக்கும் என்ன செய்யினம்? அதிகாரத்தில இருக்கிறவனைப் பந்தம் பிடிச்சு அவன் செய்யுற முட்டாள் தனத்திற்கெல்லாம் புத்திசாலித்தனமான விளக்கம் கொடுத்துக் கொடுத்துக் கொண்டுதானே இருக்கினம். கடவுள் செய்த பிழையை நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சாம்பலாய் போனவன் ஓருத்தன். நீங்கள் எல்லாம் நெத்தியில கண்வைச்சு பொட்டுவிழும் எண்ட பயத்தில ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறியள். கடைசியில உங்கட தலைவர்களோட சேர்ந்து நீங்களும் அழியப் போறியள்.

வாத்தியார்: அதென்னண்டு? நாங்கள் படிச்சனாங்கள். அவைக்கு மதியுரைச்சுக் கொண்டுதானே இருக்கிறம். அவை கேக்காட்டி அது அவைக்குத்தானே அழிவு.

எடுபிடி: அதுசரி. அழிஞ்சவுடன அடுத்து வாற ஆளுக்கு வெட்கமில்லாமல் வால் பிடிப்பியள். முன்னுக்க நிக்கேக்க மட்டும் நீதான் சூரியத்தேவன், தீர்கதரிசி எண்டு உச்சி குளிரப் பணணுவியள். கொஞசம் தண்ணி உள்ளுக்க போனவுடன தனியப் பிடிச்சுக் கேட்டால் அவன் மொக்கன். ஒருதற்ற சொல்லும் கேளான் எண்டு கையைக் கழுவுவியள்.

வாத்தியார்: எங்கட வேலை செய்யுற வேலைக்கு விளக்கம் சொல்லுறதுதான். அதோட எங்கட அலுவல் சரி.

எடுபிடி: அதால வாற அழிவுக்கு நீங்கள் பொறுப்பில்லைத்தானே. முட்டாள்களின்ர வேலைக்கு புத்திசாலித்தனமான விளக்கம் சொல்லுவியள். அண்டைக்கு இத்தனை சைவக் குல யாவாரிமார்கள் இரக்கத்தக்கதாக நல்லூர் கோவிலுக்கு கற்பூரம் விக்க ராசா பட்டயம் கொடுத்துது சோனகருக்குதான். அவை இண்டை வரைக்கும் அதைச் செய்யினம். அந்த ராசாவுக்குப் புத்தியிருந்தது. அவனைச் சுத்தி மதியூகி மந்திரிமார் இருந்திச்சினம். அவை வழியைக் காட்டினபடியால் அந்தச்சனத்தை எங்கட சனமாய் நினைச்சு ராசா நீதி கொடுத்தான். அவன் நினைச்சிருந்தால் சில மணிநேரத்தில வெளியேறச்சொல்லி உடுத்த உடுப்போட நகை நட்டுக்களை காதில இருந்து புடுங்கிப்போட்டுக் கலைச்சிருக்கலாம். வீடுகொடுக்கிற ராசாவுக்கு கொள்ளி எடுத்தக் குடுக்கிற மந்திரிமாதிரி, கடைகெட்ட அயோக்கியன் ராஸ்கல்கள் எல்லாம் மதியுரைஞர் அரசியல் பிரிவுத்தலைவர் ஆய்வாளர் எண்டுசுத்தி நிண்டு கொண்டு ஆமாம் சாமி போட்டால் தலைவன் எப்படி உருப்படுவான்? தலைவனுக்கு ஒழுங்காப் புத்தி சொல்லியிருந்தால் இந்தளவு சனமும் அழியாமல் தப்பியிருக்கும்;. அதோட தலைவன் இண்டைக்கும் இருந்திருப்பான்.

பாருங்கள் குருசேவின் கோபம் எப்படிப்பட்டது என்பதை. உண்மையில் எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபமும் அதுதான். இந்த நாடகத்தில் நடித்த நாங்கள் அனைவருமே மிக உணர்ச்சிவசப்பட்டிருந்தோம். ஆரம்ப நாடகப் பயிற்சியின் போதும், இறுதிநாள் வரையும் அதே உணர்வும் கோபமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது. ஏறத்தாள இரண்டு மணிநேர நாடகம். நாடகத்தின் ஒவ்வொரு வரிகளையும் கடைசிவரை இரசித்தோம். அது எங்கள் வாழ்வாக நமது வரலாறாக இருந்ததே அதற்கு முக்கிய காரணம். ஒரு இனத்தை சாதியும் சாதியின் அரசியலை அந்த இனத்தின் அரசியலாகவும் முன்வைத்த இனம் தமிழருடையது. அதனை குருசேவ் அவர்கள் தனது பிரதியில் இயலுமானவரை அப்பட்டமாக சொல்லியுள்ளார். -எப்போதும் தான் எழுதுவதும் நினைப்பதும் அதே அர்த்தத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்னால் பூடகமாக ஒருபோதும் சொல்ல முடியாது. எனது கருத்தை நேரடியாக முன்வைப்பவன் நான்- எனச் சொல்லும் குருசேவின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிவார்கள். தாயகத்தில் ஏடிட்டோர்இயல் என்றாலும் சரி கியூறியஸ்.ஜியின் எழுத்துக்கள் என்றாலும் சரி. தனது கருத்து எப்போதும் நேரடியானது என்பதே அவர் கருத்து. நமது பழம்பெரும் இலக்கிய விமர்சகர்கள் சஞ்சிகையாளர்கள் போல் “இங்குள்ள பலர்’ “அவர்களில் சிலர்” “ஜெ என்ற எழுத்து நடிகை” என்று எழுதிவிட்டு நன்றாகக் குடுத்திருக்கிறேன் பார் எனச் சொல்லும் எழுத்தாளனல்ல நான் என்று தமாஷாகச் சொல்வார் குருசேவ். தாயகம் பத்திரிகைக்குப் பின் அல்லது புலிகள் அழிந்த பின் குருசேவ் சும்மா இருக்கிறார் என்றுதான் பலர் நினைத்தார்கள். ஒரு இனத்தின் வரலாற்றை அதன் கோரத்தை படம் போட்டுக் காட்டியிருக்கிறார். நாம் ஒரு நாடகம் வேண்டும் எனக் கேட்டபோது அவர் மறுக்காமல் நான் நிறையச் சொல்ல இருக்கிறது. செய்வேன் என்றுதான் சொன்னார். ஒரு வருடத்தில் அதனை இயக்கி மேடையேற்றிவிட்டார்.

2.

நாடகத்தின் இரண்டாம் கட்டம் சூனியம் செய்யும் ஐயர், எடுபிடி, பாணருடன் தொடங்குகிறது. வாத்தியார் கணக்கு பக்திப் பரவசத்தில் சுற்றி நிற்கிறார்கள். சூனிய ஐயர் வாடா கறுப்பா வந்திடு வந்திடு என்று உரு ஏற்றுகிறார். பேய் ஒவ்வொருவரிலும் மாறி மாறி ஏறுகிறது. முதலில் பேய் வாத்தியாரில் ஏறுகிறது.

ஐயர்:  யாரடா நீ ஆரடா சொல்லடா உன் பேரடா

என்று வேப்பிலை அடிக்க உடுக்கு அடியில் பேய் கலையாடியவாத்தியார்

வாத்தியார்: நான்; பருத்தித்துறையான்

அடிதடி:  அரோகரர்…  ரமா ராமா ராமநாதா அரோகரா …

கணக்கு:  சாமான் விசயம் தெரிஞ்சாள் மாதிரித்தான் கிடக்குது நாங்கள் இனி உதுக்குப் பின்னாலதான்

அடிதடி: என்னடா இது காரில போற பெரியாக்கள் மாதிரி கையைக் காட்டிக் கொண்டு போகுது.

எடுபிடி: சிங்கன்ர ஆக்கள் அதைத் தேரில வைச்சு இழுத்தவை. அந்தப் பழக்கத்தில் தான்.

ஐயர்: போடா நெருப்பா பொங்கி எழுந்திடு

போராயுதம் கொண்டு சிங்கனைக் கொண்டிடு.

வாத்தியார்: நோ… நோ… நாங்கள் சமாதானமாய் இருக்கோணும். சண்டைபிடிக்கக் கூடாது.

கணக்கு: ஐயா என்ன இது போய்க் கொண்டிட்டு வா என்று சொன்னால் சமாதானம் பேசிக் கொண்டடிருக்கு. அந்நியன் விட்டுட்டுப் போகேக்க எங்கட உரித்தைப் பிரிச்சு வாங்காமல் நாங்கள் எல்லாம் ஒண்டு  சண்டைபிடிக்கக் கூடாது எண்டு எங்களுக்குத் துரோகம் செய்யுது. ஐயா இதைக் கலையுங்கோ.

இப்படி மாவிட்டபுரத்தான் ,ஊர்காவற்துறையான், நிச்சாமத்தான், காங்கேயன்துறையான், தெல்லிப்பளையான், வட்டுக்கோட்டையான் என்று வாத்தியாரிலும் கணக்கிலும் பேய் ஏறுகிறது. எல்லாவற்றிகும் அடிதடி அரோகராப் போடுவதும் பின்பு ஆள்மாறி மாறித் துரத்துவதுமாக நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

கடைசியில் பேய் ஏறிற்pச் சரிவரவில்லை என்று பில்லியை வரவழைக்கிறார் ஐயா. பில்லி அடிதடியில் டீறுகிறது. ஏல்லோர் முகத்திலும் சந்தோசம் களைகட்ட பில்லியை அனுப்புகிறார்கள். பில்லி போய் அடித்துடைக்கிறது. பல வெற்றிகள். பில்லி பிள்ளைகளைப் பலி கேட்கிறது. பாணர் குழம்புகிறார். கணக்கும் வாத்தியாரும் சந்தோசம் பொங்க குதூகலிக்கிறார்கள். தமது பிள்ளைகள் வெளிநாட்டில் தானே யார் பிள்ளையைப் பில்லி பலியெடுத்தால் என்னெண்டு நினைப்பு அவர்களுக்கு. ஒரு கட்டத்தில் பில்லி பின்வாங்குகிறது. நல்லா உள்ளுக்க வரவிட்டுட்டு அடிக்கப்போகுது என்றும் விசயமில்லாமல் திரும்பி வராது பில்லி என்றும் பெரிசாப்pளான் ஏதோ வைத்திருக்கிறது என்றும் வாத்தியாரும் கணக்கும் சமாதானப்படுகிறார்கள். பில்லி வெள்ளைக் கொடியோடு புத்தம் சரணம் கச்சாமி என்று போகிறது. தலையில் கைவைத்து  சனியன் என்ன புத்த மதத்திற்கு மாறிவிட்டதா என்று கணக்கும் வாத்தியும் புலம்ப எடுடிபிடி டேய் அது வந்து சிங்களமில்லை இங்கிலீஸ். ஆமி என்னை கச் பண்ணு என்று சொல்லி சரண் அடையப் போகுது என்று நக்கலடிக்கிறார். கடைசியில் பில்லி செத்துப் போக , கணக்கும் வாத்தியாருக்குள்ளும் சண்டை வந்து பிரிகிறார்கள். செத்ததை வெளியில் சொல்ல வேணும் என்கிறார் வாத்தியார். சொல்லக் கூடாது சொன்னால் துரோகம் என்கிறார் கணக்கு. பின் வட்டுக் கோட்டை- நாடுகடந்த அரசு என்று பிளவு. பின் சரத்பொன்சேகா சம்பந்தன் பேய்கள் கிளம்பிவருகிறது ஆள்மாறி மாறித் துரோகிகளாகிறார்கள். ஒருவரை ஒருவர் துரோகி என்கிறார்கள். இந்தத் துரோக்கிகள் கத்தல் பெரிய நாய் கூட்டம் குலைப்பதில் முடிகிறது. இதுவரை அரேகரா போட்டுக் கொண்டிருந்த அடிதடி களைத்துப்போனது.

உண்மையில் இந்த நாடகத்தின்  உருவாக்கத்தில் மிகப் பொரும் பங்காற்றியவர் பேராதரன். எம்முடன் அயராது உடுக்கு அடித்து எம்மை ஆடவைத்து நாடகத்திற்கு அதிகளவு மெருகூட்டியவர் அவர். மேலும் இந்த நாடகத்திற்கு ஒத்துழைப்புத் தந்த நண்பர்களுக்கும் மற்றும் திரும்பத்திரும்ப விளம்பரம் போட்டஇணையத்தளங்களுக்கும் பேஸ்புக் நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.

படங்கள்: ஊரவன்

துயரில் இணைதல்…
ஒஸ்லோவில் நடைபெற இருந்த கொட்டியாரம் நூல் அறிமுக நிகழ்வு, நோர்வேயில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல் அசம்பாவிதத்தின் துயரினை முன்நிறுத்தி தவிர்க்கப்பட்டுள்ளது என்பதனை நண்பர்களுக்கு அறியத் தருகிறோம். நுஸல் அறிமுகத்தின் மறுதிகதி பின்னர் அறிவிக்கப்படும்.

கொட்டியாரம்: இலக்கியமரபு.
கொட்டியாரம்: இலக்கியமரபு.

‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்’
நூல் வெளியீடு:

கடந்த 03-07-2011 ஞாயிறு மாலை 3மணியளவில் தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வானது  பாரிசின் மையப்பகுதியான லாச்சப்பல் எனும் இடத்தில் நடைபெற்றது.  பிரான்சில் இயங்கிவரும் ‘இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியின் அமைப்பாளர்களாலும், அவ்வமைப்பின் ஆதரவாளர்களின் பாரிய ஒத்துழைப்பின் மூலமாகவே நூல்வெளியீட்டு நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பலர் வருகைதந்திருந்தனர். பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் 25 வருடத்திற்கும் மேலான புகழிடவாழ்வின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை அரசாங்கத்தின் மந்திரி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்தது. பல சிங்கள சகோதர, சகோதரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதானது வரும் காலங்களில் சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையேயான உறுவுகளின் நெருக்கத்தை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் இதைக்கருதக்கூடியதாக இருக்கின்றது. அதற்கான  ஓர் தொடக்கப்புள்ளியை பாரிஸ் மையத்தில் பதியவைத்த சம்பவமானது  வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வாகவே இலங்கைத் தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினராகிய நாம் கருதுகின்றோம்.

இந்நிகழ்வின்  வரவேற்புரையை விஜி அவர்கள் மேற்கொண்டார். சாதியம் குறித்தும், சாதியப் பாகுபாடுகள், போராட்டங்கள் குறித்தும் பல நூல்கள்  முன்பு பலரால் எழுதப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இருப்பினும்  தோழர் யோகரட்ணத்தால் எழுதப்பட்ட ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூலானது  இதுவரை எழுதப்பட்டவைகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளுடன் எழுதப்பட்டிருப்பதை வாசகர்கள் நிச்சயமாக அறிந்து கொள்வார்கள். அந்தவகையில் இந்நூல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். என விஜி அவர்கள் தனது உரையை ஆரம்பித்து, சிறப்புவிருந்தினராக வருகைதந்த  சமூக இணக்கத்திற்கும் தேசிய மொழி அமுலாக்கத்திற்குமான மதிப்பிற்குரிய அமைச்சர் வாசுதேவநாணயக்காரா அவர்களை வரவேற்றதுடன் இந்நிகழ்விற்காக பிரத்தியேகமான அவரது  சமூகமளிப்பிற்கு நன்றியையும் தெரிவித்தார். அத்தோடு இந்நிகழ்விற்காக பிறநாடுகளிலிருந்து வருகைதந்தவர்களையும், சிங்கள சகோதர, சகோதரிகைகளையும் வரவேற்றதுடன் மற்றும் வருகைதந்த அனைவரையும் வரவேற்று  நிகழ்வை தொடர்ந்து நடாத்துவதற்கான தலைமையை தேவதாசன் அவர்களிடம் ஒப்படைத்து தனதுரையை முடித்துக்கொண்டார்.

தேவதாசன் அவர்கள் தனது தலைமை உரையில் வட இலங்கையில் நிகழ்ந்த சாதியப்போராட்டங்களின் பின்னணிகளையும் அதற்கு இலங்கையின் இடதுசாரிகளின் பங்களிப்புகள் குறித்தும் பேசினார். அந்த வரலாற்று உண்மைகளை மனதில் கொண்டுதான் தோழர் வாசுதேவநாணயக்காரா அவர்கள் இங்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்தோடு தோழர் யோகரட்ணம் அவர்களின் நிண்ட கால நண்பராக வாசுதேவநாணயக்காரா இருந்துவந்துள்ளதும் அவரது வருகைக்கான முக்கியத்துவமாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து தேவதாசன் அவர்கள் பேசும்போது எமது சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியத்தின் தோற்றுவாய்க்கான இந்து மதத்தின் பின்னணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அம்பேத்கர்,பெரியார் போன்றவர்களின் சிந்தனைகள் குறித்துப் பேசியதோடு அதற்கான சமூக இயக்கங்களின் அவசியம் குறித்தும் உரையாற்றினார். தமிழத்தேசிய அரசியல் தலைமைகள் தலித் சமூகத்தின் மேம்பாட்டிற்கு விரோதமாகவே செயல்பட்டு வந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார். தமிழர்களின் தானைத் தலைவர் என புகழந்து போற்றப்பட்டவர் திரு.செல்வநாயகம் அவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. தலித்துக்கள் மாவட்டபுர கந்தசுவாமி கோவில் பிரவேச உரிமைக்காக  போராடியபோது பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்ந்தது. அது குறித்து தலித் மக்கள் தானைத் தலைவரிடம்  உதவிகோரி முறையிட்டபோது அதுவந்து பாருங்கோ நான் வந்து ஒரு கிறிஸ்தவனாக இருப்பதால் இந்து மத விவகாரத்தில் என்னால் தலையிட முடியாது என வாதம் புரிந்தவர். இது  ஓர் உதாரணம் மட்டுமே இதுபோல் தொடர்ச்சியாக தமிழ்த் ‘தேசியத்தலைமகள்’ தலித் மக்களுக்கும் அவர்களது சமூக மேம்பாட்டிற்கும் விரோதமாகவே செயல் பட்டு வந்தவர்கள் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

அடுத்ததாக நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் வாசுதேவநாணயக்காராவிடமிருந்து முதலாவது பிரதியை திரு.திருமதி சிறீபாஸ்கரன் தொமா அவர்கள் பெற்றுக் கொண்டனர். இரண்டாவதாக ஞானவடிவேல் அவர்களும், அதைத்தொடர்ந்து குமாரகுலசிங்கம் அவாகளும் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து அனைவரும் வாசுதேவநாணயக்காராவிடமிருந்து  நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

அடுத்ததாக உரையாற்றிய இராகவன் அவர்கள் இந்நூலில் எழுத்துப்பிழைகள் அதிகமாக இருக்கின்றது. அத்தோடு ஓர் தகவல் பிழையும் இருக்கின்றது என்றார். தகவல்பிழையானது யாழ்ப்பாணத்தில் றோகண விஜவீரா கலந்து கொண்ட கூட்டத்தில் திரு அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதனும்,அவரைச்சேர்ந்தவர்களும் கல்லால் எறிந்து றோகண விஜயவீர அவர்களை காயப்படுத்தியது சம்பந்தமாக கூறப்பட்டது தகவல் பிழை எனக் குறிப்பிட்டார். மற்றும்படி இந்நூலில் உள்ள சிறப்பம்சமாக தான் காண்பது இந்நூலானது எந்தஒரு அரசியல் பின்னணியையும் முன்வைக்காத தன்மை என்றார். தோழர்களான செந்தில்வேல் அவர்களும் ரவீந்திரன் அவர்களும் எழுதிய ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘ என்ற நூலானது படிக்கும்போதே அரசியல் சார்புடன் எழுதப்பட்டுள்ளதை உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் தோழர் யோகரட்ணத்தால் எழுதப்பட்ட ‘தீணடாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் என்ற நூல் எவ்வித அரசியல் பின்னணியும் அற்றதென்பது ஓர் சிறப்பம்சம் என்றே கூறவேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து எம்.ஆர்.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். எம்மத்தியில் பேசப்பட்டுவந்த, இன்றும்  தொடர்ந்து பேசப்பட்டுவரும் தமிழ் தேசிய அரசியலின் அபாயங்கள் குறித்துப் பேசினார். பேசப்பட்டுவரும் தமிழ்தேசிய அரசியலானது  தனக்குள் இருக்கும் பல்வேறு இனங்களை, குறிப்பாக முஸ்லிம் மக்கள், மலையக மக்கள்,தலித் மக்கள், கிழக்குமாகாணமக்கள் போன்ற பிரிவினர்களை தொடர்ந்தும் ஒடுக்குவதிலும் ,ஏமாற்றுவதிலுமே கருசனையாக இருந்து வருகின்றது. மேற்குறிப்பிட்ட அனைத்துப் பிரிவினர்களையும் அவர்களின் சமூக பொருளாதார அரசியலில் மேம்பாட்டிற்கும் விரோதமாகவே தமிழ்த் தேசிய அரசியல் செயல்பட்டு வருகின்றது. இது வந்து ஒரு பயங்கரவாத அரசியலாக உள்ளது  என்பது உண்மைதான். இதை தோழர் டானியல் அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் வந்துள்ளார். தோழர் அ.மார்க்ஸ் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘கே.டானியலின் கடிதங்கள்‘ என்ற நூலை வாசித்தவர்கள் அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பேசிய எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள் தனக்கு யாழ்ப்பாணத்து சாதிமுறைகள் பற்றியும்,அங்கு நிலவும் சாதியப்பாகுபாடுகள் குறித்தும் பெரிதாக தெரியாது எனக்கூறினார். கிழக்குமாகணத்திலும் சாதிப்பாகுபாடுகள் பெரிதாக இருப்பதில்லை எனக்குறிப்பிட்டார். முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் சாதியம் குறித்து பேசியபோது சிலபாகுபாடுகள்முஸ்லிம் மக்கள் மத்தியிலும்  நிலவுகின்றதுதான். இருந்தபோதும் முஸ்லிம் மதமானது சாதியப்பாகுபாடுகளுக்கு எதிரான மதமாக இருப்பதால் முஸ்லிம் பண்பாடு,கலாச்சாரத்துடன் சாதியம் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனக்குறிப்பிட்டார்.

அடுத்ததாக சுவிசில் இருந்து வருகைதந்த திருமதி. பிரபா லோலன் அவர்கள் உரையாற்றினார். ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ நூலில் உள்ள விடயங்களை அறிகின்றபோது நாம் கேள்விப்படாத பலவிடயங்களை இந்நூலூடாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. உலகத்திலே நிலவுகின்ற ஆதிக்க அதிகாரங்கள் யாவும் பல்வேறு முயற்சிகளின் ஊடாக தளர்ந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எம்மத்தியில் நிலவும் சாதியம் மட்டுமே தளர்ந்து போவதற்கான எவ்வித வாய்ப்புகளுமற்ற ஓர் சிந்தனை முறையாக உள்ளது. மதம் மாறிவிடுதாலும் சாதியத்தில் எவ்வித மாற்றங்களும் நிகழ்ந்து விடாது என்றே நான் கருதுகின்றேன். என்று கூறியதுடன் நூலில் தோழர் யோகரட்ணம் அவர்கள் பெளத்த மதம் மாறியதற்கான செய்திகளையும், காரணங்களையும் விபரித்திருந்தபோதும் பிற்பாடு அதை தொடர முடியாது போனதற்கான காரணங்களை நூல் ஆசிரியர் விபரிக்காதது ஓர் குறைபாடாக தான் கருதுவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடத்துகின்ற தலைவர் தேவதாசன் அவர்களுக்கும் மற்றும் இந்நிகழ்விற்கு கலந்து கொள்ள வந்திருக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம். இன்று வெளியிட்டுள்ள தோழர் யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்டுள்ள ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் ‘ எனும் நூல் குறித்துப்பேசுவதற்கு முன்பாக இரண்டு நிமிடம் நான் வேறு சில விடயம் குறித்தும் பேசவேண்டியுள்ளது. எனக்கூறியவாறு சோபாசக்தி அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். இந்த லாச்சப்பல் என்ற இடத்தில பாருங்கோ உருட்டி உருட்டி அடிச்சவர்கள் புலிகள். நான்,தங்கம்,கலைச்செல்வன் இன்னும் பலரும் புலிகளிடம் அடிவாங்கியவர்கள். அப்படிப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமான இந்த லாச்சப்பலில்தான் நாம் இன்று ஒரு சிங்கள அரசாங்க அமைச்சரை அழைத்து இந்த நூல்வெளியீட்டு நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.  எமது புகலிட வாழ்க்கை வரலாற்றில் என்றுமே நடைபெறாத ஓர் சம்பவம் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. என்று கூறி ஒடுக்குமுறை என்பது எங்கு நடந்தாலும் எப்படி நடந்தாலும் அதைகண்டித்தே ஆகவேண்டும். தலித்மேம்பாட்டு முன்னணியானது ராஜபக்சவிற்கு நன்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கமுடியாது மிக மோசமான ஒடுக்குமுறையை மேற்கொண்டு வரும் இலங்கை அரசைகண்டித்தே ஆகவேண்டும். என்று மிக விரிவாகப்பேசி நூல் குறித்த அபிப்பிராயத்தையும்  கூறத்தொடங்கினார். நான் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் இந்நூல் மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது. வாசிப்பிற்கு சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது.  சலிப்பின்றி தொடர்ந்து வாசிக்கக் கூடியவகையில் எழுதப்பட்டுள்ளது. மேலும் நூலின் உள்ளடக்கங்கள் குறித்து பேசும்போது தோழர் யோகரட்ணம் அவர்கள் இந்நூலில் வலியுறுத்துகிறார், இலங்கையில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சிக்காலத்தில்தான் தலித் மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றார்கள் என்று. அது மிகத் தவறானது. எந்தவொரு சிங்கள அரசும் தலித் மக்களுக்கு உதவவில்லை. தலித் மக்களுக்கு ஓரளவிற்காவது பயன்படக்கூடிய சமூக குறைபாட்டு ஓழிப்புச்சட்டமே தமிழ் அரசுக்கட்சியின் தயவால்தான் பெறப்பட்டது. எனவே சிங்கள அரசு எதுவுமே தலித் மக்களின் மேம்பாட்டிற்கு உதவவில்லை. தலித் மக்கள் பெற்ற உரி்மையெல்லாம் அவர்களது போராட்டத்தின் பயனாக கிடைத்தவை என்பதுதான் உண்மை என விரிவாகப் பேசினார்.

நீங்கள் நன்றி எல்லாம் சொல்லக்கூடாது என சோபாசக்தியால் தலித் சமூகமேம்பாட்டு முன்னணிக்கு  வழங்கிய ஆலோசனைக்கு தேவதாசன் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்: சோபாசக்தி அவர்களே தனது பேச்சின் ஆரம்பத்தில் கூறினார் லாச்சப்பலில் எவ்வாறு நிலமை இருந்தது என்று.(உருட்டி உருட்டி புலிகள் அடித்ததை) அப்படியான இடத்தில் இன்று ஒரு சிங்கள அமைச்சரை அழைத்து கூட்டம் நடத்தப்படுகின்றதென்றும், இதுவந்து இதுவரையான  புகலிட வராற்றில் நடைபெறாத சம்பவம் என்பதையும் அவரே கூறியிருந்தார். எனவே இதுபோன்ற ஓர் மாற்றம் நிகழ்ந்ததற்கும்,அச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததற்கும் தான் நாம் நன்றி சொல்லவேண்டும் என்று கருதுகின்றோம். இது வந்து ஒரு மனிதனுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகளில் ஒன்று என்பது எமது அபிப்பிராயமாகவும் உள்ளது. என சோபாசக்தியின் ஆலோசனைக்கு தேவதாசனால் பதிலளிக்கப்பட்டது.

அடுத்ததாக எமது அழைப்பை ஏற்று வருகைதந்து சிறப்பித்த அமைச்சர் வாசுதேவநாணயக்காரா அவர்கள் உரையாற்றினார். அவர் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் கலந்து மிக வேகமாகப் பேசப் பேசப்பேச அனைத்தையும் மிக நேர்த்தியாகவும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியாவாறும் தமிழில் மொழிமாற்றிக் கொண்டிருந்தார் நண்பர் சந்தோஸ் அவர்கள்.

15வருடத்திற்கு முன்பும் நான் இந்த லாச்சப்பலில் நடைபெற்ற ஓர் சந்திப்பில் தோழர் யோகரட்ணத்துடன் கலந்துகொண்டிருந்தது தற்போது ஞாபகத்திற்கு வருகின்றது. இங்கு பேசியவர்களிடமிருந்து அரசுமீதான பல்வேறு விமர்சனங்கள் உள்ளதை நான் உணருகின்றேன். நான் இந்தச் சந்திப்பில் பேசவேண்டும் என நினைத்திருந்த விடயத்தைவிட இங்கு பேசியவர்களின் பேச்சுக்களிலிருந்து பேசலாம் என ஆசைப்படுகின்றேன். என தனது உரையை அமைச்சர் அவர்கள் ஆரம்பித்தார். நாம்  இனவாதத்திற்கும், சாதியப் பாகுபாட்டிற்கும் எதிரானவர்கள். சாதியம் குறித்தெல்லாம் காலம் காலமாக பேசப்பட்டுத்தான் வருகின்றது. அம்பேத்கர் அவர்கள் சாதியத்திற்கு எதிராக எவ்வளவுதான் அரசியல் யாப்புகளை தாயரித்தபோதும் இந்தியாவில் சாதியத்தின் கொடுமை அகன்றுவிடவில்லை. இதுவந்து சட்டங்கள் இயற்றுவதன் ஊடாக மாற்றக்கூடியதல்ல. சாதியம் குறித்த இதயபூர்வமான மாற்றங்கள் மனிதர்களிடம் ஏற்படவேண்டும்.

இவ்வாறான மனமாற்றங்கள் இந்தியாவிலுள்ள கேரளத்தில்  பலவிதத்தில் சாத்தியப்பட்டுள்ளது.இதற்கு பின்னணியாக இடதுசாரிகளின் அரசியல்  நடவடிக்கைகள் தான் காரணம் எனக்கூறலாம். இலங்கையில் மொழி அடையாளமும் சாதியடையாளமும் இலங்கையில் பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றது.மொழியுடனான அடையாளம் பேணப்படாது போனால் தமது இனம் அழிந்துவிடும் என்பதான கருத்தும் நிலவி வருகின்றது. இவ்வாறான உணர்வு சிங்கள மக்கள் மத்தியிலும் ஆழமாக பதிந்துள்ளது.

அனைத்து இன மக்களும் பிறமொழிகள் மீதான மதிப்பை உணர்ந்து கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் அரசை வற்புறுத்தி வருகின்றோம். இது குறித்து வாசுதேவ நாணயக்காரா அவர்கள் தொடர்ந்து பேசுகையில், தமிழை சிங்கள மாணவர்களும் சிங்களத்தை தமிழ் மாணவர்களும் கற்பதற்கு மிகவும் ஆவலாகவே உள்ளனர். அதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கப்படவேண்டும் இதுதான் எமக்கு மிக சிரமமாக உள்ளது. நானும் எமது அரசாங்கமும் இவ்வாறான முயற்சியை விரும்பினாலும் இதற்கு எதிரான அரசியல் சக்திகளும் செயல்படுகின்றது. சில சிங்கள் பெளத்தவாத  சக்திகளும் இதற்கான எதிர்ப்பை   தெரிவித்தே வருகின்றது

தமிழ் மக்கள் பகுதியிலும் இதற்கு எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றது. இருந்தபோதும் அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து இப்பணியை நாம் மேற்கொள்வோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் தேவதாசன் பேசியதிலிருந்து தான் பல விசயங்களை தெரிந்து கொண்டதாக கூறினார். சமூகத்தில் அரசியல் பிரச்சனை ,சமூகப்பிரச்சனை என இரண்டு பிரச்சனைகள் இருந்து வருகின்றது. அரசியல் பிரச்சனையானது சமூகப்பிரச்சனைகளை கண்டுகொள்ளாது கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியமானது சமூக இயக்கங்களை ஒடுக்கிச் சின்னாபின்னமாக்கியதை தேவதாசன் சுட்டிக்காட்டிப்  பேசினார். உண்மைதான் மீண்டும் விட்ட இடத்திலிருந்து சமூக இயக்கங்களை  கட்டி எழுப்பவேண்டும். வடக்குத் தமிழ்த் தேசியவாதிகள் சாதியப்பிரச்சனையை எவ்வாறு அலட்சியப் படுத்தினார்களோ அதேபோல் இடதுசாரிகளின் அரசியல் செயல்பாடுகளையும் தமது தமிழ்த் தேசிய அரசியலுக்கு விரோதமாகவே கருதினார்கள். அவர்கள் மூடி அணைக்க முயன்ற சமூக   இயக்கமானது மீண்டும் துளிர்விட்டு பிரான்சு தேசத்திலுள்ள லாச்சப்பல் நகரத்தில் ஒருங்கிணைந்திருப்பதைக்கண்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். எனது பிரான்ஸ் பயணம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் வினாவியபோது நான் கூறினேன், காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான பிரதிநிதிகளின் அவசிம் குறித்து பேசுவதோடு சர்வதேச ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடுகள் குறித்தும் அறிந்து வரப்போகின்றேன் எனக் கூறினேன். எனவே தான் இறுதியாக ஓர்விடயத்தைக் கூறி எனதுரையை முடித்துக்கொள்கின்றேன். அதாவது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் எமது சமூ இயக்கப்போராட்டங்களையும் இணைத்துச் செயல்படவேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்பதோடு உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் நீங்கள் கேட்கலாம்  எனக்கூறி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா அவர்கள் தனதுரையை முடித்துக்கொண்டார்.

அடுத்ததாக ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்டநாட்களும்‘ எனும் நூலை எழுதிய தோழர் யோகரட்ணம் அவர்கள்  ஏற்புரையாற்றினார்.சபை வணக்கத்தைத் தொடர்ந்து இத்தருணத்தில் எனது பெற்றோர்களையும் கொல்லப்பட்ட எனது நண்பனும், சகோதரனுமான மனிதநேயன் விநோதனையும் நினைக்கும்போது எனது மனம் குலைந்து போகின்றது என சற்றுக் குரல் தளர்ந்த நிலையில் தனது உரையை ஆரம்பித்தார்.

இந்த மண்டபத்திலே நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் எனது நூலை அறிமுகம் செய்து வைத்த நண்பர் முரளி அவர்களுக்கு நான் இத்தருணத்தில் நன்றி சொல்ல ஆசைப்படுகின்றேன். முன்பு பேசிய ராகவனது கேள்விக்கும் திருமதி பிரபா லோலனது கேள்விக்கும் பதிலளித்ததன் பிற்பாடு எனது உரையை தொடரலாம் எனக் கருதுகின்றேன். நூலில் நான் குறிப்பிட்டுள்ள றோகணவிஜயவீரா சம்பந்தப்பட்ட விடயத்தில் ராகவன் தெரிவித்ததுபோல் எவ்வித தகவல் பிழையும் இல்லை. நான் அச்சந்தர்ப்பத்தில் அங்கு நின்றவன் அச்சம்பவம் முற்றிலும் உண்மையானது. அதற்கான சாட்சிகளாக குஞ்சன் என அழைக்கப்படுபவர் தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றார். சார்ஜன் குணரட்ணா அவர்களும் எனது அருகில் நின்றவர். இது நான் அருகில் இருந்து பார்த்த  உண்மைச் சம்பவம். பிரபா அவர்கள் கேட்டுக் கொண்டது பெளத்த மதத்தில் இணைந்ததற்கான தகவல்கள் அதிகமாக இருப்பதுபோல் பெளத்த மதத்தை தொடர முடியாமல் போனதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்பது. உண்மை தான் என்னால் கூட அது குறித்த காரணங்களை விளக்கமுடியாமலேயே இருக்கின்றது என விமர்சனங்களுக்காகன  தனது பதிலை முன்வைத்தார்.

இந்நூல் வெளிவருவதற்கான பெரும்பங்கினை ஆற்றிய விஜிக்கும் அசுராவிற்கும்  நான் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். உண்மையில் இந்நூல் வெளியீட்டு வைபவத்திற்கு நான் எஸ்ரி.பண்டாரநாயக்கா அவர்களைத்தான் அழைப்பதற்கு பெரிதும் விரும்பினேன். காரணம் நிச்சமாத்தில் நடைபெற்ற சாதிக்கலவரத்தின்போது தெற்கிலிருந்து வருகைதந்து சம்பவத்தை நேரில் கேட்டு அறிந்ததோடு, தலித் சமூகத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டவர். ஆனால் முதுமை காரணமாக அவரால் பிரயாணம் செய்யமுடியாதா காரணத்தாலேயே நான் சகோதரன் வாசுவை அழைத்தேன். நிச்சாமக் கலவரம் குறித்து எவ்வித கருசனையும் அற்று செயல்பட்டவர் அத்தொகுதியின் எம்.பியான அமிர்தலிங்கம் அவர்கள் என்பதை வரலாறு அறியும்.  இந்த நூலில் நான் எந்தவித கற்பனைச் சம்பவங்களையும் பதிவுசெய்யவில்லை. அதுமட்டுமல்லாது எந்தவித அரசியல் பின்னணியும், அரசியல் நோக்கமும்  இல்லாத ஓர் பதிவு என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பதோடு நூலில் எழுதப்பட்ட சில பகுதிகளையும் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார். வழமையாகவே தோழர் யோகரட்ணம் அவர்கள் பேசத்தொடங்கினால் ஒரு மணித்தியாலத்துக்கு குறையாமல் பேசக்கூடிய ஆற்றல் உடையவர். ஆனால் இந்த நிகழ்வில்தான் அவர் மிக,மிகக் குறைந்த நேரத்தில்  பேசியது.

அடுத்ததாக நிகழ்விற்கு சமூக அளித்தவர்களுக்கும், நிகழ்விற்கு பல வகையிலும் உதவியவர்களுக்கும் சுந்தரலிங்கம் (தங்கம்) அவர்கள்  நன்றி கூறினார். அதைத்தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது. இடதுசாரிகளின் குறைபாடுகள் குறித்து சோபாசக்தி பேசியது தவறானது என்பதோடு இடதுசாரிகள் ஆற்றிய பணிகள் குறித்து தோழர் வி.ரி இளங்கோ அவர்கள் சில தகவல்களை குறிப்பிட்டு பேசினார்.

அரசை விமர்சித்து செயல்படும் இணையம் ஒன்றை அரசு தடைசெய்ததானது ஓர்  ஜனநாயக விரோதமாக இருக்காதா என   லக்சுமி (உயிர்நிழல்)அவர்கள் வாசுதேவநாணயக்காராவை நோக்கி கேள்வி எழுப்பினார். நீங்கள் குறிப்பிடும் இணையம் பற்றிய தகவல் தான் அறியவில்லை என்றும் இருந்தபோதும் தொடர்ந்தும் பல அரச எதிர்ப்பு இணையங்கள் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் இணையத்திற்கு அவ்வாறு ஏதும் நடந்திருந்தால் அது பாதுகாப்பு இலாகாவுடன் சம்பந்தப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என வாசுதேவநாணயக்காரா அவர்கள் பதிலளித்தார்.

அவசர கால நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை ராகவன் அவர்கள் கேட்டார்.  அதற்கும் பாதுகாப்பு இலாகாவும்,வேறு அரசியல் பிரிவினரின் இணக்கப்பாடும் இல்லாததன் காரணமாகவே அவசரகால நீடிப்பிற்கு காரணம் எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

சினில் சாந்த என்ற சிங்கள பார்வையாளரும் உரையாடலில் பங்குபற்றினார். வாசுதேவநாணயக்காராவின் உடல் நிலை காரணமாகவும், நேரம் போதாமையாலும் உரையாடல் நீண்டநேரம் நடைபெற முடியாது போய்விட்டது.

இத்தருணத்தில் இந்நூல் வெளிவருவதற்கு சிரமம்பாராது பெரும் பங்களிப்பு நல்கிய தோழர் நீலகண்டனையும் ,அமுதாவையும் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

-இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணி-

மேலதிக தகவலும் படங்களும்:

http://www.thuuu.net

நாடகம்:
ஜோர்ஜ்  இ. குருஷ்சேவின்

“Killலி சூனியம்”

York Wood Library  Theatre.

1785 Finch Av. West.

Toronto – Ont

M3N 1M6

August 6th @ 6pm

தொடர்புகளுக்கு:-

thayagamcanada@yahoo.com

Matrathu@hotmail.com